Saturday, 30 November 2013

Colors Night - 2013

தேசிய  மட்டத்தில்  பாடசாலைகளுக்கிடையில்  நடைபெற்ற  மெய்வன்மைப்  போட்டிகளில்  வெற்றி  பெற்ற  வீர வீராங்கனைகளை  கௌரவிக்கும்  ”வர்ண  இரவுகள்”   நிகழ்வு  (Colors Night)  சென்ற  வியாழக்கிழமை  கோப்பாய்  தேசிய கல்வியியற்  கல்லூரி  மண்டபத்தில்  வட  மாகாணக்  கல்வியமைச்சர்  திரு.த.குருகுலராஜா  தலைமையில் நடைபெற்றது.  வட  மாகாண  முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஸ்வரன்  அவர்கள்  பிரதம  அதிதியாகக்  கலந்துகொண்டார்.  எமது  கல்லூரியிலிருந்து  19  வயதுப்  பெண்கள்  பிரிவில்  செல்வி.பா.றஜிதா  ஈட்டி  எறிதல்  நிகழ்ச்சியில்  தேசிய  ரீதியில்  இரண்டாம்  இடம்  பெற்றமைக்காகவும்  பயிற்றுநர்  விக்ரோறியன்  திரு.ந.சிவரூபன்  இவ் வீராங்கனைக்கான  பயிற்சிகளை  வழங்கியமைக்காகவும்  பதக்கம்  அணிவித்து  பணப்பரிசு  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.
 

Wednesday, 27 November 2013

ஆண்டிறுதிப் பரீட்சைகள் - 2013

தரம் 6ஆம் வகுப்பு முதல் தரம் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டிறுதிப் பரீட்சைகள் தற்சமயம் நடைபெற்றுவருகின்றன. தரம் 9, தரம் 11 ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகள் வடமாகாண கல்வியமைச்சினாலும் தரம் 6,7,8,10 என்பவற்றிற்கான பரீட்சைகள் வட மாகாணக் கல்வித் திணைக்களத்தினாலும் உயர்தர வகுப்புக்களுக்கான பரீட்சைகள் தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தினாலும் நடாத்தப்படுகின்றன. எதிர்வரும் 06.12.2013ஆம் திகதி கல்லூரி தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளது. அன்றைய தினம் தமது பிள்ளைகளின் தேர்ச்சியறிக்கைகளைப் பெறுவதற்காகவும் விடைத்தாள்களைப் பார்வையிடவும் பெற்றோர்கள் கல்லூரிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளகப் பயிற்சிக் களம்

கல்லூரியின் தோற்பந்து துடுப்பாட்ட வீரர்களின் நீண்டகாலத் தேவையாயிருந்த உள்ளகப் பயிற்சிக் களம் தற்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பின் அனுசரணையுடன் இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினூடாக இக் களம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. துடுப்பாட்ட வீரர்கள் தமது பயிற்சிகளை இலகுவாக மேற்கொள்ள இக்களம் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் மூன்று லட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இப் பயிற்சிக் கள அமைப்பு வேலைகள் துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் மற்றும் பயிற்றுநர் திரு.ந.சிவரூபன் ஆகியோரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டு மாணவர் பாவனைக்கு விடப்படவுள்ளது.

தென்னங்கன்று விநியோகம்

தரம் 6 வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தலா இரண்டு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. தென்னை அபிவிருத்திச் சபையினால் வட மாகாணக் கல்வியமைச்சின் அனுசரணையுடன் பெற்றுத்தரப்பட்ட தென்னங்கன்றுகளை 6ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் வந்து பெற்றுச் சென்றனர். தென்னங்கன்றுகளை வளர்க்கும் முறைமை பற்றிய கையேடுகளும் பெற்றோருக்கு வழங்கப்பட்டது.

Monday, 25 November 2013

Discussion on Grade - 06 Admission

எமது  கல்லூரியில்  2014ம்  ஆண்டில்  தரம் 6  வகுப்பில்  இணைத்துக் கொள்ளப்படவுள்ள  மாணவர்களின் பெற்றோர்களுடனான  கலந்துரையாடல்  இன்று  றிஜ்வே  மண்டபத்தில்  நடைபெற்றது. கடும்  மழையின்  மத்தியில்  அனுமதிக்காக  விண்ணப்பித்த  பெற்றோர்கள்  வருகை  தந்திருந்தனர்.  அதிபர்  அனுமதி  சம்பந்தமான விபரங்களையும்  கல்லூரியின்  பாரம்பரியம்,  விழுமியங்கள்  பற்றியும்  எடுத்துக்கூறி  பிள்ளைகளை  இடைநிலைக்  கல்வியில்  சிறப்பாக  செயற்பட  வைக்க  வேண்டும்  எனவும்  கேட்டுக்கொண்டார்.  பாடசாலை அபிவிருத்திச்  சங்கச்  செயலாளர்  திரு.பா.விஜயகுமார்  அவர்கள்  கல்லூரியின்  தேவைகள்  பற்றியும்  பெற்றோரின்  ஈடுபாடு  பற்றியும்  கூறினார்.  இம்முறை  154  மாணவர்கள்  உரிய  தகுதியுடன்  தரம் 6  வகுப்பில் அனுமதி  பெறவுள்ளனர்.

Sunday, 24 November 2013

G.C.E.O/L Exam Admission Card Issuance

எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை எமது மாணவர்களுக்கு வழங்கி ஆசி கூறும் நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முழு அளவில் வருகை தந்திருந்தனர். கல்லூரி அதிபர், பிரிவுத்தலைவர்கள் திரு.நா.திருக்குமாரன், திருமதி.நே.தனபாலசிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு பரீட்சை தொடர்பான அறிவுரைகளை எடுத்துக் கூறியதுடன் தமது ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினர்.  உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசுகளும் இதன்போது கொடுக்கப்பட்டன.

Grade 06 Admission

எமது கல்லூரியில் 2014ம் ஆண்டில் தரம் 06 வகுப்பில் அனுமதிக்கப்படவுள்ள மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் 24-11-2013ம் திகதி கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 150க்கும் மேற்பட்ட மாணவர்களது விண்ணப்பங்கள் அனுமதிக்காக கிடைத்துள்ளது எனவும் ஆரம்பக் கல்வியிலிருந்து இடைநிலைக் கல்விக்கு வரும் இம் மாணவர்களின் கல்வி முறைமைகள் மற்றும் எமது கல்லூரியின் நடைமுறைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

Colours Night

இவ்வருடம் தேசியமட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவப்படுத்தும் ”வர்ண இரவுகள்” (Colours Night) விழா எதிர்வரும் 28-11-2013 வியாழக்கிழமை மாலை யாழ்.தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 
எமது கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக தேசிய மட்ட மெய்வன்மைப் போட்டிகளில் 19 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்று வெள்ளிப் பதக்கம் (Silver Medal) பெற்ற செல்வி.பா.றஜிதா இக் கௌரவத்திற்குரியவராகவுள்ளார். 
இவருடன் பயிற்றுவிப்பாளர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரும் இவ்விழாவுக்கு விசேடமாக அழைக்கப்பட்டவர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வர்ண இரவுகள்” நிகழ்வில் வடமாகாணக் கல்வி அமைச்சர் திரு.குருகுலராஜா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 23 November 2013

கல்வியபிவிருத்திக் குழுவின் (EDC) முயற்சியால் பாரதி முன்பள்ளிக்கு நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் .

சுழிபுரம் மேற்கு பாரதி கலாமன்றத்தினரால் நடாத்தப்பட்டுவரும் பாரதி முன்பள்ளியில் வரலாற்றிலே 16.11.2013 அன்று ஒரு பொன்னான நாளாகும். சுழிபுரம் கல்வியபிவிருத்திக் குழுவின் முயற்சியால் புலம்யெர்ந்து வாழும் அப்பிரதேச நலன்விரும்பிகளின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட முன்பள்ளியானது  உத்தியோகபூர்வமாக முன்பள்ளி சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இக்கட்டிடம் அமைந்துள்ள நிலமும்; புலம்பெயர்ந்து வாழும் தமிழரின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுழிபுரம் பிரதேசத்தின்; கல்வியை அபிவிருத்திசெய்தலினூடாக பிரதேசத்தை அபிவிருத்தி செய்தலை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்டதே இக்கல்வியபிவிருத்திக் குழுவாகும். சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் கல்வியபிருத்தியை மையமாகக் கொண்டு அப்பாடசாலையின் அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் தொழிற்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் ஐக்கியராச்சியம் கனடா மற்றும் அவுஸ்திரேலியா பழையமாணவர் சங்கங்கள் இக்குழுவிற்கு பக்க பலமாக விளங்குகின்றனர்.
அந்தவகையிலேயே பாரதி முன்பள்ளிக்கான நிரந்தரக்கட்டம் ஒன்று தேவை என்ற கோரிக்கை இக்குழுவினரிடம் முன்வைக்கப்பட்டது. பல்வேறு முயற்சிகள் கைகூடாத நிலையில் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கையானது விக்ரோறியாக்கல்லூரியின் ஐக்கியராச்சிய பழையமாணவர் சங்க உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டபோது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த திரு சி இரவிசங்கர் அவர்கள் தனது சகோதரர் அமரர் சி சிவசங்கர் ஞாபகார்த்தமாக 34 இலட்சம் ரூபாவினை இப்புதிய கட்டட நிர்மாணத்திற்காக பாரதி கலைமன்றத்திடம் கையளித்துள்ளார். அதன் விளைவே இந்த புதிய முன்பள்ளிக் கட்டடத்திறப்புவிழா.
காலையில் நடைபெற்ற திறப்பு விழாவானது பாரதி கலை மன்றத் தலைவர் திரு து. இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. விக்ரோறியாக் கல்லூரி அதிபரும்; கல்வியபிவிருத்திக்குழுவின் தலைவருமான திரு வ. ஸ்ரீகாந்தன் பிரதமவிருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
முன்பள்ளியின் பெயர்ப்பலகை மற்றும் கல்வெட்டு திரைநீக்கம் சரஸ்வதி சிலை திறந்து வைத்தல் முன்பள்ளியை உத்தியோக பூர்வமாக கையளித்தல் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்து வைத்தல் குழந்தைகளுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்குதல் விருந்தினர்களின் உரை போன்றவை இடம்பெற்றன.
மாலையில் விழாக்குழுத் தலைவர் திரு சரவணன் தலைமையில் மாபெரும் கலைவிழா நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார்.
இது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். வெளிநாடுகளில் இவ்வாறான பலர் இருக்கின்றபோதிலும், ஒரு சிலரே இவ்வாறாக பெரியளவிலான உதவிகளை செய்கின்றனர். தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளின் கல்வி நிலைமை மிகவும் பின்னடைவில் உள்ளது. எனவே இவ்வாறானவர்கள் கல்விக்கு ஊக்கம் தந்து வடக்கு கிழக்கு பகுதிகளை கல்வியில் தலைநிமிரச் செய்ய உதவியாகவும், உறுதுணையாகவும் நிற்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

See Photos 

See Videos
Clip 01
Clip 02

Welcome Dance

Bharathy Nursery New Building Opening Ceremony 1

Bharathy Nursery New Building Opening Ceremony 2

Bharathy Nursery New Building Opening Ceremony 3

Bharathy Nursery New Building Opening Ceremony 4

EDC இன் முயற்சியால் கொண்டாடப் பட்ட மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்


எமது சுழிபுரம் கிராமத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்ப்படுத்தும் நோக்கத்துடன் 17/11/2013 அன்று பாரதி முன் பள்ளி மண்டபத்தில் நாவலர் முன்பள்ளி மாணவர்களும், பாரதி முன்பள்ளி மாணவர்களும் ஒன்றுசேர்ந்து பிறந்ததின விழா ஒன்றை நடாத்தியுள்ளார்கள். ஒவ்வொரு மாதத்திலும் பிறந்த மாணவர்களின் பிறந்ததினவிழாக்கள் அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி நாட்களில் கொண்டாடத்திட்டமிட்டு. இப்பிறந்தநாள்  விழாவை 70 மேற்பட்ட மாணவர்கள் அத்துடன் ஆசிரியர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து வெகு விமர்சையாக  கொண்டாடியுள்ளார்கள். இதன் மூலம் மாணவர்களிடையே  சமுதாய ஒற்றுமையை வளர்ப்பதுடன், நல்லுறவிற்கும் இவ்விழா  வழிவகுக்கின்றது. இதேபோன்ற முன்மாதிரியான நிகழ்வுகளை எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் பாராட்டுகின்றது .
                            நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

See Photos

Friday, 15 November 2013

Bharathy New pre School Opening Ceremony


பாரதி முன்பள்ளியின் பால் பொங்கும் வைபவம்.

இன்று யுகே மாணவர் ஒன்றியத்தின் ஆதரவுடன் பல இலட்சம் ரூபா செலவில் EDC அமைப்பாளர் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்ட பாரதி முன்பள்ளியின் புதிய கட்டிடத்திறப்புவிழாவிற்கு பால் பொங்கும் வைபவம் இந்து சமயமுறைப்படி சிறப்பாக நடைபெற்றது. 
இச்சிறப்பு நிகழ்ச்சி சுழிபுரம் மேற்கு பெரியதம்பிரான் கோயிலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களின் ஆதரவுடன் திருவுருவப்படங்கள் கொண்டுவரப்பட்டு பாரதி முன்பள்ளி புதிய கட்டிடத்தில் வைக்கப்பட்ட பின் பசும் பால் பொங்கும் வைபவம் இந்து சமய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான திரு.சித்தாத்தன் அவர்கள் தனது உதவியாளர்களுடன் கலந்து கொண்டு இன் நிகழ்ச்சியை சிறப்பித்துத்தந்துள்ளார்.
                                 நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

See Photos

பாரதி முன் பள்ளி புதிய கட்டட சாந்தி நிகழ்வு

See Photos

Wednesday, 13 November 2013

Internal Cricket Net code‏

ஸ்ரீலங்கா கிரிக்கட் அமைப்பு எமது கல்லூரிக்கு உள்ளகத் துடுப்பாட்டப் பயிற்சித் தளமொன்றை அமைத்துத் தர முன்வந்துள்ளனர். கல்லூரியின் தோற்பந்து துடுப்பாட்ட அணியின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் முகமாக அத்தளம் அவர்களால் அமைக்கப்படுகின்றது. கல்லூரி மைதானத்தின் தென்மேற்குப் பகுதியில் இதனை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் மூன்று லட்சம் ரூபாவுக்கு மேல் பெறுமதியான இத்தளம் -லங்கா கிரிக்கட் அமைப்பின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவர்களது தொழில்நுட்ப உத்தியோகஸ்தர்களின் வழிப்படுத்தலில் தமது பணியாளர்களைக் கொண்டு உருவாக்குகின்றனர். எமது கல்லூரியின் துடுப்பாட்ட அணிப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்களும் துடுப்பாட்டப் பயிற்றுனர்கள் திரு.ந.சிவரூபன், திரு.மு.தவராஜா ஆகியோரும் மேற்பார்வை செய்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளில் இத்தளம் அமைக்கப்படுகின்றது.

Supply of Cricket Instruments - SriLanka Cricket‏


Srilanka Cricket அமைப்பு வடமாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்கியுள்ளது. பிரபல கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் துடுப்பாட்ட உபகரணங்களை பாடசாலை அதிபர்களிடம் கிளிநொச்சியில் வைத்து கையளித்தார். எமது கல்லூரிக்கும் இதன்போது துடுப்பாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் உப அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்கள் திரு.மு.முரளிதரன் அவர்களிடம் பெற்றுக் கொள்வதையும் அருகில் துடுப்பாட்டப் பொறுப்பாசிரியர் திரு.வி.மதிதரன் அவர்கள் மற்றொரு தொகுதி துடுப்பாட்ட உபகரணங்களுடன் நிற்பதையும் படத்தில் காணலாம்

University Entrance - Academic Tear 2012/2013‏

Following Students are selected for University Entrance - G.C.E.A/L Examination - 2012

Science Stream

1. Thavarajah Venkadeswaran - Engineering (University of Peradeniya)                
2. Sivakumar Sivasankar - Animal Science & Fisheries (University of Peradeniya)
3. Manokaran Pratheepan - Agriculture Science (University of Jaffna)
4. Viknarajah Thirumavalavan - Agriculture Science (University of Jaffna)
5. Thilakenthiralingam Pakeekaran - Physical Science (University of Jaffna)

Commerce Stream

1. Sivagnanasundaram Yanarththanan - Commerce (University of Jaffna)
2. Sivanathan Ramanan - Management (University of Jaffna)
3. Arul Remingta Alfred Nallaiah - Management (University of Jaffna)
4. Piratheepa Pavananthan - Management (University of Jaffna)

Arts Stream

1. Jeyaranjini Sivam - Arts (University of Jaffna)
2. Selvarasa Mayuran - Physical Education (University of Sabragamuwa)
3. Karsini Ponrasa - Music (University of Jaffna, Ramanathan Campus)
4. Vinthuka Thavarasa - Music (University of Jaffna, Ramanathan Campus)

More students may be selected to Universities in waiting list & for special subjects.

Books Donation

எமது கல்லூரியின் நூலகத்திற்கென பெறுமதி வாய்ந்த புத்தயங்களை ஐக்கிய ராச்சியத்தில் வதியும் அன்பர் திரு.சி.செந்தில் செல்வன் அவர்கள் அன்பளிப்பு செய்துள்ளார். யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் மிக ஈடுபாடு கொண்ட செந்தில்செல்வன் அவர்கள் அங்குள்ள சில பாடசாலைகளின் நூல்நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகின்றார். அதன் தொடர்ச்சியாக எமது கல்லூரி நூல்நிலையத்திற்கு ஆங்கில மொழியிலான புத்தகங்களைத் தந்துள்ளார். மாணவர்களின் வாசிப்பு ஆற்றலைத் தூண்டக்கூடியதான சிறிய கதைப்புத்தகங்களும்இ கற்றலுக்குத் தேவையான சிறந்த புத்தகங்களும் அதிலடங்கியுள்ளன. இவரது இவ்வுதவிக்கு கல்லூரிச்சமூகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. இப்புத்தகங்களை திரு.வி.உமாபதி அவர்கள் துறைமுகத்திலிருந்து பொறுப்பேற்று கல்லூரியில் கொண்டுவந்து தந்துள்ளார்.
 

Friday, 1 November 2013

மகாதேவா ஆச்சிரமத்துக்கு நிதி சேர்க்கும் முகமாக புலர்வின் பூபாளம்

அன்பின் மெல்பேன் வாழ் தமிழ்  மக்களே,
எதிர்வரும் டிசம்பர் 1 திகதி ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்துக்கு நிதி சேர்க்கும் முகமாக  புலர்வின் பூபாளம் என்னும் நிகழ்வு நடைபெருகின்றது.இன்னிகழ்வுக்கு நிங்கள் அனைவரும் வந்து ஆதரவு அளித்து ஆச்சிரமத்தில் வாழும் சிறுவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உதவும்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.மேலதிக விபரங்களுக்கு இமையில் இணைப்பை பார்க்கவும்.
நன்றி
இப்படிக்கு
நிர்வாக குழு
மெல்பேன்