Thursday, 30 April 2015

Thank you Letter from Kaddupulam Government Tamil Mixed School to Melbourne OSA


தகவல் : திரு செந்தில் நாதன் (மெல்போர்ன்)

ஆறுமுக வித்தியாலய அறிவித்தல்

வலிகாமம் கல்வி வலய முறைசாரப் பிரிவிவினர் நடாத்தும் பாடசாலையை விட்டு விலகியோர்க்கான கணினிப் பயிற்சிநெறி ஆறுமுக வித்தியாசாலையில் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது. முற்றிலும் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியில் தற்போது பாடசாலைக் கல்வியைத் தொடராத எவரும் பயிற்சி பெறலாம் பாடசாலை அதிபரிடம் பதிவுகளை மேற்கொள்ளவும்

தகவல் : திரு  இரவிசங்கர்  - Web Team (OSA-UK)

Tuesday, 28 April 2015

BAND வாத்தியக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.


யுகே பழைய மாணவர் ஒன்றியத்தினால் எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி Band வாத்தியக் குழு மாணவர்களுக்கு 79,900 ரூபா பெறுமதியான புதிய சீருடைகள் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க எமது ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ளது. எமது கல்லூரி Band வாத்தியக்குழு மாணவர்கள் எமது கல்லூரி நிகழ்ச்சிகளிலும், எமது கிராமத்தின் நிகழ்வுகளிலும் எல்லோராலும் பாராட்டத்தக்க முறையில் நல்ல சேவையினை ஆற்றிவருகிறார்கள், என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களின் இசை ஆர்வத்திற்கும், நற்சேவைக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
 
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.




தகவல் : தா.கமலநாதன்

Sunday, 26 April 2015

அமரர் சுப்பையா உடையார் ஞாபகார்த்தத் திறந்தவெளி அரங்கு கட்டட நிர்மாண வேலைகள் மிகவும் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றன. 
எமது கல்லூரி வரலாற்றில் ஒரு மைற்கல்லாகத் திகழவிருக்கும் இவ்வேலைத்திட்டம், கனடா பழையமாணவர்சங்கத்தினூடாக, சுழிபுரம் அமரர் சுப்பையா உடையாரின் வாரிசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம், மிகவிரைவில் பூர்த்தியாகி அனைவருக்கும் பயன்தரும்.  
 
See Photos

தகவல் : செ. கண்ணதாசன்

மரண அறிவித்தல்

திரு கிருஸ்ணசாமி சிவச்சந்திரன்
(சிவம்)
பிறப்பு : 6 ஒக்ரோபர் 1981 — இறப்பு : 23 ஏப்ரல் 2015

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்ணசாமி சிவச்சந்திரன் அவர்கள் 23-04-2015 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி(மாயவர்) சற்குணம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பையா தம்பதிகள், முருகேசு சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற நடராஜா, ஆச்சியம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தெய்வானைப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற செல்வசோதி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரன்(பிரான்ஸ்), அம்பிகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரவி(முறுங்கன்), செல்வன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராணி(பிரான்ஸ்), செல்வநாதன்(பிரான்ஸ்), பாரதி(முறுங்கன்), சிவகுமார்(சிவா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தட்ஷாயினி, துர்க்காயினி, தசிகரன், மயூரன், காலஞ்சென்ற சுவேதா, மோகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தர்சிகா, தணுகா, தரணிகா, வைஸ்ணவன், தாரிகா, தர்ஷானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்வின் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
54 Avenue des Friches,
93600 Aulnay-sous-Bois,
France.

தகவல்
குடும்பத்தினர்

சந்திரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33627503825
சிவா — பிரான்ஸ்
தொலைபேசி:+33148661049
செல்லிடப்பேசி:+33651195679
அம்பிகா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33627118061

Saturday, 18 April 2015

நம் பாரம்பரிய கலைகளை நினைவு கொள்ள பண்டிகைகள் நல்ல வாய்ப்பு!-

    தடை தாண்டல், வண்டில் ஓட்டம், தேசிக்காய் கரண்டி, தலையணை அடித்தல், முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் பேச்சுப்போட்டி, நடனங்கள், சிலம்பாட்டம், நகைச்சுவை நாடகம், பட்டி மன்றம், கற்பனை சரித்திர நாடகம் போன்ற அரங்க நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.
சித்திரைக் கொண்டாட்டம் பல இடங்களில் நடைபெறுகின்றது. பலர் பலவாறாக கொண்டாடுகின்றார்கள். அவரவர் சிந்தனைகள் மனப்போக்குகள் கொண்டாட்டங்களில் வெளிப்படும்.
பண்டிகைகள் எல்லாமே அநேகமாக அவரவர் பண்பாடுகளையும் அன்பு நெறி வெளிப்பாட்டையுமே வெளிப்படுத்த அன்று முன்னோர்களால் வகுக்கப்பட்டவை. ஆனால் காலம்செல்ல நவீனயுகத்தில் பண்டிகைகள் பல தமது சுயவடிவத்தை இழந்துபோய்விட்டன.
இன்று இங்கே சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்திய சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமும் நல்லதை சிந்தித்திருக்கின்றார்கள். நமது பண்பாடுகளை நினைவுபடுத்தியிருக்கின்றார்கள்.
தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருக்கக்கூடிய நமது மண்ணில் இன்று அரைகுறை ஆடைகளோடு எங்கிருந்தோ ஒரு தரப்பு ஆடவும் இன்னொரு தரப்பு இசை நிகழ்ச்சி என்ற போர்வையில் கூச்சலையும் கும்மாளத்தையும் விதைப்பதையும் பல இடங்களில் நாம் காண்கின்றோம்..
பண்டிகைகள் எமது சமூகத்தின் பண்பாட்டின் வெளிப்பாடாக அமையவேண்டும். 


வலய மட்ட எல்லே CHAMPION

     APRIL 8 ம் திகதி நடைபெற்ற வலய மட்ட எல்லே போட்டியில் தனராஜ் தலைமையில் களமிறங்கிய 19 வயதின் கீழான ஆண்கள் அணியினர் வலய CHAMPION களாக தெரிவாகியுள்ளனர்.பொறுப்பாசிரியராக திரு.சிவச்செல்வன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.சிவரூபன் , திரு.சுகிர்தன் ஆகியோர் திகழ்கின்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

வலய மட்ட துடுப்பாட்டத்தில் 1 ம் 3 ம் இடங்கள்

    அண்மையில் கடந்த march மாதத்தில்  நடைபெற்ற வலய மட்ட துடுப்பாட்டத்தில் தாரணி தலைமையில் களமிறங்கிய  19 வயதின் கீழான பெண்கள் வலயச் champion   களாக தெரிவாகியுள்ளனர்.   19 வயதின் கீழான ஆண்கள் அணியினர்  3 ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர். பொறுப்பாசிரியராக மதிதரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.சிவரூபன் ,திரு.சுகிர்தன் ஆகியோர் திகழ்கின்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

Wednesday, 15 April 2015

மரண அறிவித்தல்,

Regret to inform that Mr Krishnapillai (nickname Mayavar) father to Mr Sasikumar, current JVC OSA - committee member, sadly passed away in Sri Lanka today.  Funeral details will be updated here later.  Mr Sasikumar  07817 103 378.

வலய மட்ட வலைப் பந்தாட்டத்தில் 2 ம் 3 ம் இடங்கள்

     துஷ்யந்தி தலைமையில் களமிறங்கிய 17 வயதின் கீழான அணியினர் வலய மட்ட வலைப் பந்தாட்டத்தில்   2 ம் இடத்தினை தமதாக்ககிக்கொண்டனர். இதே வேளையில் தர்சனா தலைமையில் 19 இன் கீழான அணியினர்  3 ம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்.விளையாட்டுத் துறை பொறுப்பாசிரியர் சிவச்செல்வன் அவர்களும் திரு.கஜேந்திரன் அவர்களும் இவர்களிற்கான பயிற்சியை வழங்கி வருகின்றனர்

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

கரப்பந்தாட்டத்தில் வலயத்தில் முதலிடம்

     முதற் தடவையாக கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட கரப்பந்தாட்ட இறுதிச் சுற்றில் கோ.கிரிஷாந் தலைமையில் களமிறங்கிய 19 வயதின் கீழான கல்லூரி அணி  கரப்பந்தாட்டத்தில் வலய CHAMPION ஆக தெரிவாகியுள்ளது. இதே சுற்றுப் போட்டியில் மோ.எழில்தரசன் தலைமையில் களமிறங்கிய 17 வயதின் கீழான அணியினர் 2 வது இடத்தினையும் பொ. சர்மிளன் தலைமையில் களமிறங்கிய 15 வயதின் கீழான அணியினர் 3 வது இடத்தினையும் பெற்றுக்கொண்டது.                                                                                                 இவ் அணியினர்க்கு பொறுப்பாசிரியராக திரு.திருக்குமரன் அவர்களும் பயிற்றுவிப்பாளர்களாக திரு.தீபன்,திரு.திருக்குமரன், திரு.சிவச்செல்வன்  ஆகியோர் கடமையாற்றிவருகின்ற்றனர்.

தகவல் : ந.சிவருபன் /து. இரவீந்திரன்

Tuesday, 14 April 2015

நிர்வாக சபைக்கூட்டம் 12/04/2015

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபைக் கூட்டம் 12.04.2015 அன்று திரு . ராஜன் தலைமையில் திரு . உலகநாதன் அவர்களின் இல்லத்தில் ஆக்கபூர்வமான முறையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் வருகை தந்துள்ளார்கள். 
இக்கூட்டத்தில் பல முக்கிய விடையங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. எமது கல்லூரியின் தற்போதைய நிலை குறித்து பல மணி நேர விவாதத்தின் பின் எமது ஒன்றியத்தின் மூத்த உறுப்பினர் திரு . உலகநாதன் அவர்களை எமது கல்லூரிக்கு அனுப்பி  கல்லூரியின் நிர்வாகம், கல்லூரி வளாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மற்றும் பழைய மாணவர் சங்கம் எல்லோருடனும் கலந்து பேசி எதிர்காலத்தில் எமது கல்லூரியின் வளர்ச்சி பாதைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும்படி எமது ஒன்றியத்தால் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 
அத்துடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இணையத்தளம் தொடர்ந்து இயங்குவதற்கு எமது ஒன்றிய நிர்வாகக் குழு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
. மேலும் எமது ஒன்றியம் இருபதாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது. எமது ஒன்றியம்
இந்நிகழ்வாக ஆடிமாத முற்பகுதியில் கலைவிழா ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது. 
அத்துடன் எமது ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக இருபது வருடங்களாக அயராது உழைத்து வரும் ஒன்றிய உறுப்பினர் திரு . த. உலகநாதன் அவர்கள் ஒன்றியத்தின் நிரந்தரப் போஷகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எமது நிர்வாக சபைக்கூட்டம் திருமதி . உலகநாதன் அவர்களின் தமிழ் புத்தாண்டு விருந்தோம்பலுடன் இனிதே  நிறைவேறியது. அவர்களுக்கு எமது ஒன்றியம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. 
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

தகவல் : தா.கமலநாதன்

மரதன் ஓட்டப் போட்டி






14 - 04 - 2015 புது வருடப் பிறப்பு தினமன்று காலை மரதன் ஓட்டப் போட்டியுடன் ஆரம்பமாகி மாலையில் ஏனைய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறும். போட்டி ஒழுங்கமைப்பினை விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் திரு. வ. மகேஸ்வரன் அவர்களுடன் துணைப் பொறுப்பாளர் செல்வி.சி.கஸ்தூரி அவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.



Monday, 13 April 2015

க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

      கடந்த எட்டாம் திகதி எமது கல்லூரியில் க.பொ.த உயர்தர மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று நடை பெற்றது.
   "அறிதல்: கற்றிடக் கற்றல்" எனும் நூலின் ஆசிரியரும், மருத்துவபீட விரிவுரையாளரும், பாடசாலை அபிவிருத்திச்சஙக செயலாளருமான டாக்டர் கண்ணதாசன் இங்கு உரையாற்றினார்.
   அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள் கற்கவேண்டிய முறைகள், பெற்றோரின் பங்கு போன்றன  கலந்துரையாடப்பட்டன.
     இவ்வாறான பல தொடர் கருத்தரங்குகள் தொடர்ந்து நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 
தகவல் : து. இரவீந்திரன்

Easter Sunday in Bharathi children care centre

சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மானவர்கள் பல்வேறு உயர் பதவிகளை அலங்கரிப்பதுடன், உலகம்
பூராவும் பரந்து வாழ்ந்து கல்லூரி அன்னைக்கு புகழ் தேடிக் கொடுக்கின்றனர்.
இவர்கள் யாவருமே ஆங்கில அறிவில் சிறந்து விழங்கக் காரணமானவர்களில் ஒருவர் செல்லத்துரை டீச்சர். 
அண்மையில் அவரது மறைவு எம்மை ஆழ்ந்த  துயரத்தில் ஆழ்த்தியது.
அவரை மறவாத மெல்போன் வாழ் மாணவர்கள் அவர் நினைவாக அனாதைச் சிறுவர்களுக்கு உணவளித்து, தமது குரு விசுவாசதை புலப்படுத்தியமை நெக்குருக வைத்தது.

See Photos


கவனயீர்ப்பு போராட்டம்


பூநகரி கல்விச் கோட்டத்திற்குட்பட்ட கிளி/வேரவில் இந்து மகாவித்தியாலயத்தில் நிலவி வரும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பக்கோரியும் க.பொ.த உயர்தர வர்த்தக பிரிவை ஆரம்பிக்குமாறு கோரியும் பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் இணைந்து பாடசாலைக்கு வெளியே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தை நேற்றுக்காலை 8 மணியிலிருந்து பி.ப. 2 மணி வரை மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னெடுத்தனர்.
கணிதம், வரலாறு, சுகாதாரம், வர்த்தகம் ஆகிய முக்கிய பாடங்களுடன் ஏனைய பாடங்களிற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதாகக் அவர்கள் கூறினர்.
அத்துடன் ஆரம்பப்பிரிவு, இடைநிலைப்பிரிவு ஆகியவற்றில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளதாகவும் இதனால் தமது கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
குறித்த பிரச்சினைக்குரிய தீர்வினை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட கல்வித் திணைக்கள அதிகாரிகள் முன் வரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோசம் எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். 

O/L Results 2015