Friday, 31 January 2014

குடிநீர் வசதிக்கு நிதியுதவி

எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் ஊட்டப்பாடசாலையான சுழிபுரம் ஐக்கிய சங்க வித்தியாசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு சரியான குடிநீர் வசதி இல்லாத நினையில் வித்தியாசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க EDC அமைப்பாளர்கள் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாக அங்கத்தவர் திரு .சி .இரவிசங்கருடன் தொடர்பு கொண்டு இவ்வேலைத்திட்டம் பற்றி விபரித்தார்கள் .இந்த வேலைத்திட்டம் வித்தியாசாலை மாணவர்களின் அத்தியாவசிய தேவையாக இருப்பதினால் திரு .சி .இரவிசங்கர் அவர்கள் இவ்வேலைத்திட்டத்திற்கு  26,105/- ரூபாவை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் .இதற்காக ஐக்கிய சங்க வித்தியாசாலையின் அதிபர் திருமதி .M . குணபாலன் ,மற்றும் ஆசிரியர்கள் ,மாணவர்கள் அனைவரும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .


யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Wednesday, 29 January 2014

Annual Sports meet - 2014 Preparation

எமது கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதன் முன்னோடியாக பெரு விளையாட்டுக்களான துடுப்பாட்டம் (தோற்பந்து, மென்பந்து), உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எல்லே மற்றும் கரம், சதுரங்கம் போன்ற போட்டிகள் இல்லங்களுக்கிடையே நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31-01-2014) மரதன் ஓட்டப் போட்டி நடைபெறவுள்ளது. அத்துடன் திங்கட்கிழமை (03-02-2014) மெய்வன்மைப் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. 10-02-2014ம் திகதி 400 மீற்றர் ஓடுபாதை அளவு கொண்ட மைதானம் மாணவர்களின் பயன்பாட்டுக்காக கையளிக்க பழைய மாணவர் சங்கம் ஊற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த பல வருடங்களாக கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் 400 மீற்றர் ஓடுபாதை கொண்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமுள்ள பழைய மாணவர்களின் பங்களிப்புடன் இத் திட்டம் இவ் வருட இல்ல மெய்வன்மைப் போட்டிகளின் போது கைகூடவுள்ளதையிட்டு கல்லூரிச் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது.

Tuesday, 28 January 2014

Chess Competition

வடமாகாண ஆளுநர் செயலகத்தினால் வட மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படும் சதுரங்கப் போட்டிகளின் முதற்கட்டம் கோட்டமட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்றது. சங்காளைக் கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மேற்படி போட்டிகள் விக்ரோறியாக் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றது. பெருமளவிலான மாணவர்கள் பங்கு கொண்ட இப் போட்டிகள் தனித்தனி வயதுப்  பிரிவுகளாக நடாத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற பத்து மாணவர்கள் வலய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். அதிகளவிலான வெற்றிகளை விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் பெற்றுள்ளனர். போட்டிகளின் நிறைவில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான வெற்றிக் கேடயங்களையும் சான்றிதழ்களையும் ஆளுநர் செயலக அலுவலர்களின் அழைப்பின் பேரில் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் வழங்கி கௌரவித்தார்.

பச்சோந்திகள் தொகுத்தவர் தர்மபுரம் நந்தன்

தங்களின் பின்புலத்தின் நிறத்துக்குத் தங்களை பச்சோந்திகள் மாற்றிக் கொள்வதில்லை. அவ்வாறு மாற்றிக் கொள்கின்றன என்று கூறுவது முற்றிலும் பொய்யான, இட்டுக் கட்டிய, கட்டுக்கதையாகும். அது எப்போதுமே அவ்வாறு செய்வதில்லை; செய்யப் போவதுமில்லை.
பல்வேறுபட்ட உணர்ச்சி நிலைகளின் விளைவாக அவை தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. அந்த நிறம் பின்புலத்தின் நிறத்துடன் ஒத்திருந்தால், அது யதேச்சையாக ஏற்பட்ட நிகழ்வேயாகும்.
பயந்துபோனபோதோ அல்லது பிடிக்கப்படும்போதோ அல்லது சண்டையில் மற்றொரு பச்சோந்தியைத் தோற்கடிக்கும்போதோ அவை தங்களின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன.
க்ரோமாடோபோர்ஸ் (Chromataphores)  எனும் சிறப்பான உயிரணுக்கள் பல அடுக்குகளில், ஒவ்வொன்றும் மாறுபட்ட நிறச் சாயப்பொருள்கள் கொண்டவையாக  பச்சோந்தியின் தோலில் உள்ளன. கிரேக்க மொழியில்   (Chroma) என்ற சொல் நிறம் என்றும்   (pherein)
என்ற சொல் எடுத்துச் செல்வது என்றும் பொருள் அளிக்கும். தோலில் உள்ள இந்த அடுக்குகளை மாற்றி சமன்படுத்தும் போது, பல நிறங்களில் ஒளி எதிரொளிக்கிறது. அப்போது பச்சோந்தியைப் பார்க்கும்போது நடமாடும் நிற சக்கரம் போன்று அது இருக்கும்.
தங்களின் பின்புலத்துக்கு ஏற்றவாறு தங்களின் நிறத்தை அவை மாற்றிக் கொள்கின்றன என்ற நம்பிக்கை  மிக நீண்ட காலமாக தொடர்ந்து நிலவி வந்தது வியப்பானதே. இந்த கட்டுக்கதை கி.மு. 240 ல் ஒரு அதிக புகழ்பெற்றிராத ஒரு கிரேக்க எழுத்தாளர் எழுதிய பொழுது போக்குக் கதைகளிலும், வாழ்க்கை வரலாறுகளிலும் முதன் முதலாக இடம் பெற்றது. அதற்கு ஒரு நூறாண்டுக்கு முன்பு இது பற்றி எழுதியிருந்த செல்வாக்கு பெற்ற எழுத்தாளரான அரிஸ்டாட்டில் பச்சோந்தியின் நிற மாற்றத்துக்கு அதன் அச்ச உணர்வுதான் என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். மறுமலர்ச்சி காலத்தில் இந்த பின்னணிக் கோட்பாடு முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு மறுபடியும் அந்தக் கோட்பாடு உயிர் பெற்று இன்று வரை நிலவுகிறது. பச்சோந்தி பற்றி மக்கள் அறிந்துள்ள ஒரே ஒரு விஷயம் இந்தப் பின்னணி நிற மாற்றமாகவே இருந்து வருகிறது. பலமணி நேரத்திற்கு அசையாமல் இருக்க பச்சோந்தியால் முடியும். இதன் காரணமாகவும், அது மிகவும் குறைவாக உண்பதாலும், அது வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்வதாக பல நூற்றாண்டு காலமாக நம்பப்பட்டு வந்துள்ளது. இதுவும் உண்மையானதல்ல.
தரைசிங்கம் (ground lion) என்ற பொருள் கொண்ட கிரேக்க சொல்தான் Chamelon என்பது. இந்த இனத்தில் மிகச் சிறியது 25 மி.மி. (1 அங்குலம்) நீளமும், மிகப் பெரியது 610 மி.மீ. (2 அடி) நீளமும் கொண்டவை. தனது கண்களைத் தனித்தனியாக  சுழற்றி, ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பார்க்க பச்சோந்தியால் முடியும். ஆனால் அவற்றுக்கு காது கேட்கவே கேட்காது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

தொகுத்தவர் 
தர்மபுரம் நந்தன் 


English Books from Mr.Senthilkumaran

ஆங்கில மொழியில் மாணவர்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுமுகமான ஒரு நிகழ்ச்சித் திட்டம் எமது கல்லூரியில் முன்னெடுக்கப்படுகின்றது. இதற்காக லண்டன் வாழ்  திரு.செந்தில்குமரன் அவர்களின் உதவியுடன் ஐந்நூறுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. இலகு மொழி நடையில் அமைந்த இந்தப் புத்தகங்கள் குட்டிக் கதைகள், கட்டுரைகள், கடிதம் எழுதும் முறைகள் எனப் பல்வேறு வகை சார்ந்தவையாக உள்ளன. கப்பல் மூலம் லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட  இந்நூல்களை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத தலைவர் திரு.வி.உமாபதி அவாகள் கொழும்புத் துறைமுகத்தில் பொறுப்பேற்று கல்லூரியில் ஒப்படைத்தார். சென்ற வாரம் கல்லூரிக்கு வருகை தந்த திரு.செந்தில்குமரன் மேலும் ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கியதோடு நூலகத்தை பயன்படுத்தி வந்த மாணவர்களுடன் ஆங்கில மொழியின் முக்கியத்தவம் மற்றம் அதனை இலகுவாக கற்பது தொடர்பான நுட்பங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறி வழிப்படுத்தினார். எமது கல்லூரியுடன் எவ்வித தொடர்புமற்ற இவர் வழங்கிய இச் சேவையை கல்லூரிச் சமூகம் நன்றியுடன் பாராட்டுகின்றது.
See More Photos

Bicycle & School Equipment - Distribution

எமது கல்லூரியில் பயிலும் 15 மணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் 30 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரியின் றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. SAVE THE CHILDREN அமைப்பின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட இப் பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதில் ”விக்ரோறியன்” ரவிமோகன் (சிறுவர் பாதுகாப்ப, உள சமூக உத்தியோகத்தர், வலி மேற்கு பிரதேச செயலகம்), ”விக்ரோறியன்” சிவரூபன் (கிராமசேவையாளர்) ஆகியோர் பெருமளவில் உதவினர். இப் பொருட்கள் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச செயலக நன்னடத்தை உத்தியோகத்தர் திரு.சிவகுமார் அவர்களும் ”விக்ரோறியன்” ரவிமோகன் அவர்களும் SAVE THE CHILDREN அமைப்பின் சார்பில் செல்வி.எஸ்.தயானி அவர்களும் கலந்து கொண்டனர். பொருளாதார நிலையில் பின்தங்கிய, கல்வி ஊக்கம் உள்ள மாணவர்கள் இதற்கெனத் தெரிவுசெய்யப்பட்டனர்.

Friday, 24 January 2014

20.5 minutes Non stop classical, Unbelievable welcome dance by Victoria college Students

பாரதி முன் பள்ளி திறப்பு விழாவின் போது வியக்கத் தக்க  வரவேற்பு நடனம் ஆற்றிய விக்டோரியா  கல்லூரி மாணவர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட  ஆசிரியர் திருமதி கண்ணதாசன், முன்னாள் விக்டோரியா கல்லூரி  ஆசிரியை திருமதி பங்கயச்செல்வி, விக்டோரியா கல்லூரிஅதிபர் திரு வ.சிறிகாந்தன்  , திரு இரவிசங்கர் மற்றும் கலைஞர்கள்  மாகாண கல்வி அமைச்சர் திரு குருகுலராஜா அவர்களுடன் எடுத்த புகைப்படமும் விக்டோரியா கல்லூரி மாணவிகளின் நடன Videoவும்


See the Video of 20.5  minutes Non stop classical, Unbelievable  welcome dance by Victoria college Students 


To Vinothan and his batch mates

First of all I must thank and appreciate you for initiating this important and urgent project. This has been an on-going issue for the last 20 years. Our Area Development means not only the developing Chulipuram West, East, Centre, Tholpuram, Pannagam and Moolai. Area. Development solely depends on the development in education. Our area education includes, educating the people from adjoining from other villages.If we want to increase the educational success of the Victoria College, we need to go out and improve the educational standards of the above areas and all adjoining villages, as quite a number of students from those areas are studying in our school. 

All of us are expecting good results and achievement from the Victoria College. The results and achievements mainly depend on the foundation of the students admitted to our school. We are so much struggling in this regards as we do not have a primary school in our own. The Victoria College “primary schools” are the feeding schools such as Iykkiya snga saiva vithiyasaalai, Kaddupulam school and Thiruvadinilai school. The only way to achieve our target is by improving the quality of the feeding schools which in turn increase the quality of our intake. 

“Every fat cat likes to catch the fish, but do not want to wet their paws. 

We are really proud for the people like you and your classmates who step forward and are helping the students from these areas in order to increase the education level of the above mentioned school who are really from poor socio economic status. At the end of the day they are going to be the students of the Victoria College.Hence, I promise you that we all will join with you in this historic initiation. As you requested, it is my duty to contribute the money, as a son of mother Victoria, for this project. I hope the other OSA members and other old students of Victoria College will recognise the importance of this project and extend their support. Hope you will generate the required money for this project and succeed without any problem in this important endeavour.


Regards RavisangarTharmapuram Nanthan also sending the wishes for this project.


Thursday, 23 January 2014

கல்விக்கருத்தரங்கும் ,பழைய மாணவர் ஒன்றுகூடலும் 2014.

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் விக்ரோறியாக் கல்லூரியின் உயர்தர மாணவர்களின் வளர்ச்சிக்காக  கல்வியாண்டு (1993,94,95 ) பழைய மாணவர்களால் நடாத்தப்படும் கல்விக் கருத்தரங்கு எதிர்வரும் மாசிமாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் ,  8 ஆம் திகதி சனிக்கிழமையும் காலை 11:00 மணி தொடக்கம் மாலை 15:00 மணி வரை விக்ரோறியாக் கல்லூரி  “Ridge Way “ மண்டபத்தில் இக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது .
இக் கருத்தரங்கை நடாத்துவதற்காக கல்லூரிப் பழைய மாணவர்களான கலாநிதி .வேல்நம்பி  பீடாதிபதி கணக்கியல்துறை யாழ் பல்கலைக்கழகம், திரு .வ .ஜெயரூபன் பொருளியல்  விரிவுரையாளர் பாடசாலை சமூக மேம்பாட்டு திணைக்களம் கொழும்பு ,திரு .ஜெயக்குமார் பொருளியல் ஆசிரியர் வசாவிளான் மத்திய கல்லூரி ,ஆகியோர் இக் கருத்தரங்கில் விரிவுரை செய்ய உள்ளார்கள் .
இக் கருத்தரங்கு 2013 ஆம் ஆண்டில் வெளியான க.பொ .த உயர்தரப் பரீட்சை முடிவை ஆராய்ந்த பின் எமது கல்லூரி மாணவர்கள் கணக்கியல் ,பொருளியல் ஆகிய பாடங்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுத்தர இக் கருத்தரங்கு உறுதுணையாக அமையும் .
கருத்தரங்கின் முடிவில் மாணவர்களின் ஒன்றுகூடல் நடைபெற உள்ளது .இந்த ஒன்றுகூடலில் கலந்து கொள்ள விரும்புவோர் திரு .க .விநோதனுடன் தொடர்பு கொள்ளவும் .தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம் 00447576661978 ,மின்னஞ்சல் vinothk1975@yahoo.co.uk .
இக்கருத்தரங்கை நடாத்த முன் வந்த பழைய மாணவர்களுக்கு எமது நன்றிகள் .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

World Map @ Geography Room


எமது கல்லூரியின் புவியியல் பாட அறையில் பெரிய அளவிலான உலகப்படம் பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் இலகுவாக உலக நாடுகளையும் அவை தொடர்பான விபரங்களையும் அறிவதற்கு இப்படம் உதவுகின்றது. சென்ற மாதம் ஐக்கிய ராச்சியத்திலிருந்து தாய்மண்ணுக்கு வருகை தந்த “விக்ரோறியன்“ சி.இரவிசங்கர் அவர்களால் இது அன்பளிப்புச் செய்யப்பட்டு புவியியல் அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு புவியியல் ஆசிரியர்களும் மாணவர்களும் தமது நன்றியினைத் தெரிவிக்கின்றனர்.
See More Photos

Wednesday, 22 January 2014

கல்வியில் பின்தங்கிய கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சித்திட்டம்

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் 1993, 1994, 1995 கல்வி ஆண்டைச்சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து விக்ரோறியாக்கல்லூரியின் தரம் 6 இல் சேர்த்துக் கொள்ளப்படும் புதிய மாணவர்கள் சிலர் உதாரணமாக காட்டுப்புலம், திருவடிநிலை ஆகிய  ஊட்டப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளபட்டு வருகின்றார்கள் . அவ்வாறு பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களை வைப்பதன் மூலம் அவர்களின் கல்வித்திறனை அதிகரிக்க முடியும் .
அதற்காக கல்வியில் பின்தங்கிய கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சி திட்டம் என்ற வேலை திட்டம் ஊடாக (ஒரு வருடத்திற்கு) செயற்பட திட்டமிட்டுள்ளார்கள் இத்திட்டத்திற்கு மாதம் குறைந்தது பத்தாயிரம் ரூபா (10,000/-) தேவைப்படுகின்றது .இத்திட்டத்திற்கு சிலர் உதவி செய்ய முன்வந்துள்ளார்கள் . மேலும் இந்த நற்சேவைக்கு கல்லூரிப்பழைய மாணவர்கள் யாராவது மனமுவந்து உதவிசெய்ய விரும்பின் யுகே பழைய மாணவர் ஒன்றிய அங்கத்தவர் திரு .க .விநோதன் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் .தொடர்பு கொள்ள வேண்டிய  தொலைபேசி  இலக்கம் 07576661978 உடன் தொடர்பு கொள்ளவும் .இத்திட்டத்திற்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது  முழு ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கின்றது .
                          நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Friday, 17 January 2014

Kambani Amman Account


மரண அறிவித்தல் - பறுவதம் எதிர்நாயகம்


Mohan Chitra - Visit Our College

எமது கல்லூரியின் பழைய மாணவியும் தற்போது அவுஸ்ரேலியாவில் வாழ்பவருமான திருமதி.சித்ரா மோகன் நேற்றைய தினம் தனது பிள்ளைகளுடன் கல்லூரிக்கு வருகை தந்தார்.இவரும் இவரது நண்பர்களும் உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கான உதவுதொகை 28,000/- மாதாந்தம் வழங்கிவருகின்றார். இரு மாதங்களுக்கான உதவித் தொகைகளைக் கையளித்த திருமதி.மோகன் சித்ரா உதவி பெறும் மாணவர்களின் கல்விநிலை மற்றும் வாழ்க்கை நிலைகளைப் பற்றியும் கேட்டறிந்தார். தமக்கு உதவும் இப் பழைய மாணவியை நேரில் கண்ட மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அவரோடு கலந்துரையாடினர். அவுஸ்ரேலியா பழைய மாணவர் மன்றம் அமைத்த ”ஆசைப்பிள்ளை ரீச்சர் ஞாபகார்த்த கணனிக் கூடம்”, UK பழைய மாணவர் ஒன்றியம் புனரமைத்த றிஜ்வே மண்டபம், UK பழைய மாணவர்களும், ஸ்தாபகர் குடும்பமும் கட்டிக் கொடுத்த தேநீர்ச்சாலை, கனடா பழைய மாணவர் ஒன்றியத்தின் உதவியுடன் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தால் உருவாக்கப்படும் 400m ஓடுபாதை கொண்ட மைதானம் மற்றும் இசுறு அபிவிருத்திச் செயற்பாடுகள் யாவற்றையும் இவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதன் பின்னர் சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை மாணவர்களுக்கு தான் வழங்கும் மாதாந்த உதவிப் பணத்தை நேரில் வழங்குவதற்காக அங்கு புறப்பட்டுச்சென்றார்.

Thursday, 16 January 2014

தைப்பொங்கல் விழா - 2014

கல்லூரியில் தைப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  இந்து மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் பொங்கல் பொங்கி சூரிய வழிபாடும் சிவகாமி சமேத நடேசப் பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.  அதிபரும் ஆசிரியர்களும் மாணவர்களும் இவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, 14 January 2014

2003 க.பொ.சாதாரணம் மற்றும் 2006க.பொ.உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

2003 க.பொ..சாதாரணம் மற்றும் 2006க.பொ.த.உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடலானது இன்று யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் நவீன வசதிகள்  கூடிய பிரதான மண்டபத்தில் பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது. விருந்தினராக கல்லூரியின் அதிபர் திரு வ.ஸ்ரீகாந்தன் ஐயா அவர்கள்  கலந்து தனது அனுபவங்களையும்  பகிர்ந்து கொண்டார்.சக பழைய மாணவர்களும் அனுபவங்களையும்  பகிர்ந்தனர்.. அத்துடன் வராத சக மாணவர்கள் சமூகம் அளிக்காதகாரணங்களை  கடிதம், மின் அஞ்சல் ஊடாகவும் தெரிய படுத்தினர். ஒன்றுகூடலானது மாலை 7.00 மணியளவில் இனிதே நிறைவேறியது

Monday, 13 January 2014

அமரர் திரு .கதிரவேலு – நடராஜா அவர்களின் இறுதிச் சடங்கு .

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால  உறுப்பினரும் ஒன்றியத்தின் முன்னாள் பொருளாளருமாகிய அமரர் திரு .கதிரவேலு –நடராஜா அவர்களின் இறுதி கிரியைகள் 12-01-2014 அன்று இலண்டனில் நடைபெற்றது .
அன்னாரின் இறுதிச் சடங்கிற்கு சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள் .அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் சில விக்ரோறியன்கள் வருகை தந்து கிரியையில் கலந்து கொண்டார்கள் .அன்னாரின் பூதவுடல் பேழை  யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் கொடியால் போர்க்கப்பட்டு கொண்டு வரப்பட்டது .அத்துடன் இறுதிச் சடங்கில் அன்னாரின் குடும்பத்தின் சார்பில் அவரின் பேர்த்தியும் ,உறவினர்கள் சார்பில் திரு .த . உலகநாதன் அவர்களும் ,விக்ரோறியாக்கல்லூரி யுகே  பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பில்  ஒன்றியத்தின் உபதலைவர் திரு .சு . ஸ்ரீனிவாசன் அவர்களும் ,விக்ரோறியாக்கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களின் அனுதாபச் செய்தியை ஒன்றியத்தின் காரியதரசி திரு .தா .கமலநாதன் அவர்களும் அன்னாரின் சிறப்புக்களைப் பற்றி எடுத்துரைத்தார்கள் .
மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றிய அங்கத்தவர்களின் சார்பில் “LOYAL VICTORIAN” என்ற மலர்வளையமும் ,கண்ணீரஞ்சலி பிரசுரமும் வெளியிடப்பட்டு அனுதாபம் தெரிவிக்கப்பட்டது .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து விக்ரோறியங்களின் அனுதாபங்கள்
                                         சாந்தி சாந்தி சாந்தி

யுகே பழைய மாணவர் ஒன்றியம் 

See More Photos

Saturday, 11 January 2014


வளர்ச்சி கண்டு வரும் யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரி


" வளர்ச்சி கண்டு வரும் யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரி " எனும் தலைப்பில் 10.01.2014 அன்று தினமுரசு பத்திரிகைஜில் பாடசாலை எவ்வாறு உருவகபட்டது, ஏன் உருவாகியது , ஆரம்பகாலம் தோட்டு இன்று வரையான அதிபர்களின் திறன்கள் மற்றும் அவர்களின் அற்பனிபுகள் போன்றவையும் , மேலும் கடந்த காலம் களின் பாடசாலைகளின் சாதனைகளின் சுருக்கம் பற்றியும், படம்களும் பிரசுரிக்கப் பட்டுள்ளது .

Tuesday, 7 January 2014

மரண அறிவித்தல் திரு கதிரவேலு நடராஜா


 பிறப்பு : 22 பெப்ரவரி 1928 — இறப்பு : 3 சனவரி 2014
யாழ். சுழிபுரம் நெல்லியானைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு நடராஜா அவர்கள் 03-01-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வேதவனம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா லட்சுமியார் தம்பதிகளின் அருமை மருமகனும்,
மனோன்மணி(மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வேதசொரூபி(ரூபி) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சின்னப்பிள்ளை கதிரித்தம்பி அவர்களின் அன்புச் சகோதரரும்,
அனந்தபாலன்(பாலன்- Lucky Window) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
லட்சுமி ரிஷால், சாளினி, பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சயன், சியன்னா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பாலன்(மருமகன்)


 கிரியை
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 12/01/2014, 08:00 மு.ப
முகவரி:    The Centre, Milton Rd, Wallington SM6 9RP, United Kingdom
தகனம்
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 12/01/2014, 10:45 மு.ப
முகவரி:    South London Cremetorium, Streatham Park Cemetary, Rowan Rd, SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
பாலன்(மருமகன்) — பிரித்தானியா
தொலைபேசி:    +442086683980
செல்லிடப்பேசி:    +447956114204
ரூபி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447939822421
கண்ணன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447903497344
நந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447506719750


Monday, 6 January 2014

வதந்திகளை நம்ப வேண்டாம், Victoria College follows the Governments Instructions

அன்பான சுழிபுரம் வாழ் மக்களே வதந்திகளை நம்ப வேண்டாம் !
எமது சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பற்றி சில தொலைக்காட்சிகளிலும் ,இணையத்தளங்கலிலும் ,பத்திரிகைகளிலும் உண்மைக்குப்புறம்பான செய்திகளை பிரசுரித்து வருவது எமது கல்லூரியின் வளர்ச்சியை பாதிக்க வைக்கக்கூட
ியதாக இருக்கின்றது. உண்மை எதுவென்று தெரியாத நிலையில் தவறான செய்திகளை நம்பவேண்டாம் .எமது கல்லூரி கல்வியிலும் ,விளையாட்டிலும் மற்றும் ஏனைய துறைகளிலும் சிறந்த நிலையில் வளர்ச்சி அடைந்து வருவதால் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்களது கல்லூரியில் சேர்ப்பதற்காக போட்டிபோட்டு வரும் நிலையில் எமது கல்லூரி நிர்வாகம் 70 புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கே முதலிடம் என்று அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் ஊட்டப்பாடசாலைகளான ஐக்கியசங்கம் ,பெரியபுலோ,காட்டுபுலம் மற்றும் ஏனைய பாடசாலைகளில் 70 புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு விக்ரோறியாக்கல்லூரியில் கல்வி கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அந்த அடிப்படையில் கல்வித்திணைக்களத்தின் விதியின்படி ஒருபாடசாலையில் நான்கு வகுப்புக்களே இருத்தல் வேண்டும் .ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் அடிப்படையில் 120 மாணவர்களே அனுமதிக்கப்படுவார்கள் .எமது கல்லூரியின் அதிபர் எமது பிள்ளைகளின் நலன் கருதி ஐந்து வகுப்புக்களில் 154 மாணவர்களை அனுமதித்துள்ளார் .மிகுதி சில மாணவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை .இந்நிலையில் எமது கல்லூரி அதிபர் ஏனைய மாணவர்களின் நிலை பற்றி கல்வித்திணைக்களத்துடன் கலத்துரையா டியுள்ளார் .ஆரம்பத்தில் கல்வித்திணைக்களம் அனுமதி கொடுக்கவில்லை .பின் மாணவர்களின் பெற்றோர்கள் கல்வித்திணைக்களத்துடன் போராடியபின் மிகுதி 25 மாணவர்களுக்கும் தற்போது விக்ரோறியாக்கல்லூரியில் கற்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது .
வீண் வதந்திகளை நம்பவேண்டாம் .
*எமது ஒன்றியம் சங்கானை கல்வி மேம்பாட்டு கழகத்தலைவர் திரு .க .சிவானந்தனுடன் இன்று (06/01/2014) தொடர்பு கொண்ட போது கல்லூரியைப் பற்றி வரும் அனைத்து வதந்திகளுக்கும் (குறிப்பாக பதிவு இணையதளத்தில் வந்த செய்திகளுக்கும் ) தனக்கும் எதுவிதமான தொடர்பும் இல்லை என உறுதியாகக் கூறியுள்ளார் . இதை உறுதி செய்ய விரும்புவோர் திரு சிவானந்தனை தொடர்பு கொள்ள விரும்பின் எமது காரியதரிசி திரு தா .கமலநாதன் (0044 7917 801 742) உடன் தொடர்பு கொள்ளவும்.

At the end of the day this is a government school.
If the government authorises us to admit 120 students then our principal can only give admission to 120 students.
If the government authorises us to admit 180 students then our principal can only give admission to 180 students. This is the current situation and we don’t know yet whether we are going to get extra support from the government. (eg Teachers)
No point blaming the principal and college administration. This matter is not in principal’s or college administrations hand.
நன்றி
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

Friday, 3 January 2014

கண்ணீர் அஞ்சலி

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவனும், ,விக்ரோறியாக்கல்லூரி யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஆரம்பகால உறுப்பினரும், எமது ஒன்றியத்தில் பலகாலம் பொருளாளராக செயல்ப்பட்டு வந்தவருமாகிய திரு. க . நடராஜா அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார்.
திரு .க .நடராஜா அவர்கள் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வளச்சிக்காக தனது உடல் நலனையும் பொருட்படுத்தாது எமது ஓன்றியத்திற்காக அயராது உழைத்தவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் எல்லோரையும் வரவேற்கும் சிறந்த பண்பாளர் .நற்சிந்தனையும் ,சேவை மனப்பான்மையும் நிறைந்த இவர் இன்று காலை இறைவனடி சேர்ந்துள்ளார் .இவருடைய இழப்பு எமது ஒன்றியத்திற்கு மட்டுமல்லாது எமது கல்லூரிக்கும் பேரிழப்பாகும் .
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைத்து விக்ரோறியன்கள் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக. அன்னாரின் இழப்பினால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது .
ஆழ்ந்த அனுதாபங்களுடன் விக்ரோறியன்கள் சார்பில்,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

எமது கல்லூரியின் வளர்ச்சியினையும் ஊட்டப்பாட சாலைகளின் முன்னேற்றத்தையும் தடுக்காதீர்கள்.

சுழிபுரம் வாழ் மக்களே ,எமது இனம் கடந்த காலங்களில் பல இன்னல்களையும் பல இழப்புக்களையும் அனுபவித்த நிலையில் எமது மாணவர்களின் கல்வித்தரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு சீர்செய்து மீண்டும் எமது சமுதாயத்தை படித்த சமுதாயமாக எப்படிக் கொண்டுவருவது. என்பது பலரது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த அடிப்படையில் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியம் கல்லூரியில் கல்விகற்கும் மாணவர்களின் கல்வித்திறமைகளையும், விளையாட்டுத் திறமைகளையும் கல்லூரி நிர்வாகத்தின் ஊடாக தெரிந்து கொண்ட நிலையில் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு சமூகமளிக்காது வேலைக்குச் செல்வது ,கல்வியில் அக்கறை செலுத்துவதில்லை ,சிறந்த பெறுபேறுகளை பெறுவவைத்திலை ,விளையாட்டுத்துறையிலும் ஈடுபாடில்லை.இப்படி பல பிரச்சனைகளை அறிந்த நிலையில் எமது ஒன்றியம் இப்பிரச்சனையை எப்படி தீர்க்க முடியும். எமது கல்லூரியில் அக்கறை கொண்ட சிலரின் உதவியுடன் எமது கல்லூரிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் ஆரம்பக்கல்வியின் தரத்தை மதிப்பீடு செய்து தெரிந்தெடுத்தல் வேண்டும். என்ற நிலை ஏற்பட்டது.
ஐந்தாம் தரப்பரீட்சையில் தோற்றும் ஊட்டப்பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் யாவரும் சிறந்த பேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கும் தேர்வு செயப்பட வேண்டும். இந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகத்தின் புள்ளிகள் அடிப்படையில் 70 புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்த கல்லூரி  நிர்வாகத்தின் முடிவை எமது ஒன்றியம் முற்று முழுதாக ஆமோத்தித்தது.
ஏனெனில் ஊட்டப்பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்கள் கடின  முயற்சி எடுத்தப் படித்தல் வேண்டும் .பெற்றோர் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் ,மாணவர்கள் ஒழுங்ககாகப் பாடசாலைக்கு சென்று படித்தல் வேண்டும் ,ஊட்டப்பாடசாளைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கூடிய அளவு அக்கறையை மாணவர்கள் மீது செலுத்த வேண்டும் ,இவ்வாறான பல தீர்வுகளுக்கு மத்தியில் எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலையின் கல்வியை முடிந்த அளவு வளர்ப்பதற்காகவும், மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் ,கல்வி அபிவிருத்திக் குழு ஒன்றை நியமித்து அதன் ஊடாக பல வேலைத்திட்டங்களை ஊட்டப்பாடசாலைகளுக்கு செய்து வருகின்றோம்.
அடுத்த சில வருடங்களில் ஊட்டப்பாடசாலை மாணவர்கள் எல்லோரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெறுவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அந்த அடிப்படையில் எமது ஒன்றியம் சில வேலைத்திட்டங்களை செய்ய திட்டமிட்டோம். எமது வேலைத்திட்டங்களை ,எமது கல்லூரியின் வளர்ச்சியை ,மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடன் சில புத்திஜீவிகள் எமது கல்லூரிக்கு எதிராக பிரச்சனைகளைத் தூண்டி விடுவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் .இப்பிரச்சனையை கொண்டுவருபவர்கள் எத்தனைபேர் எமது கல்லூரியில் கற்று பட்டம் பெற்றவர்கள் .இவர்களுக்கு எப்படி எமது கிராமத்தின் மீது திடீரென அக்கறை ஏற்பட்டது .இவர்கள் எமது கல்லூரிக்கோ ,அல்லது ஊட்டப்பாடசாலைகளுக்கோ எந்த வகையில் நன்மை செய்தார்கள் .என்றுமே இல்லை .இவர்களின் திட்டம் எமது கல்லூரியின் வளர்ச்சியை தடுப்பது ,எமது கிராமத்தின் வளர்ச்சியை தடுப்பதுமே ஆகும் .
யாழ் மாவட்டத்தில் பல பாடசாலைகள் உதாரணமாக ,யாழ் இந்துக்கல்லூரி ,கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகியவற்றில் 160 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தால் மட்டுமே மாணவர்களைத் தேர்வு செய்வார்கள். எமது கல்லூரி மாத்திரம் இதற்கு விதிவிலக்கா? எமது கிராமத்தின் வளர்ச்சிகும்  ,கல்லூரியின் வளர்சிக்கும் இடையூறு ஏற்படாது பாதுகாப்பது விக்ரோறியன்கள் யாவரினதும் கடமையாகும் .
எமது யுகே பழைய மாணவர் ஒன்றியம் ஊட்டப்பாடசாலைகலில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புகளுக்கு செய்துவரும் உதவிகளை தடுத்து நிறுத்தும் முயற்ச்சிகளை முன்னெடுக்க வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொள்கின்றோம் .
                                நன்றி
தாமோதரம்பிள்ளை – கமலநாதன் ,
காரியதரசி ,
விக்ரோறியாக்கல்லூரி ,
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Wednesday, 1 January 2014

அர்த்தம்முள்ள கட்டுரை - மாறுங்கள் அல்லது மாற்றப் படுவீர்கள்.

இக்கட்டுரை அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மட்டும் அல்ல, பொது சேவையில் ஈடுபட்டதாக கூறும் சில எம்மூர்
 தலைவர்களுக்கும் கூட பொருந்தும்.
எழுதியவர்
தர்மபுரம் நந்தன் 


NEED CHANGE  change
மலர்ந்துள்ள இப்புத்தாண்டு இந்த நாட்டில் சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற ஆண்டாகவும் இனங்களுக்கிடையில் நல்லுறவை வளர்க்கின்ற ஆண்டாகவும் அமையவேண்டும் என இறைவனைப் பிரர்ந்திப்பதுடன் வாசகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த உலகில் மற்றமில்லாதது மாற்றம் ஒன்றே என்ற என்கின்ற அறிஞர்களின் தத்துவத்திற்கமைய எமது தமிழ் மக்கள் மத்தியில் நிம்மதியைத் தோற்றுவிக்க அனைவரது மனங்களிலும் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.
அந்தவகையில் வடக்கில் கடந்த 30 வருடப்போர், அதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் இங்குள்ள அதிகாரிகள் மற்றும் இந்த நாட்டில் வழுகின்ற அரசியல் வாதிகளின் மனங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு கடமையாற்றுகின்ற அரசாங்க அதிகாரிகளில் பல மாற்றங்களைக் காணக்கூடியதாகவுள்ளது. இதனால் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அதிகாரமளிக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகள் தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாது இருப்பதுடன் தமது அதிகாரங்களுக்கு மேலாக செயற்படுவதனால் ஒழுக்கவியல் கேட்பாடுகளும் சமூக நடத்தைகளும் புறழ்வடைந்துள்ளன.
அரசாங்க அதிகாரிகள் தமக்குக் கிழ் கடமையாற்றுகின்றவர்களிடமும் சாதாரண மக்களிடமும் தமது சேவைக்குப் பாலியல் இலஞ்சம் கோருவதால் வடக்கில் ஒழுக்கமும் சமூக நன்நடைத்தைகளும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய விடயங்களாக்கப்பட்டுள்ளன.
உயரதிகாரிகளில் பலர் இலஞ்ச ஊழலுக்குப் பெயர்போனவர்களாக மறியுள்ளதால் நேர்மையான அதிகரிகளும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
நெறிகெட்ட சமூகம் வழ்ததற்கான தடயங்களைவிட அழிந்ததற்கான வராலாறுகளே அதிகமாக எழுதப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்காக உழைக்க வேண்டிய பல அரசாங்க அதிகாரிகள் கண்ணிருந்தும் குருடர்களாக மறியிருப்பது எம்மவர்கள் மத்தியில் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
வடக்கின் நிர்வாக அலகுகளைத் திட்டமிட்டு வழிபடுத்துகின்ற உயரதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தகுதி குறைந்தவர்களுக்கு உயர்பதவிகளை வழங்குதல், தமது அரசியலுக்காக குற்றவாளிகளைத் தண்டனைகளிலிருந்து காப்பாற்றுதல், தாமும் குற்றங்களுக்கு உடந்தையாளர்களாக மாறுதல், மக்கள் நலச் சேவைகளை முன்னிலைப்படுத்தி சேவையாற்றாமை, செத்துச்சேர்க்கும் நோக்குடன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற பல செயல்களில் ஈடுபட்டுவருவதால் சமூகத்தில் ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
சட்டத்தைப் பாதகாக்க வேண்டிய சட்டப் பாதுகாவலர்களும் ஒழுக்கமில்லாத அரச அதிகாரிகளுக்கு பாதுகாப்பினை வழங்குவது மேலும் மேலும் குற்றத்தை அதிகரித்துள்ளது.
மலருகின்ற இந்தப் புத்தாண்டிலிருந்து எம்மவர்கள் மத்தியில் மற்றத்தைக் கொண்டுவந்து எமது மக்களின் நிம்மதியான வாழ்வினை உறுதிசெய்ய வேண்டுமாயின் அதிகாரிகளின் மனங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதிகாரிகள் மாறவேண்டும்.
மாற்றமில்லாத மாற்றங்களின் ஊடாக அதிகாரிகளின் மனங்களில் மற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக எம்மை நாமே வலுப்படுத்தி அழிவடைந்து செல்லுகின்ற எமது கலை, கலாசார, பாரம்பரிய, பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
எனவே மலருகின்ற இந்தப் புத்தாண்டு அதிகாரிகளின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதாய் அமையவேண்டும். அல்லது அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்.

ஆதாரம்  Tamil Press