Saturday 28 April 2012

Dance & Drama team got first place in district level


 
Victoria college Dance & Drama team got first place in District level today (28/04/2012). Vembadi, Hindu ladies and other schools lost. Our school is going to represent the Jaffna District, in future competitions with other districts.

Bus fare is 4000/= today, next competition may be in some other district. So, the transport cost may be 15-20,000/=.   
Latest Update -Regarding the the transport cost to the dance drama, we had to pay extra 1000/= in addition to the 4000/= as a waiting charge.


Friday 27 April 2012

சிற்றுண்டிச்சாலை அமைக்கும் திட்டம்


சிற்றுண்டிச்சாலை அமைக்கும் திட்டம் எமது கல்லூரியில் கல்விகற்கும் ஆயிரத்து இருநூறு மாணவர்கள் நலன் கருதி உருவாக்கப்பட்ட திட்டமாகும் .தற்போது கல்லூரியின் சிற்றுண்டிச்சாலை ஒரு சிறிய அறையொன்றில் நடாத்தப்பட்டு வருகின்றது .இதனால் எமது மாணவர்கள் பெரிய அசௌகரியத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் .அத்துடன் கல்லூரிக்கு வருகின்ற சிறப்பு விருந்தினர்களையும் நல்ல முறையில் உபசரிக்க முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது .அத்துடன் சுகாதார அதிகாரிகளும் கல்லூரிக்கு ஒரு சிற்றுண்டிச்சாலை அத்தியாவசியமான தேவை என்பதனை வலியுறுத்தி உள்ளார்கள் .

Thursday 26 April 2012

வைத்தியக் கலாநிதி ஞா. காந்திஜி கல்லூரிக்கு விஜயம்

கல்லூரியின் பழைய மாணனும் கண்டி போதனா வைத்தியசாலை இருதய சத்திர சிகிச்சை நிபுணரமான வைத்தியக் கலாநிதி ஞானச்சந்திரமூர்த்தி காந்திஜி அவர்கள் எமது கல்லூரிக்கு விஜயம் செய்து உயர்தர வகுப்பு மாணவர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்

Read More

Sunday 22 April 2012

New cupboards donated by Mrs.S.Thenmozhi from UK‏

விக்ரோறியாக் கல்லூரியின் லண்டன் OSA treasurer Mrs.S.Thenmozhi அவர்களின் நிதி உதவியுடன் கல்லூரியின் நூலகத் தேவைக்காக 6 அலுமாரிகள் பெறப்பட்டுள்ளன.
அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன், பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.வி.உமாபதி, செயலாளர் Dr.செ.கண்ணதாசன் ஆகியோர் படத்தில் உள்ளனர்.
 
 

Thursday 19 April 2012

கல்லூரி நூலகத்திற்கு புத்தக அலுமாரி அன்பளிப்பு



இலண்டனில் வசிக்கும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவி திருமதி .தேன்மொழி -சாம்பசிவம் அவர்கள் எமது கல்லூரியின் நூலகப்  பயன்பாட்டிற்குத் தேவையான ஆறு இரும்பாலான புத்தக அலுமாரிகளை வாங்குவதற்குரிய ஒருஇலட்சம் ரூபா பெறுமதியான பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாகக் கொடுத்து உதவியுள்ளார் .இவரின் இந்த நற்பணியைப் பாராட்டி கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்கள் யாவரும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் .
எமது கல்லூரியின் வளர்ச்சி வெளிநாடுகளில் இருக்கும் பழைய மாணவர்களின் கையில் தான் உள்ளது .நாம் படித்த கல்லூரியை மறக்காமல் எமது பெற்ற தாய்க்கு சமமாக கல்லூரியை மதித்து ஏனைய பழைய மாணவர்களும் கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதே யுகே பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளாகும் .

கல்லூரியின் சாரணர் குழுவின் வளர்ச்சிக்கான நன்கொடை


யுகே பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர் திரு.ரவிசங்கர் அவர்கள் எமது கல்லூரியின் சாரணர் குழு எண்பதுகளில் இருந்த தொகையை விட நூறு பேர் கொண்ட ஒரு புதிய சாரணர் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான சாரணர் சீருடைகள் ,பட்டிகள் போன்றவற்றை வாங்கிக்கொடுப்பதற்க்குமுன் வந்துள்ளார் .இதன் முதற்க் கட்டமாக 26 சாரணர்களுக்குத் தேவையான சீருடைகள் பட்டிகள் வழங்கப்பட்டுள்ளன .இதன் காரணமாக இன்னும் பல மாணவர்கள் தாங்களும் சாரணர் குழுவில் இணைய முன் வந்து கொண்டு இருக்கிறார்கள் .இந்த முயற்சி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் எமது கல்லூரி சாரணர் குழு யாழ்மாவட்டத்தில் ஒரு சிறந்த சாரணர் குழுவாக திகழ வேண்டும் என்ற இவரின் முயற்சிக்கு கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர்கள் எல்லோரும் தமது பூரண ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
இது போன்ற திட்டங்கள் வெளிநாடுகளில் வசித்துவரும் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் எல்லோரும்
முன் வந்து செயற்பட வேண்டும் என்பதே யுகே பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளாகும் .

Monday 2 April 2012

கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மைப் போட்டி

674 புள்ளிகளைப் பெற்று சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது

Read More

Sunday 1 April 2012

The Best Results of GCE O/L December - 2012

Mas.Sukumar Priyatharsan 8A B
Mas.Senathirajah Rokulamenan 8A C
Greetings and a very big congratulations to all the students who shown their excellent achievement on the G.C.E O/L examinations.. You all made us very proud and you had set a brilliant example for other students in future. We are sure that Victoria college chullipuram can deliver more and more talented students for the society.on this happy moment we take this opportunity to wish the teachers and parents and mainly the principal who was the captain of the ship to guide these students to archive these milestones.
We as a old students from united kingdom will always there to support the school in its academic and other development areas. Once again we would like to wish these brilliant students and teachers.
Thank you
Old students association (U.K)

Read More

Manchester Piraba donated Rs100,000/=

எமது விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவன் திரு .பாலசுப்பிரமணியம் -பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் அபிவிருத்திக்காக ஒருலட்சம் ரூபா பணத்தை யுகே பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்கியுள்ளார் .அவருக்கும் எமது கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,யுகே பழைய மாணவர் சங்கம் ஆகியோர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

Ellae Champions

01.04.2012 அன்று வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் யாஃவிக்ரோரியாக்கல்லூரி முதலிடத்தைப் பெற்று வலயச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது
Read More

Best A/L Results

No. Of Students, Sat for the Examination 87
Eligible to university entrance 49
Mathuri Jeevamokan (District Level 11)
Banuka Sownthararajan (District Level 16)
Kulararatnarajah Linganesan (district Level 17

Read More