ஜனாதிபதி சாரணன் விருது வழங்கும் நிகழ்வு- ர.நிரோஜன்
ஜனாதிபதி சாரணன் செல்வன் .ர.நிரோஜன் அவர்களிற்கு ஜனாதிபதி சின்னம் சூட்டும் நிகழ்வு 1-07-2015 அன்று அதிபர் தலைமையில் கல்லூரி ரிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. சின்னம் சூட்டுவதற்காக காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் செ.சற்குணராஜா அவர்களும்,விருந்தினராக தலைமை காரியாலய ஆணையாளர் ந.சௌந்தரராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் வரவேற்பு உரையினை சாரண ஆசிரியர் திரு.நிரஞ்சதுர்கன் அவர்கள் ஆற்றினார் . தொடர்ந்து தலைமை உரையினை கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமாரன் அவர்கள் ஆற்றினார். திரு.சி.ரவிசங்கர் சார்பில் ரூபா.பத்தாயிரதிற்கான காசோலையினை முன்னாள் அதிபர் திரு .வ.ஸ்ரீகாந்தன் வழங்கி கௌரவித்தார் .நினைவுச் சின்னத்தினை ஐக்கிய இராச்சியம் திரு.சி.ரவிசங்கர் சார்பில் பழையமாணவனும் சாரணனுமாகிய லண்டனிலிருந்து வருகை தந்திருந்த
திரு.கு.தர்மேந்திரா வழங்கி கௌரவித்தார்.இந் நிகழ்வில் வாழ்த்துரைகளை முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ வ.ஸ்ரீகாந்தன் ,சாரணர் தலைமை அலுவலக ஆணையாளர் , காங்கேசன்துறை மாவட்ட ஆணையாளர் ,கல்லூரி பிரதி அதிபரும் சாரண பொறுப்பாசிரியருமான திரு.செ.சிவகுமாரன் பழைய மாணவர் சங்க தலைவர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் ஆகியோர் நிகழ்தினர் .