Saturday, 29 November 2014

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் 2014 புலமை பரிசில் பரீட்சை

        சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் 2014 புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 13 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 28 நவம்பர் , வெள்ளி அன்று நடை பெற்றது.வித்தியாசாலை அதிபர் திருமதி.மலர்விழி குணபாலன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்
திரு.செ.சந்திரராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக கோட்ட கல்விப்பணிப்பாளர் செல்வி.அந்தோனி.சாந்தா மரியாம்பிள்ளை அவர்களும் பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி.சி.புனிதவதி அவர்களும் சிறப்பு அதிதியாக சுழிபுரம் கல்வி அபிவிருத்திக் குழுத் தலைவரும் ஒய்வு நிலை அதிபருமாகிய பிரம்மஸ்ரீ.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.  இதன் போது கல்வி அபிவிருத்திக்
குழுவினர் ஊடாக ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விக்டோரியன் திரு,சி.ரவிசங்கர் அவர்களால் வித்தியாசாலை தரம் 5 கல்வி மேம்பாடு கருதி ரூபா  56000 /=  வழங்கப்பட்டது.                                                                                                                                                                           காணோளிக்கு கீழ் உள்ள இணைப்பை  சொடுக்குக .....                                                                          
     ஒய்வு நிலை அதிபர் உரை

Wednesday, 19 November 2014

முத்தமிழ் விழா -2014

விக்டோரியா கல்லூரியின் முத்தமிழ் விழா 18-04-2014,செவ்வாய் கிழமை அன்று முற்பகல்  10:30 மணியளவில் ரிஜ்வே மண்டபத்தில் ஆரம்பமாகியது.


     பிரதம விருந்தினராக பண்டிதர் .வேலாயுதம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஆசிரியர்களான திருமதி.நேசமலர் மரியதாசன்,திருமதி.பவளகுமாரி குமரகுரு  , திருமதி.ஸ்ரீதேவி கண்ணதாசன் ,திருமதி பங்கயற்செல்வி முகுந்தன், அதிபர் திருமதி சத்தியகுமாரி சிவகுமார்  ஆகியோர்  கலந்து சிறப்பித்தனர்.                                                                                                    
                  செல்வன் கி.பகீரதனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்........


குழுப் பாடல்நிகழ்வும்........




சிவகுமார் குழுவினரின் மங்கல வாத்திய நிகழ்வும்....
....



தனி நடன நிகழ்வும்......



கதம்ப நிகழ்வும்.......




காவடி நடன நிகழ்வும் .........



செல்வி.பூ.ஜெயமலர் அவர்களின் சிறப்பு விருந்தின உரையும் ..........


திருமதி ப.யோகநாதன் அவர்களை சபா நாயகராக கொண்ட விக்டோரியன் இளைஞர் பாராளுமன்றமும்  ........................





 பண்டிதர் வேலாயுதம் அவர்களின் பிரதம  விருந்தினர் உரையும்......



       தொடர்ந்து தமிழ் மன்றத்தினால் நடத்தப்பட்ட போட்டிகளிற்கான பரிசில்கள் வழங்கப்பட்டன. நன்றியுரையினை தொடர்ந்து 3:30 மணியளவில் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

Sunday, 16 November 2014

மரண அறிவித்தல்

இலங்கையை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மெல்பேன் dandenong ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவராணி அருணாசலம் இன்று (14/11/2014) இறைபதம் அடைந்து விட்டார்,அண்ணார் திரு அருணாசலம்
 
அவர்களின் அன்பு மனைவியும் ,திரு சிதம்பரநாதன் (லண்டன் ) தேவிகா (லண்டன் ) பவானி (மெல்பேன்) நடனாலையா நடன கல்லுரி ஆசிரியை மீனா (மெல்பேன்) அம்பிகா (நியூசிலாந்து )கணநாதன் (லண்டன் )
 
ஆகியோரின் பாசமிகு தாயும் திருமதி ,சதாச்செல்வி(லண்டன்) ,திரு கிருஷ்சன் (லண்டன்),திரு கிருபாகரன் (மெல்பேன் )ஓம் இலக்ரிக்ஸ் திரு இளங்குமரன்(மெல்பேன் ) சிற்சபேசன் (நியூசிலாந்து )ஆகியோரின் அன்பு
 
மாமியாரும் ஆவார்.அண்ணாரின் இமைக்கிரிகைகள்  பற்றிய விபரங்கள் பின்னர் அறிய தரப்படும்.
 
தகவல்
 
மருமக்கள்
 
இளங்குமரன் 97924296 அல்லது 0408966200
 
கிருபாகரன் 04118907413
 
 

Thursday, 13 November 2014

மரண அறிவித்தல் -அமரர் மாணிக்கம் கர்ணசாமி (திரு.தா .கமலநாதன் அவர்களின் மாமனார் )


           அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரது குடும்பத்தினறர்கு விக்டோரியா சமூகம் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது

Tuesday, 11 November 2014

English Day-2014


November 5th was a colourful day in the calendar of "Mother Victoria" as her Sons and Daughters celebrated their English Day ....The Ridgeway Hall was packed to the rafters with staff and students and guests.

From the "Welcome Address" at 11.00am to the "Vote of Thanks" at 1.10pm there was no let up in the interest of both performers and audience.  A healthy contest was going on among the events recitation, speeches, dramas, songs, oratory, solo acting, news reading, spoken error correction and so on.... in terms of the standard.
It was an ideal occasion to trigger a genuine interest and involvement in the students towards English.. The speciality of the function was that it was a "hundred percent" students-staged event.  the teachers of English Mr George Jeyabalan, Mrs Vanmathy Sathiyaloganathan, Mr Sivakumar and Mr Thirikkumaran were just facilitators and not intervened even in announcing!
Both the Principal and the Chief guest mrs Selvarani Thevaraja praised and blessed the performers in their addresses.  All in all, it was a "sweet day" as the events made the audience happy, quiet and above all, did not test their patience!

நிறுவுனர் நினைவுதினமும் பரிசளிப்பும் - 2014

  138 வருடங்களை கடந்த விக்டோரியா கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும்-பரிசளிப்பு விழாவும்  31 ஒக்டோபர் 2014 அன்று பிற்பகல் 1: 30 மணியளவில்  கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
    
      ஆரம்ப நிகழ்வாக கல்லூரி பிரதி அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களால் ஸ்தாபகர் செல்லப்பா அவர்களின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

     கல்லூரி அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற  நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி பணிப்பாளர் திரு.ஆ.ராஜேந்திரன் அவர்களும் .சிறப்பு விருந்தினராக இதய சத்திர சிகிச்சை நிபுணர் திரு.‍‍‌‌ஞானச்சந்திரமூர்த்தி.காந்திஜி அவர்களும் நிறுவுனர் நினைவுப் பேருரை ஆற்றுவதற்கு பழைய மாணவர் சங்க தலைவரும் ஒய்வு நிலை விரிவுரையாளருமாகிய திருமதி.நா.செல்வநாயகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.முன்னாள் அதிபர்கள் திருமதி.அரும்தவசெல்வி வேலுபிள்ளை அவர்களும் பிரம்மஸ்ரீ..வ.ஸ்ரீகாந்தன் அவர்களும்   -ஆசிரியர்கள் பழையமாணவர் சங்கத்தினர் பாடசாலை அபிவிருத்திக் குழுவனர்  பெறோர்கள்,மாணவர்கள்,

 

நலன்விரும்பிகள் என பலராலும் நிறைந்திருந்த கனகரத்தினம் கட்டட தொகுதி முன்பாக அமைகப்படிருந்த பந்தல்களும் அதன் முன்பாக அமைந்த மேடையில் நிகழ்வுகளும் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்தன.விருந்தினர்களின் மங்கல விளகேற்றலை தொடர்ந்து இறைவணக்கம் செலுத்தப்பட்டது .பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனத்தினை தொடர்ந்து அதிபர் தலைமையில் அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.அதிபர் தனது ஆண்டறிகையை சம்ர்பிதததனை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.  

                ஆங்கில நாடகம், ஆங்கில குழுப்பாடல் ,தனிநடனம் ,கொழுந்து நடனம் ,தமிழ் நாடகம் ஆகிய கலை நிகழ்வுகளும் பரிசில்கள் வழங்கியமையும் இடம்பெற்றன. நன்றியுரையை தொடர்ந்து   நிறைவாக கல்லூரி கீதம் இசைக்கபட்டது                 .

 மேலதிக படங்களிட்கு .......... 

Friday, 7 November 2014

விளையாட்டு : 13 வயதின் கீழான துடுபாட்டம்

 
13 வயதின் கீழான அணியினற்கான
ஆட்டத்தில் பூவா -தலையாவில்
வெற்றி பெற்ற யாழ் இந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடும்படி விக்டோரியாவை பணித்தது. சியாமளன் 22 ,  வேணுதாஸ் 19  ஜீவகன்  18 ஆகியோரின் ஓட்டங்களுடன் 35 பந்து பரிமாற்ற முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 105 ஓட்டங்களை பெற்றது . பந்து வீச்சில் அங்கவன் 3, சங்கவன் 3 துசிதன் 2 இலக்குகளை வீழ்த்தினர்.

                பதிலிற்கு துடுப்பெடுத்தாடிய யாழ் இந்து அணியினர் சாருஜன் 23 சங்கவன் 10  ஓட்டங்களுடன் 23.4 பந்து பரிமாற்றங்கள் முடிவில்  சகல இலக்குகளையும் இழந்து 71 ஓட்டங்களை பெற்றது . பந்து வீச்சில் பவிதரன் 4 ,பிரசாந்த் 4 இலக்குகளை வீழ்த்தினர்.

 2 வது தடவை

விக்டோரியா  61 ஓட்டங்கள்

பவிதரன்  19  ஓட்டங்கள்

ஹரிகரன் 3,துசிதன் ,அங்கவன் ,சங்கவன் ஆகியோர் தலா 2 இலக்குகளை வீழ்த்தினர்.

       பதிலிற்கு துடுபெடுத்தாடிய  யாழ் இந்து அணி  5 பந்து பரிமாற்றங்கள் முடிவில் 35  ஓட்டங்களை பெற்றது.  பந்து வீச்சில் சியாமளன் 3 இலக்குகளை வீழ்த்தினார்.

          வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் நிறைவு பெற்றது .

Monday, 3 November 2014

தேசிய ரீதியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற ரஜிதா

தேசிய ரீதியில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில்  இடம்பெற்ற  இலங்கை பாடசாலைகளிற்கு
இடையேயான ஈட்டி எறிதற் போட்டியில் விக்டோரியா கல்லூரி மாணவி செல்வி. ரஜிதா  பாலச்சந்திரன்  அவர்கள்  36.9 M தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் வடமாகாணத்தின் வரலாற்றில் முதல்தடவையாக    தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டுள்ளார் 
இவரிற்கான கௌரவிப்பு நிகழ்வு  10 / 10 / 2014    அன்று நடைபெற்றபோது சாதனையாளர் ரஜிதா பிரதான வீதி பறாளை சந்தியிலிருந்து மாணவர்கள் வீத்யின் இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்க கல்விச் சமூகத்தினர் புடை சூழ பாண்ட்வாத்திய அணிவகுப்புடன் நிகழ்விடமான ரிட்ஜ்வே  மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார் .
உடற்கல்வி பொறுப்பாசிரியர் சிவச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற   இந்நிகழ்விற்கு செல்வி.ரஜிதாவின் தாயாரும் ,கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ .ஸ்ரீகாந்தன் அவர்களும் வலிகாமம் கல்வி  வலய உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் அவர்களும் பழையமாணவர் சங்க தலைவர் திருமதி நாச்சியார் செல்வநாயகம் அவர்களும் கலந்துகொண்டனர் .
உரையாற்றிய அனைவரும் சாதனையை பாராட்டியதுடன் ,முன்னாள் அதிபர் தனதுரையின்போது மூளாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை கற்ற ரஜிதா விக்டோரியா கல்லூரியில் இணைந்து கொண்டது முதல் அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டியதாகவும் இவரது காலத்தில் துடுப்பாட்டம் ,எல்லே போன்ற விளையாட்டுகளில் எமது பாடசாலை முன் நிலைக்கு வரக்கூடியதாக இருந்ததுடன் பயிற்ச்சியாளர் திரு.ந .சிவரூபன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் எமது  துடுப்பாட்ட அணியினர் கடந்த 5  வருடங்களாக மாகாண மட்டத்தில் முதலிடத்திலும் 2012 இல் தேசிய மட்டத்தில் 2 ம் இடத்தினை பெறக்கூடியதாக இருந்ததாகவும் குறிபிட்டார்
                ஆஸ்திரேலியா பழையமாணவர் சங்கம் 25000 ரூபா பணப்பரிசும் ஐக்கியஇராச்சியம் - திருமதி.நகுலேஸ்வரி இரகுநாதன் அவர்கள் 24000  ரூபா பணப்பரிசும் வழங்கி கௌரவித்தனர்

See Photos

Sunday, 2 November 2014

பாரதி முன் பள்ளிக்கு திரு.உலகநாதன் அவர்கள் வருகை (Ref:News from www.Bharthy.info)

ஐக்கியஇராச்சியச்சிய பழைய மாணவர் ஒன்றிய காப்பாளர் திரு.த.உலகநாதன் அவர்கள் பாரதி முன் பள்ளிக்கு வருகை தந்து பள்ளியின் நிலவரத்தை அறிந்துகொண்டார்.
                   பாரதி முன்பள்ளி நிரந்தர கட்டடம் அற்று கிராம அபிவிருத்திசங்க - கணேச சனசமூக நிலைய  ,மாதர் சங்க கட்டட தொகுதியில் இயங்கி வந்த வேளையில் திரு.த.உலகநாதன் அவர்கள் 2012  இல் விக்டோரியா கல்லூரி ரிட்ஜ்வே மண்டப புனரமைப்பின் பின்னரான கையளிப்பு நிகழ்விற்காக   தாயகம் வந்திருந்த வேளையில் ஐக்கிய இராச்சியச்சிய பழைய மாணவர் ஒன்றிய நிறைவேற்று குழு உறுப்பினரும் எமது மன்ற நலன் விரும்பியும் கொடயாளருமகிய திரு.சி.ரவிசங்கர்  அவர்களும் தாயகம் வந்திருந்தார்.
 
        அவ்வேளையில் பாரதி முன்பள்ளி கட்டட நிர்மாணிப்பு குழுவினருடனான கலந்துரையாடலை தொடர்ந்து  திரு.சி.ரவிசங்கர்    அவர்களால்        .பாரதி முன் பள்ளிக்கு நவீன வசதிகள் கொண்டதும் முழுநிறைவானதுமான   நிரந்தர கட்டடம்  அமைக்கபெற்று எத்ர்வரும் நவம்பர் 16 ம்  திகதி அன்று ஓர் ஆண்டு பூர்த்தி அடைகின்றமை குறிப்பிடத் தக்கதாகும் .
 
இவ் வேலை திட்டம் நிறை வேற திரு.த.உலகநாதன் அவர்கள் ஐக்கியஇராச்சியச்சிய பழைய மாணவர்  ஒன்றியம் சார்பாக பூரண ஒத்தாசை வழங்கியமை எம்மால் மறக்கமுடியாத உண்மையாகும்