Thursday, 25 April 2013

Zonal Level Elle Champions 2013 (Girls)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற எல்லே சுற்றுப் போட்டிகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பெண்கள் அணி முதலாமிடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் எல்லே போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Zonal Level Elle Champions 2013

வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற எல்லே சுற்றுப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவினர் முதலிடம் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.
See Photo

G.C.E.A/L (2015)- Inauguration Meeting of New Classes

க.பொ.த.உயர்தரத்திற்கான புதிய வகுப்புகளுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள், பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இம்மாணவர்களுக்கான வகுப்பாசிரியர்கள் பெற்றோருடன் கருத்துக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை சகல பாடங்களிலும் இரண்டு மாணவர்கள் அதிவிசேட சித்திகளை (Distinction) பெற்றிருந்தார்கள். அவர்களும் இதன்போது பாராட்டப்பட்டார்கள்.

பிரித்தானியாவில் வசித்து வரும் பிரபல வைத்தியர் கல்லூரிக்கு விஜயம்

UK இல் பணியாற்றி வரும்  பிரபல வைத்தியர் திருமதி .கருணாகரன் அவர்கள் 23/04/13 அன்று தனது பெற்றோர் கற்ற கல்லூரிக்கு  விஜயம் செய்து அங்கு நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்ததுடன் கல்லூரி நிர்வாகத்துடனும்,கல்லூரி அதிபர் வ .ஸ்ரீகாந்தனுடனும் உரையாடியுள்ளார் .இவ் உரையாடலின் பின் வைத்தியர் அவர்கள் விஞ்ஞானப் பாடத்தை வளர்க்க வேண்டும் என்றும் ,கல்லூரியில் கற்கும் மாணவர்கள் அனைத்துத் தரத்தினரும் நல்ல சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு இவ்விடயங்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளார் .அத்துடன் யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடன் இந்த விடயங்கள் பற்றி பேசப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

Wednesday, 24 April 2013

அறிந்ததும் அறியாததும்

கடவுளை பகவான் என்று ஏன் சொல்கிறோம்?
‘பகம்’ என்றால் ஆறு குணங்கள். அதி உன்னதமான ஆறு குணங்களை உடையவன், பகவான். அந்த ஆறு குணங்கள்: எல்லையற்ற ஞானம், எல்லையற்ற பலம், எல்லையற்ற ஐஸ்வரியம், எல்லையற்ற வீரியம், எல்லையற்ற ஆதாரசக்தி, எல்லையற்ற தேஜஸ்.

ஈஸ்வரன் இமாசலத்தின்மீது அமர்ந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இன்று மனிதனால் அதே இமாசலத்தின் மீது பறக்க முடிகிறது. ஆனால் அவனால் அங்கு ஈஸ்வரனைப் பார்க்க முடியவில்லையே?

ஒருவன் தன் காதலியிடம், ‘‘எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறாய்” என்கிறான். அவள் உடனே அவனது இதயத்தைப் பிளந்து பார்த்தால் என்ன ஆகும்?

ஈஸ்வரன் இமாசலத்தின் மீது அமர்ந்திருப்பதாகக் கூறுவது ஓர் உருவகமே. தூய்மையான எண்ணங்கள், தூய்மையான செயல்கள் இவற்றிற்கு வெண்ணிறத்தை அடையாளமாகக் குறிப்பிடுவதுண்டு. அதேபோல் மலைமீது உருவாகும் பனி எந்தவித அசுத்தமும் படியாதது. அத்தகைய வெண்ணிறப் பனிமலை இறைவனின் உறைவிடம் என்பது ஓர் உருவகம் மட்டுமே.
‘இமா’ என்பது தூய்மையான வெண்ணிறத்தைக் குறிக்கிறது. ‘அசலம்’ என்பது அசையாத பொருள். சபலங்களால் மனம் அசைவது மானுடம். அந்த அசைவு ஏதும் இன்றி இருப்பது தெய்வீகம். அதை ‘நிச்சல’ என்றும் கூறுவர். ஆக இமாசலம் என்ற சொல் தூய்மைக்கும் அமைதிக்கும் அசைவற்ற உறுதிக்கும் அடையாளமான சொல். அந்தப் பண்புகள் அமையும்போது இறைவன் அங்கு குடியிருக்கிறான். நம்முடைய இதயத்தில் இந்தப் பண்புகள் அமைந்துவிட்டால் ஈஸ்வரன் அங்கு வந்து தங்குவான். நாமும் அவன் இருப்பதை உணர முடியும்.

பிரம்மச்சரியத்திற்கும் கடவுள் தேடலுக்கும் என்ன சம்பந்தம்? புராணங்களில் வரும் கடவுள் கல்யாணங்கள் எதை வலியுறுத்துகின்றன?

பிரம்மச்சரியம் என்பது ஒருவித சக்தி. விளையாட்டு வீரர்களுக்குக்கூட இது அவசியம் என்று சொல்லப்படுகின்றது. பரீட்சைக்குப் போகும் மாணவனுக்கு இது நல்லது என்பது உண்மை. இறை வழிபாட்டிலும் இதற்கு நல்ல பங்கு உண்டு.

கடவுளர் திருமணங்கள் இல்வாழ்க்கையின் லட்சணங்களைச் சொல்பவை. நெறிப்பட்ட காமம் மிக முக்கியம். பிரம்மச்சரியத்தின் மேன்மையை உணர்ந்து பிறகு திருமணம் செய்து, நெறிப்பட்ட காமம் அனுபவிக்கும்படி புராணங்கள் சொல்கின்றன.

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் என்ன நன்மை? அப்பிரதட்சிணமாக வரக்கூடாதா?

கோயிலில் சுவாமியை பிரதட்சிணம் வருவதால் மனம் தூய்மையடையும். அகங்காரம் குறைந்து பக்தி வளரும். பொதுவாக, போற்றுவதற்குரிய எந்தப் பொருளாக இருந்தாலும் அதை பிரதட்சிணம் செய்வது மரியாதைக்கு அடையாளம்.உயிர் நீத்தவர்களை வழிபடும் போதுதான் அப்பிரதட்சிணம் செய்வது சம்பிரதாயம். கோயில்களில் நிச்சயமாக அப்பிரதட்சிணமாக வரக்கூடாது.

இப்படிக்க்கு
இ.இ.ஓ.போ.ராவ்  
(I.I.O.P.Rav)

அறிந்ததும் அறியாததும்


வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.


இப்படிக்க்கு
இ.இ.ஓ.போ.ராவ்  
(I.I.O.P.Rav)

அறிந்ததும் அறியாததும்

தருப்பைப்புல்

தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

இப்படிக்க்கு
இ.இ.ஓ.போ.ராவ்  
(I.I.O.P.Rav)

Friday, 19 April 2013

District Level Cricket Champion - Under19 Girls

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற பெண்களுக்கான துடுப்பாட்ச் சுற்றுப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணி முதன்மை வெற்றியைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்படடுள்ளனர்.இவர்கள் கடந்த மூன்று வருடங்களாக மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
See Photo

Thursday, 18 April 2013

நாட்டிய நாடகம் - விக்டோரியாக் கல்லூரி முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழித் தினப் போட்டிகளில் நாட்டியநாடகம் நிகழ்ச்சியில் யா/விக்டோரியாக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டிலும் இக் கல்லூரி மாணவர்களே இந் நிகழ்ச்சியில் முதலிடம் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

See Photos

ஆதிவாசிகள் - குழு நடனம் - 03ஆம் இடம்

யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ்மொழித் தினப் போட்டிகளின் போது ஆதிவாசிகளின் குழு நடனம் நிகழ்ச்சியில் யா/விக்ரோறியாக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

See Photo

Sunday, 14 April 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

U.K  பழைய மாணவர் ஒன்றியம்

Lankan shop owner dies in UK

The Sri Lankan owner of a shop in Bedford, East of England who suffered a severe blow to the head in an assault on Sunday night has died.  Vairamuthu Thiyagarajah, 56, received serious head injuries in the incident which happened in the flat above the MK Food and Wine shop in Elstow Road, Bedford, at 5.30pm. He was immediately rushed to Addenbrooke's Hospital in Cambridge in a serious condition where he stayed until his death yesterday afternoon (Thursday, April 11). Mr Thiyagarajah, originally from Sri Lanka, died with his family at his bedside. He leaves a wife, a son, four daughters, three son-in-laws, a daughter-in-law and several grandchildren. The flat was shared by Mr Thiyagarajah and three employees who work at the store, one of whom, Thilak Moham-Raj, 25, was arrested that night for section 18 GBH in connection with the incident. He was later released on police bail but taken into custody again on Wednesday night and charged with GBH with intent. He appeared at Luton Magistrates Court on Thursday and remains in custody. He will appear at Luton Crown Court on April 24.The case is being investigated by the Bedfordshire, Cambridgeshire and Hertfordshire Major Crime Unit and a post mortem has been arranged for Monday. Police are currently working with the CPS in relation to the investigation in the light of Mr Thiyagarajah’s death.

Saturday, 13 April 2013

பாரதி முன்பள்ளிக்கு புதிய கட்டடம்

சுழிபுரம் மேற்கு பாரதி கலைமன்றத்தினால் நடாத்தப்பட்டு வரும் பாரதி முன்பள்ளி 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது .இந்த முன்பள்ளி பல சிரமங்களுக்கு மத்தியில் சுழிபுரம் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் தற்காலிகமாக நடாத்தப்பட்டு வருகின்றது .இதில் 60 திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பக்கல்வியை கற்று வருகின்றார்கள் .
இந்த முன்பள்ளிக்கு ஒரு நிரந்தரக் கட்டடம் தேவை என்பது சுழிபுரம் கிராம மக்களுக்கு ஒரு நீண்ட கால எதிர்பார்ப்பாகும் .இவ் எதிர்பார்ப்பினை பாரதி கலைமன்றத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் ,கல்வி அபிவிருத்தி குழு (EDC) அமைப்பு உறுப்பினர்களும் ,சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உருப்பினர்களும் ஒன்று கலந்து உரையாடல் ஒன்றை நடாத்தினார்கள் .இக் கலந்துரையாடலின் பின் திரு .சிவசுப்பிரமணியம் .ரவிசங்கர் அவர்கள் பாரதி முன்பள்ளிக்கு ஒரு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு இருபது இலட்சம் ரூபாவை முதற்க் கட்ட நன்கொடையாகக் கொடுக்க முன்வந்துள்ளார்.
1500 சதுர அடி பரப்பளவை கொண்ட இக்கட்டடத்தின் அடிக்கல் நாட்டும் விழா 11.04.2013 அன்று சுழிபுரம் பாரதி முன்பள்ளி தலைவர் திரு இரவீந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவிற்கு விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இதற்க்கான வேலைத்திட்டத்தை EDC அமைப்பினர் பொறுப்பெடுத்து செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
"இளஞ்சிறார் வளர்ச்சிக்கு இடமளிப்போம்"
 யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos 

See Slideshow

மரண அறிவித்தல்- ஆசிரியர் ராஜேந்திரன்

Rajendiran Master Past away yesterday evening at 8pm. He worked for Victoria College 25 years, up until his retirement. His funeral is on Saturday 13th April 2013 at 10am.
 See More Details

Friday, 12 April 2013

மரண அறிவித்தல்- திருமதி தங்கரத்தினம் ஆறுமுகசாமி

பண்ணாகம்,  திருமதி  தங்கரத்தினம்  ஆறுமுகசாமி 11.04.13ல்  காலமானார். அன்னார்  அமரர் திரு . சின்னக்குட்டி  ஆறுமுகசாமியின் (மூளாய்  கூட்டுறவு வைத்தியசாலை, முன்னாள்  மருந்துக்களஞ்சியப் பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும், குமரகுருமூர்த்தி, சர்வேஸ்வரி, சோதிமதி, செந்தில், பஞ்சரத்தினம், கலைராணி, குமார், நிர்மலன், பகவதி ஆகியோரின் அருமை தாயாரும், தேவிஇரகுநாதன், ஜெகநாதன், அற்புதராணி, கார்த்திகேசு, மகாதேவன், சாந்தி, வசந்தா, தணிகாசலம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று, திருவடி  நிழல்  மயானத்தில் பூதவுடல்  தகனம்  செய்யப்படும். இவ்வறிவித்தலை  அனைவரும்  ஏற்றுக்கொள்ளும் படி  கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.
தகவல்,  திருமதி தணிகாசலம்  (கண்ணா ) மகள் 
தொடர்புக்கு  00442036019083

மகள்  பஞ்சரத்தினம்  (மலேசியா)  0060333724127 
மகள்  கலைராணி   (இலங்கை) 0094213002712
மகள்  சர்வேஸ்வரி  (இலங்கை) 0094213215056
மகன்  நிர்மலன் (இலங்கை ) 0094773237274

Thursday, 11 April 2013

Zonal Level Volley Ball Champions - Under 17

வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 17வயதுக்குட்பட்ட பிரிவு கரப்பந்தாட்ட போட்டிகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துடன் இரண்டு நேர் சுற்றுகளில் 25:23, 25:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று விக்ரோறியாக் கல்லூரி நடப்பாண்டில் முதல் நிலை வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

Tuesday, 9 April 2013

Parents Day

சென்ற வெள்ளிக்கிழமை இவ்வாண்டுக்கான முதலாம் தவணைச் செயற்பாடுகள் நிறைவுற்று கல்லூரி விடுமுறைகள் ஆரம்பமாகின. அன்றைய தினம் முதலாம் தவணை பரீட்சையில் முதன்மை நிலைகளைப் பெற்ற மாணவர்களும் உச்ச புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டு ஊக்குவிப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அன்று பெற்றோரகள் கல்லூரிக்கு வருகை தந்து தமது பிள்ளைகளின் பரீட்சை விடைத்தாள்களைப் பார்வையிட்டு, வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தேர்ச்சி அறிக்கைகளைப் பெற்றுச் சென்றனர்.

Condolences to Margaret Thatcher

பெண்கள் என்றால் குறுகிய சிந்தனையாளர்கள்... உலக அறிவு இல்லாதவர்கள்.. மென்மை சிந்தை உடையவர்கள் என்ற உலகின் பார்வையை உடைத்து இரும்பு சீமாட்டியாக உலகோரால் போற்றப் பட்டவர். இவரது கடும் போக்கு சிந்தனைகளுக்கும் அப்பால் எதற்க்கும் சமரசம் செய்யாத கொள்கை உறுதி கொன்ற இரும்பு பெண் என்ற பெருமையை பெற்றவர். ஆணாதிக்க சிந்தனைகளால் பெண்கள் உலகில் வாழும் பெரும்பான்மை பெண்கள் முடங்கிக் கிடந்த காலத்தில் ஒரு திண்மை சிந்தனை பெண்ணாக அம்மையார் முன்வந்து செயற்கரிய செயல்களை செய்தமையை ஒரு பெண்ணாக போற்றுகின்றேன். இவர் பெண்ண்களுக்கு  ஒரு சிறந்த உதாரணம். இவர் ஒரு சகாப்தம்.  அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரத்திகின்றோம்.
தலைவர் த.பகவதி -  U.K  பழைய மாணவர் ஒன்றியம் சார்பாக
 

Monday, 8 April 2013

Former Prime Minister Margaret Thatcher (Iron Lady) dies after stroke, aged 87

The "Iron Lady" who dominated British politics for two decades was 87.
Britain's only woman prime minister, the tough, outspoken leader led the Conservatives to three election victories, governing from 1979 to 1990 - which was the longest continuous period in office on the part of a British prime minister since the early 19th century.
It is with great sadness that Mark and Carol Thatcher announced that their mother Baroness Thatcher died peacefully following a stroke this morning.
A grocer's (Shop Keeper’s)  daughter with a steely resolve, she became loved and loathed in equal measure as she crushed the unions, adopted a hard line against republicanism in Northern Ireland and privatised vast swathes of British industry. A great lady she changed the face of British politics, created opportunity for anyone to succeed in the UK. Baroness Thatcher in the 80s kick-started the entrepreneurial revolution, that allowed chirpy chappies to succeed and not just the elite. Ms Thatcher earned a place in history as the first female British prime minister when she entered Downing Street in 1979. Over the next 11 years even her critics admitted that she changed the face of the country.
In recent years her health deteriorated, and she stopped making public appearances. Mrs Thatcher had suffered several small strokes in 2002, and received medical advice against accepting any more public speaking engagements. Her increasingly frail condition when she was seen - especially after the death of husband Denis in 2003 - led to frequent bouts of speculation about her health. Ms Thatcher coped with her final, difficult years with dignity and courage. A fantastic leader who will never be forgotten.

விஜய வருடப்பிறப்பு சுப கருமங்கள்


More Details

Friday, 5 April 2013

மாணவர்களுக்கு பாராட்டுக்கள்


சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் 2012ஆம் ஆண்டு G.C.E O/L பரீட்சைஎழுதிய மாணவர்களின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது .இப்பரீட்சையில் பல மாணவர்கள் திறமைச் சித்திகளை பெற்றுள்ளார்கள் .இவர்களுள் செல்வன் .இராஜதுரை -சிவராமன் ,செல்வி .டிலச்சனா -பன்னீர்ச்செல்வம் இருவரும் எல்லாப்பாடங்களிலும் 9A களையும் எடுத்து எமது கல்லூரிக்கு புகழைத் தேடித்தந்துள்ளார்கள் .அத்துடன் ஆங்கிலப்பிரிவிலும் மாணவர்கள் மிகவும் திறமைச் சித்தி பெற்றுள்ளார்கள் .
இப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது .இம்மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்காக ஊக்கமும் ,ஆக்கமும் கொடுத்த எமது கல்லூரி அதிபர் திரு.வி .ஸ்ரீகாந்தன் அவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது ஒன்றியம் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது .தொடர்ந்தும் எமது மாணவர்களின் கல்விக்கும் ,விளையாட்டிற்கும்  U.K பழைய மாணவர் ஒன்றியம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும் .

நன்றி
காரியதரசி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Thursday, 4 April 2013

G.C.E. ( Ordinary level ) Examination   -   December      2012


          Tamil MediumRajathurai Sivaraman 9A


Dilaxsana Panneerchchelvam 9A


Krishnaverny Yoharaja 8A B

Thiruvarankan Venuraj 8A
C
Niruja Kumaravel 6A 2B C
Ravichchandran Nirojan 5A 3B C
Nilaksiga Thavaraja 5A 3B C
Kathiravel Sayanthan 5A 2B 2C
Jegatheeswaran Nesakumaran 4A 3B C S
Pankaya Suresh 3A 4B C S
Ulaganathan Sriranganathan 3A 3B 2C S
Thiruchchelvan Senthuran 3A 2B 4C
Vaiththiyanathan Kajan 2A 4B 3C
Tharmini  Rajasundharam 2A 4B 3C
Paramanathan Prathees 2A 3B C 3S
Jeyavani Ravindran 2A 2B C 2S
Sivagnanam Suganthan 2A 2B 5C
Rajendram Nirojan 2A B 5C S
Sivaranjini Thirunathan 2A B 3C 2S
Sharmila Laxmanamoorthy 2A
2C 3S


            English mediumTharani Thirunavukarasu 7A B
S
Rubini Balachchandran 6A 2B C
Thirunavukkarasu Anojan 4A 3B C S
Mathuvanthy Balachchandran  4A 2B 2C S
Jasintha Shanmuganathan 2A 4B 2C

Another ISURU Project started at Victoria College.

Under the ISURU Project, education ministry providing two separate toilets for disabled boys & girls. The construction work of this project started yesterday.

See Photos

Scouts Field Trip

ஜனாதிபதி சாரணர் விருதினைப் பெறுவதற்கான செயற்பாடுகளில் ஒன்றான களப்பயணம் செல்லும் வேலைத்திட்டத்தினை எமது கல்லூரியின் நான்கு சாரணர்கள் சென்ற வாரத்தில் முன்னெடுத்தார்கள். காலை எட்டு மணிக்கு ஆரம்பமான இவர்களது இச் செயற்பாடு பதினாறு கிலோமீற்றர்கள் கால்நடையான களப்பயணத்தின் பின்னர் மாலை நான்கு மணிக்கு நிறைவடைந்தது. இறைவழிபாட்டுடன் கல்லூரி அதிபரினால் இச் சாரணர்கள் வாழ்த்தி வழியனுப்பிவைக்கப்பட்டனர்.

Wednesday, 3 April 2013

Zonal Level Cricket Tournament Shedule

05/04/2013
Zonal Level - Girls Cricket Tournament

07/04/2013

Zonal Level - Boys Cricket Tournament

Will be held at Victoria College Ground.

More Detail

Monday, 1 April 2013

சிற்றுண்டிச்சாலையின் வளை வைக்கும் பூசை

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் எமது கல்லூரியின் புதிய சிற்றுண்டிச்சாலையின் வளை வைக்கும் வைபவம் எமது இந்துசமய முறைப்படி பூசைகள் செய்யப்பட்டு எமது கல்லூரியின் அதிபர் தலைமையில் வளை வைக்கப்பட்டுள்ளது .எமது கல்லூரிக்கு அனைத்து வசதிகள் கொண்ட  சிற்றுண்டிச்சாலை தேவை என்பது பல கால எதிர்பார்ப்பாகும் . இத்தேவையை நிறைவு செய்யும் முகமாக சிற்றுண்டிச்சாலை சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகின்றது .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .