எமது கலலுரியின் 137 வருட கால வரலாற்றில் முதன்முதலாக தேசிய மட்ட பாடசாலைகள்
மெய்வன்மை தடகளப் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வெல்லப்படடுள்ளது. கொழும்பு சுகததாச
சர்வதேச விளையாட்டு மைதானத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற போட்டிகளில்
விக்ரோறியாக் கல்லுரி வீரர்கள் 9 தனி நிகழ்ச்சிகளிலும் ஒரு அஞ்சலோட்ட
நிகழ்ச்சியிலும் மாகாண மட்ட வெற்றிகளுடன் பங்குபற்றியிருந்தனர். இவர்களில்
செல்வி.ரஜிதா பாலசிங்கம் 19வயதுப் பிரிவில் ஈட்டி எறிதல்(Javelin throw)
நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை தேசிய நிலையில் வென்று வெள்ளிப்பதக்கத்தை (silver
medal)பெற்றுள்ளார். மாகாண மட்ட போட்டிகளின் போது 1ம் இடத்தை இவர் பெற்றதுடன் சாதனை
வீரராகவும்(record Breaker) தெரிவு செய்யப்பட்டவராவார். இவரது வெற்றியால் கல்லுரிச்
சமூகம் பெருமகிழ்ச்சியடைந்துள்ளது.