Tuesday, 29 May 2012

வெற்றி வாகை

அகில இலங்கை ரீதியில் தமிழ்த் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் நடாத்தப்பட்ட விசேட கூத்து ,நாட்டிய நாடகம் போன்ற எமது பாரம்பரிய கலை நிகழ்வுகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் மாகாண மட்டத்தில் முறையே முதலாம் ,இரண்டாம் இடங்களைப் பெற்று தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் .இதில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் அதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் ,அத்துடன் அங்கு செல்வதற்கு தேவையான செலவைப் பொறுப்பேற்ற இலண்டனைச் சேர்ந்த சி .முகுந்தன் அவர்களுக்கும் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றியையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது .
29/05/2012

மனதில் நீங்காது நிற்பவர்

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் திருமதி. இலக்குமிப்பிள்ளை.சிவசுப்பிரமணியம் அவர்கள் அன்பாக எல்லோராலும் ஆசைப்பிள்ளை ஆசிரியர் என்று அழைக்கப்படுவார் .இவர் தனது எழுவதாவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார் .என்பதை அறிந்த அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் எல்லோருக்கும் பேரிழப்பாக உள்ளது .ஆசைப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கணித ஆசிரியராக இருந்த காலத்தில் அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் இன்று உலகெங்கும் நல்ல துறைகளில் வேலைபார்த்து வருகிறார்கள் .
அவர் கல்லூரி ஆசிரியராக இருந்த கால கட்டத்தில் தனது கடமையை நல்ல முறையில் செய்து எல்லோரிடமும் பல பாராட்டுக்களையும் பெற்ற ஆசிரியர் ஆவார் .அன்னாரின் மீளாத்துயிலுக்காகவும் ,அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்துக் கொள்கின்றார்கள் .
அனுதாபங்களுடன் யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
29/05/2012

Monday, 28 May 2012

வடமாகாண தமிழ்மொழித்தின விழா

எமது கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை தமிழ்த்தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட விசேடகூத்து, நாட்டிய நாடகம் ஆகிய நிகழ்ச்சிகளில் மாகாண மட்டத்தில் முறையே முதலாம், இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

வடமாகாண தமிழ்மொழித்தின விழா நேற்று வவுனியாவில் நடைபெற்ற போது இம்மாணவர்கள் பதக்கம் சூட்டி, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
 

மரண அறிவித்தல்-திருமதி-இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்

இலங்கை-சுளிபுரத்தைப் பிறப்பிடமாகவும்,(நைஜீரியாவில் வாழ்ந்தவரும் ) கனடா மொன்றியலை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி-இலட்சுமிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் காலமானார்.
அன்னார் யாழ்/ நெடுந்தீவு மகா வித்தியாலயம்,யாழ்/சுளிபுரம் அரசினர் விக்ரோறியாக்கல்லூரி,யாழ்/ மெய்கண்டான் மகாவித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் கணிதஆசிரியையாய் கடமையாற்றி எல்லோராலும் ’மிஸ்-ஆசைப்பிள்ளை ரீச்சர்’ என்று அழைக்கப்பட்டவர்
 

Sunday, 20 May 2012

AGM 2012 in Chulipuram

OSA (Chulipuram) AGM 2012 is being held on Sunday 20th May 2012 at Victoria College. At the meeting the financial reports for year end 2012 are being distributed.

Read More

Saturday, 19 May 2012

Financial Help to strengthen our hard ball cricket team

In memory of the Late Mr Ramachandiran Vignesha, His friends have donated 55,000 LKR to support our hard ball cricket team.

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவன் காலம் சென்ற திரு .ராமச்சந்திரன் .விக்கினேசா அவர்களின் ஞாபகார்த்தமாக கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான ஐம்பத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான துடுப்பாட்டத்திற்கு தேவையான உபகரணங்களை அவரது நண்பர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார்கள் .இவர்களின் இச்சேவையைப் பாராட்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்கள் யாவரும் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

Read More

Friday, 18 May 2012

கல்லூரி அலுவலக மலசலகூடம் புனரமைப்பு



எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஐம்பத்தி ஐந்து ஆசிரியர்களும் ,ஐந்து உதவியாளர்களும் மற்றும் நாள்தோறும் கல்லூரிக்கு வருகின்ற பார்வையாளர்களும் பாவிப்பதற்கு மலசலகூடம்  இன்றியமையாததாக இருப்பதனால் உடைந்த நிலையில் இருந்த மலசலகூடத்தை புனரமைப்பதற்கு ஆர்வங்கொண்டு பிரித்தானியாவில் வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவன் சி.ரவிசங்கர் அவர்கள் அறுபத்தி ஏழாயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்கி புதிதாகச் சீரமைத்துக் கொடுத்துள்ளார். .
இவர் செய்து கொடுத்த இந்த வேலைத்திட்டத்தை பாராட்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,கல்லூரிப் பழைய மாணவர் சங்கம் ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஆகியோர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள் .
இப்படியான முக்கியமான வேலைத்திட்டங்களை கல்லூரிக்குச் செய்து கொடுக்க நாடுகடந்து வந்தும் நாம் கற்ற கால்லூரியை மறவாதிருக்கும் கல்லூரியின் பழைய மாணவர்கள் யாவரும் முன்வரவேண்டும் .யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் இணையத்தள மூலம் கல்லூரிக்குத் தேவையான வேலைத்திட்டத்தை அறிந்துகொள்ளலாம்

Thursday, 17 May 2012

Please come forward to help our Cricket Team

இலங்கையில் துடுப்பாட்டம் எல்லா மக்களாலும் ஆர்வத்துடன் பார்த்து இரசிக்கும் விளையாட்டாகும் .இதனால் இந்த விளையாட்டை எமது கல்லூரி மாணவர்கள் திறம்படக் கற்றுக்கொண்டு எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற்று பல வெற்றிக் கிண்ணங்களைப் பெறவேண்டும் என்பதே கல்லூரிப் பழைய மாணவர்களின் எதிர்பார்ப்பாகும் .
அத்துடன் இந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களை வழங்க யுகே பழைய மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. நாடுகடந்து வாழும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் துடுப்பாட்டத்திற்கு உதவிசெய்ய விரும்பினால் கல்லூரி நிர்வாகத்துடன் அல்லது யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும் .
UK-OSA

Wednesday, 16 May 2012

காட்சிப் படப்பிடிப்பிற்கு நன்கொடை



எமது கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கலைவிழாவிற்கு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளை காட்சிப் படங்களாக எடுப்பதற்குரிய முப்பத்தி ஆறாயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பிரித்தானியாவில் வசிக்கும் எமது கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .இரவிசங்கர் அவர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளார் .
இப் பிரமாண்டமான கலைவிழா மாணவர்களின் எல்லாத் திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்காக நடாத்தப்பட்டதாகும்

Monday, 14 May 2012

Birmingham based T.Kamalanathan Donated 25,000 LKR

யுகேயில் வசித்துவரும் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் திரு .தா .கமலநாதன் அவர்கள் கல்லூரியின் மாணவிகள் துடுப்பாட்ட போட்டியில் மாவட்ட ரீதியில் வெற்றிபெற்று மாகாண ரீதியில் விளையாட்டில் பங்கு பற்றுவதற்காக வவுனியா செல்லவுள்ளார்கள் .அவர்கள் செல்வதற்கு தேவையான பிரயாணச் செலவு இருபத்தி நான்காயிரம் ரூபா பெறுமதியான பணத்தை யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Read More

Sunday, 13 May 2012

மாகாண மட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது

அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் வடக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட நாட்டுக் கூத்து நிகழ்வில் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. சென்றாண்டிலும் எமது கல்லூரியே முதலிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். படத்தில் நாட்டுக் கூத்தில் நடித்த மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுடன் காணப்படுகின்றனர்.
 
 

Friday, 11 May 2012

London based S.Mukunthan Donated 25,000 rupees for traveling expenses

 இலண்டனில் வசித்துவரும் எமது விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் திரு .சி .முகுந்தன் அவர்கள் யுகே பழைய மாணவர் சங்கத்தின் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட எமது கல்லூரியின் மாணவர்கள் நாட்டிய நாடகத்தில் மாவட்ட ரீதியில் வெற்றி பெற்று மாகாணரீதியில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பற்றுவதற்காக வவுனியா செல்ல வுள்ளதற்கான செலவினைப் பொறுப்பேற்றுள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

Read More

Thursday, 10 May 2012

மகஜர் கையளித்தனர்.

யுகேக்கு விஜயம் செய்திருந்த எமது வட்டுக்கோட்டைத் தொகுதி பாராளமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு .ஈ .சரவணபவன் அவர்கள் பெர்மிங்கம் பாலாஜி ஆலயத்திற்கு வந்திருந்த பொழுது விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்களான யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் காரியதரசி திரு .தா .கமலநாதன் .திரு .வீ .ஜெயச்சந்திரன் ,திரு .அ.நீலவண்ணன் ஆகியோருடன் வேறு பழைய மாணவர்களும் பாராளமன்ற உறுப்பினருடன் சிலமணி நேரம் கலந்துரையாடல் நடத்தியபின்னர் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்
 
 

உடற்பயிற்சிக்கு ஊக்குவிப்பு



இலண்டனில் வசிக்கும் திரு .சி .ரவிசங்கர் அவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு வைகாசி மாதத்திற்குத்  தேவையான சத்துள்ள உணவுகளான பால் ,பழம் போன்றவற்றை வாங்குவதற்கான பதினையாயிரம் ரூபா பணத்தினை நன்கொடையாக வழங்கியுள்ளார் .
வெளிநாடுகளில் வசிக்கும் எமது கல்லூரி பழைய மாணவர்கள் காலை உடற்பயிற்சி செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க விரும்பினால் நீங்களும் முன்வந்து உதவி செய்யலாம் .அப்படித்தொடர்பு கொள்ள விரும்பினால் விக்ரோறியாக் கல்லூரி அதிபருடன் அல்லது யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளவும் .

Wednesday, 9 May 2012

Paraalai Temple Cart Festival

Paralai temple cart festival due to start on 24/05/2012

Read More

AGM Invitation (Chulipuram OSA)

Official invitation to attend our AGM (Chulipuram) for all old students living in UK.

Read More

Request to help our Cricket Team

எமது கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை நன்கொடையாக தரவிரும்பும் பழைய மாணவர்கள் யாராக இருந்தாலும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொள்ளவும் .நாம் இந்த உபகரணங்களை சேகரித்து கல்லூரிக்கு அனுப்பிவைப்போம் .
T.Kamalanathan
(UK-OSA)

Saturday, 5 May 2012

நாட்டிய நாடகம்

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டிகளில்

Read More

Thursday, 3 May 2012

Volley Ball & Naatukkoothu

Our boys volley ball team got the second place in the district level.
our "naattukkooththu" got 1st place in the district level and going to
participate in the provincial level.

Tuesday, 1 May 2012

Great Achievement in sports again

வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் 10 முதலிடங்களையும் 15 இரண்டாமிடங்களையும் 11 மூன்றாமிடங்களையும் வெற்றி கொண்டுள்ளனர். இவ்வெற்றிகளில் 4 வெற்றிகள் அஞ்சலோட்டக் குழுக்கள் பெற்றுக் கொண்டதாகும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள மாவட்ட மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுநர் போட்டிகளில் மேற்கூறிய வெற்றிகளைப் பெற்றவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அதற்கான பயிற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

சாரணர் சீருடை நன்கொடை


யுகே பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்                          திரு .சிவசுப்பிரமணியம் -ரவிசங்கர்அவர்கள் கல்லூரியின் சாரணர் குழுவிற்கு தேவையான சீருடைகளை வாங்குவதற்குரிய ஐம்பதினாயிரம் ரூபா பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவருக்கு கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் சங்கம் ஆகியோர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்