அவுஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த எங்கள் கல்லுர்ரியின் பழைய மாணவன் திரு.க.செந்தில்நாதன் அவர்கள் எமது அதிபரின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவரும் கல்லூரியின் உபஅதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களும் இராப்போசனம் அருந்தி மகிழ்தனர்.
Monday, 31 December 2012
வடமாகாண கல்விப் பிரிவின் ஆளணி விரைவில் சீராக்கம்
முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட புதிய ஆளணிக் கொள்கைக்கு அமைய வடமாகாண கல்விப்பிரிவின் நிர்வாகச் செயற்பாடுகளில் ஆளணியினர் சீராக்கம் செய்யப்படவுள்ளனர் என்று வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர் நியமனம்; கல்வி அமைச்சு
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Increase O/L paper evaluation fees - SLTSA
The Sri Lanka Teacher Services Association (SLTSA) has demanded the Education Ministry to increase the Ordinary Level exam paper evaluation fees.
40 ஆண்டுகளுக்கு பின்னர் பரீட்சை சட்டத்தில் மாற்றம்
இலங்கையில் நாற்பது ஆண்டுகளின் பின்னர் பரீட்சை சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் பரீட்சைத் திணைக்கள வடடாரங்கள் தெரிவித்துள்ளன.
Sunday, 30 December 2012
றோகினியும் றாகினியும் வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார்
எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர வி்ஞ்ஞானப்பிரிவு மாணவி ஒருவரின் கல்வித் தேவைகளுக்காக கல்லூரியின் பழைய மாணவியான திருமதி.றோகினி மாதாந்த உதவித் தொகை வழங்கி வருகின்றார். அண்மையில் திருமதி.றோகினி குடும்பத்தினரும் திருமதி.றாகினி சிவகுமாரும் கல்லூரிக்கு வருகை தந்து உதவி பெறும் மாணவியுடன் கலந்துரையாடி கற்றலுக்காக அவரை ஊக்குவி்த்தனர். கல்விக்காக தொடர்ந்தும் அம்மாணவிக்கு தமது உதவி கிடைக்கும் என உறுதியளித்தனர். றோகினியும் றாகினியும் பண்ணாகம், வைத்திய கலாநிதி அமரர்.கைலாசப்பிள்ளை அவர்களின் புதல்விகளாவர்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்
அண்மையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Saturday, 29 December 2012
2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை
2013ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டின் அரச பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர் தரம் 2-1 இல் உள்ளவர்களுக்கு அதிபர் தரம் 1 வழங்க ஏற்பாடு
Friday, 28 December 2012
பெற்றோர்கள், வாழ்விடத்துக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கல்வியில் முன்னணி வகித்த யாழ்ப்பாணம் இன்று மது பாவனையில் முதல் இடத்தில் கல்வித் தர நிலை 9 ஆவது இடத்தில் - யாழ்.பணிப்பாளர் |
யாழ்.மாவட்டம் ஒரு காலத்தில் கல்வியில் முன்னணி வகித்து சாதனை படைத்தது. ஆனால் இன்று மது பாவனையில் முன்னணி வகிக்கின்றது. இன்று கல்வித் தர நிலையில் யாழ். மாவட்டம் 9 ஆவது இடத்தில் உள்ளது. என்று யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் வி.செல்வராசா தெரிவித்தார்.
|
Thursday, 27 December 2012
A/L results out before Jan 30 - Exams Chief
The results of the 2012 G.C.E. Advanced Level examination will be released before January 30, 2013, confirmed the Commissioner General of Examinations N.J. Pushpakumara. The 2012 A/L examinations commenced on August 06 while paper marking had been delayed due to a strike launched by university lecturers.
A total of 277,671 candidates sat for the examination at 2,093 centres.
Wednesday, 26 December 2012
Visit of Australian OSA members and EDC Meeting at Victoria College
இன்று விக்ரோறியாக் கல்லூரிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து பழைய மாணவர்களான
திரு.அ.சதானந்தமனுநீதி அவர்களும் திரு.க.செந்தில்நாதன் அவர்களும் வருகை
தந்தார்கள். நேற்றைய தினம் அமெரிக்காவிலிருந்து வருகை தந்த
Dr.இராமச்சந்திரன் அவர்களைத் தொடர்ந்து இன்று இவர்கள் இருவரும் கல்லூரியைச்
சுற்றிப் பார்வையிட்டு
மகிழ்ச்சியடைந்தனர். இவர்களுடன் முன்னாள் பிரதிஅதிபர்
திரு.சி.க.இந்திரராஜா(EDC வெளிநாட்டு இணைப்பாளர்) அவர்களும் Dr.கண்ணதாசன் (EDC செயலாளர்) அவர்களும் கலந்து கொண்டு
கல்லூரியின் செயற்பாடுகள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன்
எதிர்வரும் 27-12-2012ம் திகதி வலிகாமம் கல்வி வலயம் நடாத்தும் பௌர்ணமி
விழாவில் எமது கல்லூரி மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்ச்சிகளின்
ஒத்திகைகளையும்
பார்வையிட்டனர்.
See Photos
Tuesday, 25 December 2012
Dr Ramachandiran's Visit
எமது கல்லூரியில் மூத்த பழைய மாணவர்களில் ஒருவரான
Dr.S.இராமச்சந்திரன் அவர்கள் நேற்றைய தினம் நீண்ட
கால இடைவெளியின் பின் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரும் அவரது பாரியாரும்
கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டு தமது கல்விச் சாலையின்
வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தார்கள். "தம்பா" என எல்லோராலும் அழைக்கப்படும் இவர், ஒரு புற்று நோயியல் நிபுணராவார். 2013ம் ஆண்டுக்கான
துடுப்பாட்டப்போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில்
Dr.இராமச்சந்திரன் கலந்து சிறப்பித்தார். இவர் கல்லூரியின் புகழ் மிக்க
துடுப்பாட்ட வீரர் என்ற நிலையில் நேற்றைய பயிற்சிகளின் போது வீராங்கனைகளை
வாழ்த்தி ஆசிகூறியதுடன் அவர்களோடு இணைந்து துடுப்பாட்டத்திலும் களத்
தடுப்பிலும் ஈடுபட்டார். அத்தோடு அவர்களுக்குத் தேவையான ஒரு தொகைப்
பந்துகளையும்
அன்பளிப்பாக வழங்கினார். சிறந்த விளையாட்டு வீரரான இவர், துடுப்பெடுத்து ஆடியும் பந்துவீசியும் தனது பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டார். கல்லூரியின் அபிவிருத்தி தொடர்பாக அதிபருடன் மிகவும் அக்கறையாகக் கலந்துரையாடினார்.
See Photos
Monday, 24 December 2012
EDC Completing another project-Naavalar Children's Park Opening
சுழிபுரம் நாவலர் முன்பள்ளிக்கான சிறுவர் விளையாட்டுத்திடல் இன்று உத்தியோகபூர்வமாக சிறுவர்களின் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது. சுழிபுரம் கல்வியபிவிருத்திக்கழகம் (E D C ) இம்முன்பள்ளியின் நீர்விநியோகத்திட்டத்திற்கு விக்டோரியா கல்லூரியின் யூ கே பழைய மாணவர ஒன்றியத்தினூடாக உதவியிருந்தது எல்லோரும் அறிந்ததே. முன்பள்ளி நிருவாகத்தின் இன்னுமோர் வேண்டுகோளான சிறுவர் விளையாட்டுத்திடல் மிகவும் குறுகிய காலத்துள் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது . இதற்கான நிதியுதவியினை கனடாவைச்சேர்ந்த திருவாளர்களான தயானந்தா, சித்திரானந்தா, ஜெயகாந்தன், தாரகன், சுதர்சன் ஆகியோருடன் அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த திரு செந்தில்நாதனும் வழங்கியுள்ளனர்.
நாவலர் சனசமூக நிலைய தலைவர் திரு நிரஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் E D C தலைவரும் விக்டோரியா கல்லூரியின் அதிபருமான திரு சிறிகாந்தன்
பொருளாளர் திரு ரவீந்திரன், செயலாளர் Dr கண்ணதாசன், அமெரிக்காவிலிருந்து வருகை தந்திருந்த திரு திருமதி Dr ராமச்சந்திரன், அவுஸ்திரேலியாவிலிருந்து வருகைதந்திருந்த திரு மனுநீதி மற்றும் செந்தில்நாதன் EDC வெளிநாட்டு இணைப்பாளரும் ஓய்வுபெற்ற உப அதிபரும் ஆகிய திரு இந்திரராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்களின் உரையைத்தொடர்ந்து Dr ராமச்சந்திரன் நாடாவினை வெட்டி விளையாட்டுத்திடலைத்திறந்து வைத்தார்.
சிறுவர்கள் குதூகலத்துடன் விளையாடியது மனநிறைவைத்தந்தது.
இம்முயற்சியில் ஈடுபட்ட அனைவரும்
பாராட்டுக்குரியவர்கள்.
See Photos
கல்வி பொதுத் தராதர பரீட்சை
கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் 30ஆம் திகதி ஆரம்பம் |
கல்வி பொதுத் தராதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிவரை |
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்
தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு இடமாற்றம்; கடந்த வாரத்தில் இருந்து அமுலில்; கல்வி அமைச்சு |
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் கடந்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. |
வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படித்தான்!
லீhர, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம்
என்பது உயிர்த்தொகுதி, அயனம் - இடம் உயிரினங்களுக்கு இடமானவன் நாராயணன்.
உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில
காலங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறான்.
அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது: ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி
அவை புண்ணிய காலங்கள் எனப்படும். தலங்களில் திருவரங்கம் போல புண்ணிய காலங்களில் ஏகாதசி உயர்ந்தது: ஏகாதசிக்கு ஹரிதனம் (நாராயணனுடைய நாள்) என்னும் பெயர் உண்டு. ஏகாதசி நோன்பினைக் கைக்கொண்டு ஒழுகுவதே வைணவம். எட்டு வயதுக்கு மேல் எண்பது வயது வரை மானிடர் யாவராயினும் இரு பட்சங்களிலும் ஏகாதசியன்று உபவாசம் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி
Sunday, 23 December 2012
மரண அறிவித்தல்-திரு கந்தையா அப்பாப்பிள்ளை
(கொழும்பு பம்பலபிட்டி, கொள்ளுப்பிட்டி பிரபல வர்த்தகர் ராம்ஜிலொட்ச் முதலாளி) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
மலர்வு : 27 மார்ச் 1946 — உதிர்வு : 22 டிசெம்பர் 2012
சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
கந்தையா அப்பாப்பிள்ளை அவர்கள் 22-12-2012 சனிக்கிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த
மகனும், காலஞ்சென்ற கதிரேசு மகேஸ்வரி(சின்ன கொழும்பு ஆச்சி) தம்பதிகளின்
அன்பு மருமகனும்,
தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரி சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), தயாபரன்(இலண்டன்), சிறீதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சிதானந்தசிவம்(சிவதயா தமிழ் அச்சக உரிமையாளர்-சுவிஸ்), ஜெயலட்சுமி(லண்டன்), சாந்தசொரூபி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவாசினி, கேயூரன், தருணீசன் ஆகியோரின் அன்புச் செல்ல அம்மப்பாவும்,
நிர்மிதா, நீவிதா, நிசாங்கன், சந்தோஸ் ஆகியோரின் அன்பு செல்ல அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல்
11.00 மணியிலிருந்து 1.00 மணிவரை 55/1 Peterson Lane, Wellawatta என்ற
முகவரியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் ஈமைக்கிரியைகள் நடைப்பெற்று பின்னர்
3.00 மணியளவில் கல்கிசையில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
Sri Lanka Ministry of Education to implement national teacher transfer policy
Sun, Dec 23, 2012, 09:34 pm SL
Time, ColomboPage News Desk, Sri Lanka.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena said today at a press conference held in Colombo that his Ministry will implement the National Teacher Transfer Policy from the beginning of next year.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena said today at a press conference held in Colombo that his Ministry will implement the National Teacher Transfer Policy from the beginning of next year.
Sri Lanka's G.C.E. (Ordinary Level) students to get full marks for leaked questions
Sun, Dec 23, 2012, 11:50 am
SL Time, ColomboPage News Desk, Sri Lanka.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena has said that the candidates of the G.C.E. (Ordinary Level) examination will have full marks for the 19 questions that were leaked.
Dec 23, Colombo: Sri Lanka Minister of Education Bandula Gunawardena has said that the candidates of the G.C.E. (Ordinary Level) examination will have full marks for the 19 questions that were leaked.
Saturday, 22 December 2012
Colours Night
வட மாகாண பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகளில்
பெற்ற வெற்றிகளை கௌரவிக்கும் வர்ண இரவுகள் (Colours Night) விழா நடைபெற்ற
போது விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் துடுப்பாட்ட அணியினர் சிறப்பாக
கௌரவிக்கப்பட்டனர். வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை
அமைச்சினால் ரூபா.60000 இவ்வெற்றியைப்
பெற்றமைக்காக கல்லூரிக்கு வழங்கப்பட்டது. அதிபர், பயிற்றுநர்,
பொறுபாசிரியர், அணிவீராங்கனைகள் கௌரவம் பெறும் புகைப்படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன.
See Photos
See Photos
Saturday, 15 December 2012
Christmas Party
JVC OSA(UK) would like you to join us on Saturday 15th December 2012 for a Christmas Party at
Weldone Park Middle School
Wyventhoe Ave
South Harrow
HA2 8LS
Party starts from 6PM.
Come and enjoy the Dinner and Dance and reminisce with old
friends.
Admission is free.
Thursday, 13 December 2012
Meeting and Dinner at Principal's House
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களான திரு .உலகநாதன் ,திரு
.ரவிசங்கர் ஆகியோர் எமது விக்ரோறியாக்கல்லூரியின் அதிபரால் அவரது
இல்லத்திற்கு அழைத்து கௌரவிக்கப்பட்டு சுவையான விருந்துபசாரம் அதிபரின்
குடும்பதவரா ல் வழங்கப்பட்ட்து. இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் பழைய
மாணவர்கள் மீது வைத்திருக்கும் நட்புறவினை எடுத்துக்காட்டுகின்றது . மேலும்
இந்த விருதுபசாரத்தில் EDC உறுபினர்களும் கலந்து கொண்டார்கள். இந்த
விருதுபசாரத்தில் பாடசாலையின் கல்வி வளர்ச்சி, அதிபர் எதிர்கொள்ளும்
பிரச்சனைகள், மாணவர் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், பாடசாலை நிர்வாகத்தில்
தலையிடும் வெளிச்சக்திகள், போன்ற கருத்துகள் கலந்து ஆலோசிக்கப்பட்டன. இந்த
விருதுபசாரத்தின் இறுதியில் இனிவரும் காலங்களில் அதிபரால் முன்வைக்கப்பட்ட கல்வியை மேலும் முன் எடுக்கும் பல திடமான திட்டங்களை UK-OSA உறுப்பினர்களும், EDC உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .See Photos
Tuesday, 11 December 2012
சுகயீனம் காரணமாக வர முடியாமல் இருந்த முன்னாள் அதிபர்களை அவர்களின் இல்லத்திற்கு சென்று கௌரவித்தல்.
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் மீள் புனரமைக்கப்பட்ட "Ridge Way
Hall"திறப்பு விழாவில் கௌரவிக்கப்பட இருந்த கல்லூரியின் முன்னாள்
அதிபர்களான திரு .K.K.நடராஜா அவர்களும் ,திரு .S.பத்மநாதன் அவர்களும்
சுகயீனம் காரணமாக வர முடியாமல் இருந்த காரணத்தால் கல்லூரி அதிபர் வ
.ஸ்ரீகாந்தன் ,DR.கண்ணதாசன் ,யுகே பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர்களான திரு
.உலகநாதன் .திரு .ரவிசங்கர் ஆகியோர் முன்னாள் அதிபர்களின் இல்லத்திற்கு
சென்று அவர்களைக் கௌரவித்தார்கள் .
See Photos
Sunday, 9 December 2012
நாடகப் பயிற்சிப்பட்டறை நிகழ்வு
சுழிபுரம்
விக்ரோரியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரசாங்கத்திறன் விருத்தி நாடகப்
பயிற்சிப்பட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பிரதான
மண்டபத்தில் நடைபெற்றது .
புத்தாக்க அரசாங்க இயக்கத்தினால்
நடாத்தப்பட்ட இப்பயிற்சிப் பட்டறை நிகழ்வின் வளவாளர்கள் புத்தாக்க அரசாங்க
இயக்கப் பணியாளரும் ,யாழ்ப்பாண மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்
.ரி .குமரன் அவர்கள் புத்தாக்க அரசாங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரும்
,மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ் .ரி .அருள்குமரன்
ஆற்றுகையாளர் எஸ் .லோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சிப் பட்டறையை
திறம்பட வழிநடாத்தினார்கள் .
இப்பயிற்சிப் பட்டறையில்
நாடகத்தயாரிப்பு படிமுறை ,அரங்கத்திறன்விருத்தி ஆளுமை வளர்ச்சிசார்
பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது .இப்பயிர்ச்சிப் பட்டறையில் தரம் 6
தொடக்கம் உயர்தரம் வரையிலான 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
.பயிற்சிப் பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிர்ச்சிப் பட்டறை
தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போது மிகவும் பயனுள்ள முறையில்
அமைந்ததுடன் புதிய அனுபவங்களையும் அரங்கியல்சார் நுட்பங்களையும்
அறிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்கள் .
Saturday, 8 December 2012
Year End Day
விக்ரோறியாக் கல்லூரியின் 2012ஆம் ஆண்டு நிறைவு நாளன்று முதன்மை நிலை பெற்ற
மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கை வழங்கல், உயர் புள்ளி பெற்றவர்களுக்கான
ஊக்குவிப்புப் பரிசுகள் வழங்கல் நிகழ்வுகள் கல்லூரியின் “றிஜ்வே”
மண்டபத்தில் நடைபெற்ற போது, ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கக்
காப்பாளர் திரு.த.உலகநாதன்
அவர்கள் வருகை தந்து அவற்றை மாணவர்களுக்கு வழங்கி கௌரவித்தார்.
See Photos (Set 1)
See Photos (Set 2)
Friday, 7 December 2012
மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா
06.12.2012 இன்று மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் அதிபர் சு.கணேசதாசன்
தலைமையில் வித்தியாசாலைப்பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
.இப்பரிசளிப்பு விழாவிற்கு இருதயச் சத்திரசிகிச்சை நிபுணர் DR.ஞானமூர்த்தி
-காந்திஜி அவர்களும் ,திருமதி .கிருசாந்தி -காந்திஜி அவர்களும் பிரதம
விருந்தினராக கலந்து கொண்டனர் .சிறப்பு விருந்தினராக முன்னாள் அதிபர் திரு
.கா .சந்திரசேகரன் ,சங்கானை கோட்டக் கல்விப்பணிப்பாளர் செல்வி .அ.ச
.மரியாம்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டனர் .
இப்பரிசளிப்பு விழா
வழக்கம்பரை அம்மன் கோவிலில் இருந்து மாணவர்கள் ,மக்கள் சகிதம் ஊர்வலமாக
வந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது .செல்வி .சி .செவ்வந்தி
அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார் .மருத்துவ பௌதீகவியலாளர் அ .ராசலிங்கம்
நிறுவனர் நினைவுப் பேருரை நடாத்தினார் .சிவஸ்ரீ சுந்தரராசக் குருக்கள்
அருள் ஆசியுரை வழங்கினார் .மற்றும் சிறந்த கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஒயிலாட்டம்
,சிறுவர் நாடகம் ,நாட்டுக்கூத்துடன் மாணவர்களுக்கான பரிசுகள் DR.
கிருசாந்தி -காந்திஜி அவர்களால் வழங்கப்பட்டது .நன்றியுரை திரு .வை
.குகதாசன் அவர்கள் கூறினார் .
இப்பரிசளிப்பு விழாவிற்கு
விக்ரோறியாக் கல்லூரியின் அதிபர் வ. ஸ்ரீகாந்தன் மற்றும் ஆசிரியர்கள் ,EDC
அமைப்பாளர்கள் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின்
உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்
.இவ்விழாவின் போது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்
மெய்கண்டான் மகாவித்தியாலயத்திற்கு இரண்டு கணனிகள் அன்பளிப்புச் செய்வதற்கு
முன்வந்துள்ளனர் .இந்நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது .
Thursday, 6 December 2012
"Ridge Way Hall" திறப்புவிழா
விக்ரோறியாக் கல்லூரியின் 100 வருடத்திற்கு மேலான "Ridge Way Hall" யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்டு மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு இன்று 05.12.2012 திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது .இந்தக் கோலாகலமான திறப்பு விழா அதிபர் திரு வ. ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெற்றது .
இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால உறுப்பினரும் போசகருமான திரு த. .உலகநாதன் அவர்களும் ,எமது ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினரும் கல்லூரி வேலைத்திட்டங்களின் பொறுப்பாளருமாகிய திரு .சி. இரவிசங்கர் அவர்களும் ,மற்றும் முன்னைநாள் அதிபர்கள் திரு .கா. சந்திரபாலன் ,திருமதி .அ வேலுப்பிள்ளை ,மற்றும் கல்லூரி சமூக அங்கத்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் .
இவ்விழாவில் கலந்து கொண்ட எல்லாப் பிரதிநிதிகளும் கௌரவமாக அழைத்து வரப்பபட்டு ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட "Ridge Way Hall" திரு .உலகநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி .சாம்பசிவம் -தேன்மொழி அவர்களால் அன்பளிப்பாக
வழங்கப்பட்ட மின் வழங்கியினைக் கல்லூரிப் பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர்
திரு வி..உமாபதி அவர்கள் தொடக்கி வைத்துள்ளார் .அதன் பின் சிற்றுண்டிச்
சாலை கட்டுவதற்காக விழாவில் கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்களால் அடிக்கல்
நாட்டப்பட்டது .
விழாவின் ஆரம்பத்தில் தலைவர் ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறந்த தலைமை உரை வழங்கியுள்ளார். .அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் சிறப்புரையாற்றினார்.அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிபர்களும் தற்போதைய அதிபரும் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். திரு .உலகநாதன் மற்றும் திரு .இரவிசங்கர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து
கல்லூரி மாணவ முதல்வியும் திரு து ரவீந்திரன் அவர்களும் நன்றியுரை
வழங்கினர். .நல்லதோர் நடன நிகழ்வைத்தொடர்ந்து சிறந்த மதியபோசனம் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவேறியது .
நன்றி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
See Photos
See Videos
More photos and videos coming soon, please visit this site again.
See Photos
See Videos
More photos and videos coming soon, please visit this site again.
Tuesday, 4 December 2012
Admission Card
இவ்வருடம் (2012) க.பொ .த. சாதாரண தர பரீட்ச்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதியட்டை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.. இந்நிகழ்வில் சுழிபுரம் பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு .வி .உமாபதி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களை ஆசீர்வதித்ததுடன் அனுமதி அட்டைகளை வழங்கி சிறப்பித்தார்.
See Photos
See Photos
Sunday, 2 December 2012
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட "RIDGE WAY HALL" இன் திறப்புவிழா .
எதிர்வரும் 05.12.2012 அன்று பல இலட்சம் ரூபா செலவில் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் மீள் புனரமைப்புச் செய்யப்பட்ட "RIDGE WAY HALL" மீண்டும் மாணவர்களின் பாவனைக்கு திறந்து விடப்படவுள்ளது .இத்திறப்பு விழாவிற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .உலகநாதன் அவர்கள் இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொள்ளஉள்ளார் ,அத்துடன் எமது கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் ஆகிய MR.K.K.Nadaraja, MRS.A.Veluppilai, MR.S.Pathmanathan, MR.K.Santhirabalan , இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்பது சிறப்பு அம்சமாகும் .
1905 ஆம் ஆண்டு நிறுவக முகாமையாளர் திரு .C. முதலியார் -செல்லப்பா அவர்களால் கட்டப்பட்ட இந்த "RIDGE WAY HALL" பல இலட்சம் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒரு படிக்கல்லாக இருந்தது .இந்த மண்டபம் நூறு வருடங்களுக்கு மேற்பட்டதால் அதன் தரை மாணவர்களின் பாவனைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது .கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தரையை புனரமைப்பதற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் முன்வந்து செலவினை ஏற்றுக்கொண்டது .
இம்மண்டப வேலைத்திட்டத்தை குறுகிய காலத்தில் செய்து முடிக்க அயராது உழைத்த E.D.C அமைப்பினரும் ,மற்றும் தொல்புரம்"Marble Company"யினரும் சேர்ந்து சிறந்த முறையில் இந்த மண்டபத்தை அமைத்துத் தந்துள்ளனர் .மண்டபத்தின் தரை ,மண்டபத்தின் விறாந்தை ,மேடை மற்றும் கதவுகள் உட்பட மண்டபத்தின் அனைத்துச் சுவர்களுக்கும் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது .
இம்மண்டப வேலைத்திட்டத்தை குறுகிய காலத்தில் செய்து முடிக்க அயராது உழைத்த E.D.C அமைப்பினரும் ,மற்றும் தொல்புரம்"Marble Company"யினரும் சேர்ந்து சிறந்த முறையில் இந்த மண்டபத்தை அமைத்துத் தந்துள்ளனர் .மண்டபத்தின் தரை ,மண்டபத்தின் விறாந்தை ,மேடை மற்றும் கதவுகள் உட்பட மண்டபத்தின் அனைத்துச் சுவர்களுக்கும் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது .
இவ்வனைத்து வேலைத்திட்டத்திற்கும் முழு ஆதரவு தந்த கல்லூரி அதிபர் ,மற்றும் S.D.S அமைப்பினர் ,தொல்புரம்" Marble Company"யினர் இவ் வேலைத்திட்டத்திற்கு அயராது உழைத்த E.D.C அமைப்பினர் யாவருக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது .
See Invitation
Saturday, 1 December 2012
மரண அறிவித்தல்-திரு அம்பலவாணர்
எமது கல்லூரியில் 1960ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டுவரை 38 வருடங்கள் ஆய்வுகூட உதவியாளராக நிறைந்தபணி செய்த திரு.கே.அம்பலவாணர் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
விக்ரோறியாக்கல்லூரிச் சமூகம்
Earlier News
சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் நீண்டகாலமாக (38 வருடங்கள்) ஆய்வுகூட உதவியாளராகக் கடமையாற்றிய ' வாணர்" என அழைக்கப்படும் திரு அம்பலவாணர் இறைபதமடைந்துவிட்டார்.
கல்லூரியின் உயர்தர, இடைநிலை ஆய்வுகூடங்களை சிறப்பாக பராமரித்தும் பாதுகாத்தும் வந்ததுடன் தேவைப்படுகின்றபோதெல்லாம் விஞ்ஞான செய்முறைகளை மேற்கொள்ள துறைசார் ஆசிரியர்களுக்கு மிகுந்த உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்ட இவர் சுமார் பத்து அதிபர்களுக்குக் கீழ் சேவைசெய்து கல்லூரிச் சமூகத்தின் அபிமானத்தைப் பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கின்றோம்.
விக்ரோறியாக்கல்லூரிச் சமூகம்
Earlier News
சுளிபுரம் விக்டோரியாக் கல்லூரியில் நீண்டகாலமாக (38 வருடங்கள்) ஆய்வுகூட உதவியாளராகக் கடமையாற்றிய ' வாணர்" என அழைக்கப்படும் திரு அம்பலவாணர் இறைபதமடைந்துவிட்டார்.
கடமையுணர்வும் நேரந்தவறாமையும் ஆங்கிலப்புலமையும் கொண்ட இவர் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவர்களினதும் அன்பைப்பெற்றவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய யூ கே பழைய மாணவர் சங்கம் இறைவனைப் பிரார்த்திக்கிறது.
நாவலர் முன்பள்ளி புதிய விளையாட்டுத்திடல்
சுழிபுரம் பறாளாய் நாவலர் சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நாவலர் முன்பள்ளியில் இருபதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது ஆரம்பக்கல்வியை கற்று வருகின்றார்கள் .இந்த முன்பள்ளியில் கல்வி கற்று வரும் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டுத்திடல் அமைக்க வேண்டும் என்பது நீண்ட கால கனவாக இருந்தது .இந்த மாணவச்செல்வங்களின் கனவை நனவாக்குவதற்காக E.D.C அமைப்பாளர்களின் அயராத உழைப்பிற்கு விக்ரோறியாக்கல்லூரியின் கனடா பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ,அவுஷ்திரேலிய பழைய மாணவர்கள் சிலரும் சேர்ந்து ஒரு இலட்சத்து நாற்பத்து ஐயாயிரத்து அறுநூறு (1,45600.00)ரூபா பெறுமதியான பணத்தை முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திடல் அமைப்பதற்காக நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். இதற்கான வேலைத்திட்டத்தை E.D.C அமைப்பாளர்கள் வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள் .
கனடா மற்றும் அவுஷ்த்திரேலிய பழைய மாணவர் சங்கத்தின் இந்த சேவையைப் பாராட்டி சுழிபுரம் வாழ் மக்கள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .இவர்களைப்போல் வெளிநாடுகளில் வசித்து வரும் அனைத்து பறாளாய் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் அனைவரும் தம்மால் இயன்ற நன்கொடையை கொடுத்து இந்த மாணவச் செல்வங்களின் உயர்விற்கு உரம் கொடுங்கள் .
தகவல் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .
Contributor's Detail
Name | Canadian Doller | Rupees |
Thayanantha Sivasubramaniyam | 200.00 | 26,000.00 |
Chithiranantha Sivasubramaniyam | 100.00 | 13,000.00 |
Jeyakanthan Swaminathan - Canada | 150.00 | 19,500.00 |
Tharahan Muthucumaraswamy - Canada | 200.00 | 26,000.00 |
Sudharshan Muthucumaraswamy - Canada | 355.00 | 46,100.00 |
Senthilnathan Kanthasamy - Australia | 15,000.00 | |
Total Donated | 145,600.00 | |
Subscribe to:
Posts (Atom)