Thursday 10 January 2013

2014 ஆம் ஆண்டில் இருந்து மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்க அரசு திட்டம்

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணனிகளை வழங்குவதற்கான திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலையிகளிலும் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்களில் இருந்து உயர்தரம் வரையான
மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டத்தினை அமூல்ப் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமையவே இந்த திட்டம் செயற்படுத்தப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கு மடிக் கணணிகளை பயன்படுத்தி கல்வி செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

இது தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
குறித்த இத் திட்டத்திற்காக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் கணனி உற்பத்தி நிலையம் ஒன்றையும் ஆரம்பிக்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, இத்தகையதொரு திட்டத்தை நாட்டில் அமூல்ப்படுத்துவதன் முலம் ஆசிய நாடு என்ற வகையில் எமது நாடு கல்வித்துறையில் அடையும் மிகப்பெரிய வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.