Sunday, 26 July 2015

யாழ். இந்து சஞ்­சிகை வெளி­யீடு

யாழ். இந்து சஞ்­சிகை வெளி­யீடு

download (2)யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியின் 125 ஆவது ஆண்டு விழா நிறை­வை­யிட்டு கல்­லூரி மாணவர் முதல்வர் சபை­யினால்’The leader’ சஞ்­சி­கையும் கல்­லூ­ரியின் 125 ஆவது ஆண்டு விழா மலரும் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தாக கல்­லூரி அதிபர் ஐ.தயா­னந்­த­ராஜா தெரி­வித்தார்.

எனவே பாட­சாலை தொடர்­பான ஆக்­கங்­க­ளை பிர­சு­ரிக்க விரும்­புவோர் அதி­ப­ரி­டமோ அல்­லது பிர­தி­ய­தி­பரும் முதல்வர் சபை பொறுப்பாசி­ரி­ய­ரு­மான சதா நிம­ல­னி­டமோ அல்­லதுprincipal@jhc.lk அல்­லது jhcprefects@gmail.com எனும் மின்­னஞ்சல் முக­வ­ரி­க­ளுக்கோ எதிர்­வரும் 10 ஆம் திக­திக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Friday, 17 July 2015

இசை அர்ப்பணம் -செல்வி.ரஞ்சனி வைரவன்

    ஐ.இ.பழைய மாணவர் ஒன்றிய காப்பாளர் திரு.த.உலகநாதன் அவர்களின் அனுசரணையுடன் பல்கலைக் கழக கற்கையை மேற்கொண்ட விக்டோரியா கல்லூரி பழைய மாணவி  செல்வி ரஞ்சனி வைரவன் அவர்களின் இசை அர்பண நிகழ்வு திரு.அ.சதானந்தவேல் அவர்களின் அனுசரணையில் 19 - 7 - 2015 
ஞாயிறு விக்டோரியா கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

Sunday, 12 July 2015

AGM 2015 (UK)See More Photos

Bavalan Pathmanathan

Dear Victorians

Could I kindly request you  to share this news with all your contacts and encourage them to contribute Bavalan Pathmanathan’s benevolent fund, who has lost his life to the game he love most.

-          “ Bavalan is Cricket & Cricket is Bavalan. Let us unite in his memory to get the game on forever “ –
                                                                                                                                                     Annanth

Following the sad & tragic death of our beloved cricketer, Bavalan Pathmanathan on Sunday 5th July, we  the family members of Bavalan & British Tamil Cricketing Community can now confirm
that Bavalan’s  wake will be at a service  for your last respects before being passed on to his family in Sri Lanka.

The service will take place from 11 am to 2pm on Sunday 12th July 2015 at Memon Hall, 3 Weir Road, Balham London, SW12 0LT.

Clubs are invited to send representation. Could we kindly ask all the BTCL member club cricketers to wear white cricket attire as mark of respect.

If you wish you make a donation these can be made to Bavalan’s Memorial Fund using the following link:
https://crowdfunding.justgiving.com/britishtamil-cricketleague?utm_id=2
Could we kindly request not to organise wreaths as this has been already taken care.

Saturday, 4 July 2015

ஜனாதிபதி சாரணன் விருது வழங்கும் நிகழ்வு- ர.நிரோஜன்

ஜனாதிபதி சாரணன் செல்வன் .ர.நிரோஜன் அவர்களிற்கு ஜனாதிபதி சின்னம் சூட்டும் நிகழ்வு 1-07-2015 அன்று அதிபர் தலைமையில் கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. சின்னம் சூட்டுவதற்காக காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் செ.சற்குணராஜா அவர்களும்,விருந்தினராக தலைமை காரியாலய ஆணையாளர் ந.சௌந்தரராஜன் அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்  வரவேற்பு உரையினை சாரண ஆசிரியர் திரு.நிரஞ்சதுர்கன் அவர்கள் ஆற்றினார் . தொடர்ந்து தலைமை உரையினை கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமாரன் அவர்கள் ஆற்றினார். திரு.சி.ரவிசங்கர் சார்பில் ரூபா.பத்தாயிரதிற்கான  காசோலையினை முன்னாள் அதிபர் திரு .வ.ஸ்ரீகாந்தன் வழங்கி கௌரவித்தார் .நினைவுச் சின்னத்தினை ஐக்கிய இராச்சியம்  திரு.சி.ரவிசங்கர் சார்பில் பழையமாணவனும் சாரணனுமாகிய லண்டனிலிருந்து வருகை தந்திருந்த
திரு.கு.தர்மேந்திரா வழங்கி கௌரவித்தார்.இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ வ.ஸ்ரீகாந்தன் ,சாரணர் தலைமை அலுவலக ஆணையாளர் , காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் ,கல்லூரி பிரதி அதிபரும் சாரண பொறுப்பாசிரியருமான திரு.செ.சிவகுமாரன் பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் ஆகியோர் நிகழ்தினர் .

See More Photos

ஜனாதிபதி சாரணன் விருது வழங்கும் நிகழ்வு- Invitation

Wednesday, 1 July 2015

மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரி இராசதுரை

பிறப்பு : 29 பெப்ரவரி 1936 — இறப்பு : 30 யூன் 2015


யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இராசதுரை அவர்கள் 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரா(கொழும்பு), ராணி(வவுனியா), குமார்(ஜெர்மனி), அப்பன்(புளியங்குளம்), தங்கன்(சுவிஸ்), உதயா(லண்டன்), ரூபி(சுவிஸ்), முகுந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சரஸ்வதி, கண்மணி, கந்தசாமி(லோட்), இராசமணி, மகேஸ்வரி, மற்றும் அன்னேஸ்வரி(அராலி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தில்லைமோகன்(OMOS), ஞானம், பேபி, தனலட்சுமி, செல்வி, தனம், மகேந்திரம், ரஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பெறாமக்களின் அன்பு பெரியதாயாரும்,

பெறாமக்களின் அன்பு சிறியதாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-07-2015 புதன்கிழமை அன்று நண்பகல் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இராசதுரை இல்லம்
A9 வீதி, பரிசங்குளம்,
புளியங்குளம்,
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரூபி(மகள்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:    +41448650576
அப்பன்(மகன்) — இலங்கை
தொலைபேசி:    +94243248357
றம்யா(பேத்தி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:    +447730582038