Sunday 31 May 2015

நடேசன் சிவசண்முகமூர்த்தி - யாழ்ப்பாணம் சுழிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு பல்துறைக் கலைஞர். திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் மாணாக்கர். கதாப்பிரசங்கம் செய்வதிலும், நாட்டார் பாடல்களை இசைப்பதிலும் தனக்கென ஒரு பாணி வகுத்து பல நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர். இலங்கை வானொலியிலும் கிராமிய இசைக்கு பொறுப்பாக இருந்து நீண்டகாலம் பணியாற்றியிருக்கிறார்.

Monday 25 May 2015

சுழிபுரம் மேற்கு பாரதி கலை மன்றத்தின் 33வது ஆண்டு விழா நிறைவு நாள்

யாழ். சுழிபுரம் பாரதி கலைமண்றத்தின் 33வது ஆண்டு விழா நேற்று (24.05.2015) சுப்பையா அரங்கு வளாகத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வு பாரதி கலை மன்ற தலைவர் த.விமல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதய வடமாகாண சபை உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். இவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் அவர்களும் சங்கானை பிரதேச செயலக கலாச்சார உத்தியேகஸ்தர் திருமதி.நிருபா காசிநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். கௌரவ விருந்தினராக
சுழிபுரம் மேற்கு ஐக்கிய நாணய சங்கத் தலைவர் திரு.சி.துரைசிங்கம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பரிபாலன சபை செயலாளர் திரு.வி.சிவராமன், மற்றும் சுழிபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திருமதி. ப.கிருஸ்ணவேணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த நிகழ்வின் ஆசியுரையினை சுழிபுரம் மேற்கு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் பிரதம குரு கமலராஜ் சர்மா அவர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறுவர் நிகழ்வுகள், மன்ற ஆசிரியர் கௌரவிப்பு, அறநெறிப்பாடசாலை ஆசிரியர் கௌரவிப்பு, 2015 ஆம் ஆண்டு
பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கான கௌரவிப்பு, 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா.தர) மாணவர்களுக்காண கௌரவிப்பு, பாரதி கையெழுத்து சஞ்சிகை வெளியீடு, மாணவர்களின் பட்டிமண்றம், மன்ற உறுப்பினர்களின் நாடகம், மற்றும் இன்னிசை நாடகங்கள் மற்றும் விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்திருந்த கலைஞரால் அபிநய நடனம் என பல்வேறு கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய வடமாகாண சபை
உறுப்பினருமான கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் லண்டன் வாழ் தழிழ் உறவான சுழிபுரத்தைச் சேர்ந்த திரு. ரவிசங்கர் அவர்களால் சுழிபுரம் பெரியபுலோ அண்ணா சனசமூக நிலையத்தினருக்கு நிரந்தர கட்டடம் அமைக்கவென காணி கொள்வனவு செய்யும் பொருட்டு ரூபா.100,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. அத்துடன் பாரதி கலை மன்றத்தின் கட்டட நிதிக்காக திரு ரவிசங்கர் அவர்களினால் வழங்கப்பட்டது ரூபா.100000.00 க்கான காசோலையும் கலைமன்றத்தின் தலைவர் திரு த. விமல் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த 33வது ஆண்டு நிறைவு நிகழ்வு கிராம மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
 
 
 


தகவல் : TamilNewsNet / குளோபல் தமிழ் நியூஸ் / Athirady

Wednesday 20 May 2015


வித்தியாவின் கொலையை கண்டித்து மாபெரும் போராட்டம்.
கலந்துகொண்டு உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள்.
இடம் காலுவன் சுழிபுரம்

See More Photos
நேற்று வலி மேற்கில் வித்தியாவுக்கு ஆதரவாக திரண்ட விக்டோறியா மாணவர்கள்…!!
வலி மேற்கில் வித்தியவுக்கு ஆதரவக இனறு 19.05.2015 திரண்டனர் மாணவர்கள் இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டு வித்தியாவுக்காக மௌன அஞ்சலி செலுத்திய அதே வேளை மாணவர்களது இவ் சாத்வீக போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் வழங்கினார்.

See Photos

சுழிபுரம் பானாவட்டியில் வித்தியாவிற்கு நடந்த கொடூர கொலைக்கு நீநி வேண்டி இளைஞர்களின் வீதி மறிப்பு போராட்டமும் பாடசாலை சிறுவர்கள் உட்பட பொதுமக்களின் போராட்டம்.
See More Photos

தகவல் : Roshani

Tuesday 19 May 2015

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களே பாடசாலை மாணவர்களே வித்தியாவின் சாவுக்கு நல்ல முடிவு எடுங்கள் உங்கலால் மட்டும் தான் முடியும்
மன வேதனையுடன் முன்னால் தமிழ் மாணவர் ஒன்றியம்2001
விக்ரோறியாக் கல்லூரி

தகவல் : Victoreyan Niranjan
மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வடமாகாண பாடசாலைகள் தமது கண்டனங்களை கவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் யா/விக்ரோறியா கல்லூரி மாணவர்கள் தமது கண்டனத்தை மௌனகவனயீர்ப்பு போராட்டத்தின் மூலம் இன்று (19-05-2015) பாடசாலைக்கு முன்பாக வெளிப்படுத்தினார்கள்...!!!


தகவல் : Vellupillai Nadarajah
 

Sunday 17 May 2015

Open air stadium

அமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்த திறந்தவெளியரங்கு கனடா பழைய மாணவர் சங்கத்தினூடாக எமது பாடசாலையில் துரிதகதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சங்கத் தலைவர் திரு பாலச்சந்திரன் அவர்கள் அப்பணிகளை நேரில் பார்வையிட்டுள்ளார். பாடசாலை அபிவிருத்திக்குழு சார்பாக அப்பணிகளை மேற்பார்வையிடும் எந்திரி திரு வி உமாபதி அவர்கள் நடைபெறும் பணி தொடர்பாக தலைவருக்கு விளக்கமளித்துள்ளார். அத்தருணம் பாடசாலையின் ஓய்வூநிலை அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்களும் பாடசாலையின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி அல்லிராணி அவர்களும் பிரசன்னமாயிருந்தனர். 
 
See More Photos

தகவல் : செ. கண்ணதாசன்

Saturday 16 May 2015

கணித பாட கற்றல் மேம்பாட்டுத்திட்டம்



க.பொ.த. (உ./த) - 2017 இல் கற்பதற்கு அனுமதி பெற்றுள்ள மாணவர்களில் கணித பாடத்தில் சித்தி பெறத்தவறிய 14 மானவர்களிற்கான கணித பாட விருத்தி செயற் திட்டமானது எமது பாடசாலை ஓய்வுபெற்ற கணித பாட ஆசிரியை திருமதி .அல்லிராணி அவர்களால் கல்லூரியில் 16/05/2015 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


 
தகவல் : து. இரவீந்திரன்

Friday 15 May 2015

உயர் பெறுபேறுகளைப் பெற்ற நால்வருக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வு



எங்கள் கல்லூரியிலிருந்து 2014ம் ஆண்டு ஆவணி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லவுள்ள மாணவர்களில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற நால்வருக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வு "றிஜ்வே" மண்டபத்தில் இன்று காலை நடை பெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி.ச.சிவகுமார் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியர் திருமதி.அல்லிராணி செல்வநாதன், லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் காப்பாளருமான திரு.உலகநாதன், கனடா பழைய மாணவர் சங்கத்தலைவர் திரு.பாலச்சந்திரன், வடமாகாண கல்வித்திணைக்கள பிரதிக்கல்விப் பணிப்பாளர் 'விக்ரோறியன்' திரு.கைலாசநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உயர்சித்தி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் வருகை தந்நிருந்தனர்.
 
பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவியான செல்வி.இ.கார்த்திகா அவர்களுக்கு முன்னாள் ஆசிரியை திருமதி.செ.அல்லிராணி அவர்களும் கலைப்பிரிவில் உயர்சித்தி பெற்ற மாணவர்களான செல்விகள் அனோஜிதா, சிவகங்கா, கஜலக்சி ஆகியோருக்கு முறையே திருவாளர்கள் உலகநாதன், பாலச்சந்திரன்,கைலாசநாதன் ஆகியோர் மடிக்கணனிகளை வழங்கினார்கள். மற்றும் இந்நிகழ்வில் பல்கலை கழகம் செல்லும்
மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கி ஊக்கிவிக்க வேண்டும் என்ற நற்பணியை ஆரம்பித்த எமது கல்லுரி பழைய மாணவனும் முன்னாள் அதிபருமான  திரு ஸ்ரீகாந்தன் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .

மாகாணக்கல்வித்திணைக்களத்திலிருந்து எமது கல்லூரியின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு வந்திருந்த கல்வி
அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்திக்குழுச் செயலாளர் கலாநிதி.செ.கண்ணதாசன், உறுப்பினர் திரு.து.ரவீந்திரன் ஆகியோரும் நிகழ்வில் பங்கு
கொண்டு சிறப்பித்தார்கள். மாணவர்கள்  சார்பில் செல்வி.அனோஜிதாவும் கல்லூரி சார்பில் பிரதி அதிபர் திருமதி.இந்திரா தவநாயகம் அவர்களும் நன்றியுரை வழங்கினார்கள். இந்நான்கு மடிக்கணனிகளும் அவுஸ்திரேலியா(மெல்போன்) பழைய மாணவர சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கப்பட்டதோடு இவர்கள் வருடாந்தம் இவ்வெகுமதிகளை மாணவர்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

See Photos

தகவல் : செ. கண்ணதாசன்

Sunday 10 May 2015

வாரியும்.. சேவையாளனும்

கொழும்பு கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி ? 5-05-2015  அன்று 
எழுதியது !!!!!!!!!!!!
1) நாட்டைவிட்டு ஓடிய புலம்பெயர்ந்த எவரும் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களுக்கு வழிகாட்டிகளாக இருக்கமுடியாது. மீறி, யாராவது எமக்கு ஆலோசனை தந்தாலும் நாம் அதை ஏற்கப்போவதில்லை.
2) இனிவரும் புலம்பெயர் தலைமுறையினர் ஈழத்தை பொறுத்தவரை பார்வையாளர்களாக இருந்துவிட்டுப்போகட்டும், பங்காளிகளாக முடியாது.
3) கம்பன் கழகம் ஒரு காலத்தில் அரசியலில் ஈடுபடாதது உண்மைதான். ஆனால், “ஜனநாயகம் தளிர்த்திருக்கும் புதிய இலங்கையில்” எமது கழகம் இனி அரசியலும் பேசும்.
4) கம்பன் கழகத்தை கொழுத்த கழகமாக வளர்;த்துவிட்டவர்களும் குறைந்த பட்சம் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் என்ற தகுதியுடையவர்கள் மட்டுமே, கம்பன் கழகத்தை கேள்வி கேட்கமுடியும்.
5) எனது வருகைக்காக புலம்பெயர்ந்த காதிதப்புலிகள் உட்பட அனைவரும் தவமிருக்கவேண்டும். நான் வருவது புலம்பெயர்ந்த மக்களுக்குத்தான் பெருமையே ஒழிய எனக்கல்ல.

வாரிக்கு ஓர் சேவையாளனின் பதில் ...............


கம்பன் கழக தலைவரே 
புலம் பெயர்ந்த மக்கள் இல்லாவிட்டால் சிங்கள அரசாங்கம் மொத்த தமிழ் மக்களையும் அழித்திருப்பார்கள். எங்கள் குரலால்தான் இன்று ஐநா சபை மற்றும் உலக நாடுகள் இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்ததுக்கு நடவடிக்கை எடுகின்றார்கள் மற்றும்,உங்களுக்கு தெரியுமா எத்தனை ஆச்சிரமங்கள் அநாதை குழந்தைகள் இல்லம் எல்லாம் வெளிநாட்டு மக்கள்ளால் நடத்தப்படுகின்றது ஒருக்கால் கிளநொச்சி,முல்லைதீவு,மன்னார் இல் உள்ள இல்லங்களுக்கு சென்று கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் புலம் வாழ் மக்களின் உதவி பற்றி,மற்றும் வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவ சங்கங்களின் உதவியால் உங்கு படிக்கும் மாணவர்கள் எவளவு பயன் பெறுகின்றார்கள்,உதாரணதுக்கு எங்கள் பாடசாலையான சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் 20 தந்தை இழந்த மாணவர்ளின் முழு செலவும் எம்மால் பார்க்கப்படுகின்றது,அது போல் யாழ் பரியோவான் கல்லுரி 100 வன்னி மாணவர்களை பொறுப்பெடுத்து பார்க்கின்றார்கள்.தமிழர் புனர்வாழ்வு கழகம் மற்றும் ஆஸ்திரேலியா மருத்துவ சங்கம் பெரிய அளவில் தாயகத்தில் உதவிகளை செய்கின்றார்கள் இப்படி பல,புலம்பெயர்ந்த அமைப்புக்களால் எம்மக்கள் என்னும் உயிர் வாழ்கிறார்கள், புலம் பெயர்ந்து வாழும் மக்கள் உதவி செய்யாமல் நீங்கள் சொன்ன மாதிரி பார்வையாளர்களாக இருந்தால் போரில் பாதித்த மக்கள் பசியால் இறந்திருப்பார்கள்,உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு மகுடம் அணிந்ததால் எம்மக்களுக்கு என்ன நன்மை அல்லது உங்கள் சங்கத்துக்கு எதாவது கிடைத்ததா (பணம்)மற்றும் நீங்கள் இங்கு வாறதால் எங்களுக்கு பெருமை என்ன ? எங்களுக்கு பெருமை தர நீங்கள் கடவுளா ? நீங்கள் வாறதால் புலம் வாழ் மக்களுக்கு பண செலவு அந்த பணத்தை எம்மக்களுக்கு அளிக்கலாம்,ஆகவே இனிமேல் தயவு செய்து வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் நாட்டில்லிருந்து வருங்கால தலைவர்களுக்கும் மகுடம் சூட்டி உங்கள் சங்கத்தை வளருங்கள்,
வாழ்க வளமுடன்.
இப்படிக்கு 
செந்தில் 
மெல்பேன் ஆஸ்திரேலியா

Friday 8 May 2015


தகவல் : திரு செந்தில் நாதன் (மெல்போர்ன்)

Wednesday 6 May 2015

மரண அறிவித்தல்,- திரு குமாரு சின்னத்தம்பி (News from LankaSri)

பிறப்பு : 11 பெப்ரவரி 1927 — இறப்பு : 5 மே 2015
 
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டன், சுவிஸ் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குமாரு சின்னத்தம்பி அவர்கள் 05-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு இத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்மநாயகி(ஆத்தை) அவர்களின் பாசமிகு கணவரும்,
முகுந்தன், காலஞ்சென்ற அனந்தன், சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, முத்தையா, செல்லமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆதாயராருகா(ருகா), கிரிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகரத்தினம், தெய்வானைப்பிள்ளை, செல்லம்மா, காலஞ்சென்ற கணவதிப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷன், அபிசன், மதுஷன், அபிமன்யு, அனந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
வியாழக்கிழமை 07/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
வியாழக்கிழமை 07/05/2015, 02:00 பி.ப — 04:00 பி.ப
வெள்ளிக்கிழமை 08/05/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
வெள்ளிக்கிழமை 08/05/2015, 02:00 பி.ப — 04:00 பி.ப
சனிக்கிழமை 09/05/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
ஞாயிற்றுக்கிழமை 10/05/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:
Krematorium Nordheim, Halle 1, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland 
கிரியை
திங்கட்கிழமை 11/05/2015, 10:00 மு.ப — 01:00 பி.ப
தகனம்
திங்கட்கிழமை 11/05/2015, 01:00 பி.ப
முகவரி: Krematorium Nordheim, Halle 1, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தகவல்
குடும்பத்தினர்


முகுந்தன் — பிரித்தானியா
தொலைபேசி:+442088422966
செல்லிடப்பேசி:+447534517972

சயந்தன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41523433380
செல்லிடப்பேசி:+41786836797

ருகா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447508056075

கிரு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41788168538

நிலை குலைந்து நிற்கின்றோம்

விக்டோரியா அன்னையின் பாசமிகு மகனை இழந்து தவிக்கிறோம். அமரர் கு சின்னத்தம்பி மிகவும் மூத்த பழைய மாணவன் ஆவார். பலகாலம் மலேசியாவில் வாழ்ந்து எமக்குப் பெருமை சேர்த்தவர்.இவர் சிறந்த உதைபந்தாட்ட வீர்ராவார்.  உதைபந்தாட்டத்தில் இவரது "உதை" க்கு எதிரணியினர் நடுங்குவர்.
1970,1980 களில் எமது கல்லூரி சார்பாக "கோல்" அடிக்கும் ஒவ்வொரு வீரருக்கும் மைதானத்தினுள் ஓடி பரிசில் வழங்குவார். போட்டிக்கு முன்பும்,  போட்டி முடிந்ததும் வீரர்களை அழைத்து ஆலோசனைகள் வழங்குவார். இவரது அன்பான கண்டிப்பும் சிம்மக்குரலும்  எம் விக்டோரியா   அன்னையின் புதல்வர்களை விளையாட்டில் மட்டும் அன்றி கல்வியிலும் சிறந்த முறையில் வழி நடத்தியது.
இவரது புதல்வர்களும் எமது கல்லூரியின் பழைய மாணவர்களே. இவரது இழப்பு எவராலுமே ஈடுசெய்யப்பட முடியாதது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திக்கிறோம்.

தா.கமலநாதன்
யூ கே பழைய மாணவர் ஒன்றியம்
(OSA-UK)

Tuesday 5 May 2015

மரண அறிவித்தல்,

JVC OSA (UK) committee member MR S.Mugunthan's Father Mr Kumaru Sinnaththamby  Aged 88 passed away peacefully at hospital in Switzerland on 05/05/2015.  Dearest husband of Tharmanayaki, much loved Father of Mukunthan (UK), Late Ananthan, Sayanthan (Switzerland), Beloved Grandad of Anushan, Abishan, Mathushan, Abimanju, Ananthinii. He will be sorely  missed by his family and friends. We offer our deepest sympathy to Mr Mugunthan and his family at this time. Funeral details will be informed later

Contact Details
Sayanthan (Switzerland)
0041 52 343 33 80 (H)
0041 78 683 67 97 (M)

Mugunthan (UK)
0044 208 842 2966 (H)
0044 7534 517 972 (M)


தகவல் : திரு  இரவிசங்கர்  - Web Team (OSA-UK)

News from Bharathy Website (www.bharathy.info)


Sunday 3 May 2015

சித்திரா பௌர்ணமி

சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால்அநுட்டிக்கப்படும் ஒரு விரத நாளாகும்.
இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடையசிறப்பு விழாவாகவும் இறந்த அன்னையரின் பிதிர்த் தினமாகவும் அனுட்டிக்க ஆரம்பித்தனர்.
தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர். பின் வீட்டிற்கு வந்து, தாயார் படத்திற்ற்கு உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு உண்பர். பொதுவாக தாயார் இறந்த ஆண்டுத் திவசம் (முதலாம் ஆண்டு) முடியும் வரை இவ்விரதம் அநுட்டிக்கக் கூடாது என்பர். பெண்கள் தர்ப்பணம் பண்ணாது இவ்விரதத்தை அநுட்டிப்பர்.