Tuesday 9 December 2014

ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொது கூட்டமும்

06/12/14 அன்று மாலை 7:00 மணியளவில் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் (ஐக்கியராச்சியம்) வருடாந்த பொதுக் கூட்டம் முன்னாள் தலைவர் திருமதி தணிகாசலம் அவர்களின் தலைமை உரையுடன்  ஆரம்பமானது.
இங்கு பிரதமவிருந்தினராக திரு திருமதி அருள்நாயகம் தம்பதியினர் வருகை தந்திருந்தார்கள். வழக்கம் போல மங்கள விளக்கேற்றலுடன் கூட்டம் தொடங்கப்பட்டு பின் இறைவணக்கம், ஒரு நிமிட மௌன அஞ்சலி இடம்பெற்றது. இதனை அடுத்து கல்லூரி கீதம் இசைகபட்டு மிட்லண்ட் நுண்கலை தமிழ் பாடசாலை மாணவர்களின் தமிழ் தாய் வாழ்த்து பாடலும் அதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு
அருள்நாயகம் அவர்களின் உரையும் இனிதே நடைபெற்றது.
இதற்குப் பின்னர் சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றியத்தின் (ஐக்கியராச்சியம்) முன்னாள் செயலாளர் திரு கமலநாதன் அவர்களின் அறிக்கையும் அதனை தொடர்ந்து கல்லூரியிற்கு செயப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் அவற்றின் வரவு செலவு அறிக்கையையும் திரு ரவிசங்கர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டு திரு தர்மலிங்கம் அவர்களால் வாசிக்கப்பட்டது. பின்னர் லண்டன் தமிழ் பாடசாலை சிறுவர்களின் நடனமும் மிட்லண்ட் நுண்கலை தமிழ் பாடசாலை சிறுவர்களின் பட்டிமன்றமும், "ரம்" வாத்திய இசையும் இடம்பெற்றதைத் தொடர்ந்து புதிய நிர்வாகத் தேர்வு
தெரிவுசெயபட்டு இரவுபோசனதுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

புதிய நிர்வாக விவரம் பின்வருமாறு:-
தலைவர் - திரு ராஜன்
உப தலைவர் - திரு பத்மநாதன்
செயலாளர் - திரு ஜெயச்சந்திரன்
உப செயலாளர் - திரு சீனிவாசகம்
பொருளாளர் - திரு தர்மலிங்கம்
உப பொருளாளர் - திரு வைகுந்தவாசன்
விளையாட்டு துறை பொறுப்பாளர் - திரு கமலநாதன்

ஏனைய நிர்வாக உறுப்பினர்கள்:-
திருமதி தணிகாசலம்
திருமதி சாம்பசிவம்
திரு ஆனந்தகுமார்
திரு சசிகுமார்
திரு அருள்நாயகம்
திரு நீலவண்ணன்
திரு முகுந்தன்
திரு ரவிசங்கர்

See more Photos

Wednesday 3 December 2014

காட்டுப்புலம் பாடசாலை - கலந்துரையாடல்

        காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் 21 /11/2014 அன்று பிற்பகல் 2 : 00  பாடசாலை அதிபர் திரு .செல்வராஜா தலைமையில். சந்திப்பில் மாணவர்களும் பெரும் தொகையான பெற்றோர்களும்
கலந்துகொண்டனர். இச் சந்திப்பினை தொடர்ந்து  திரு.தா.கமலநாதன் அவர்கள் வழங்கிய 21,675 /=  ரூபாவின் மூலம் மாணவர்களிற்கான பரிசு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.படங்களிற்கு கீழ் உள்ள இணைப்பை  சொடுக்குக .....