Wednesday 2 October 2013

Prize Giving & Founder's Day 2013

விக்ரோறியாக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் 28-09-2013 சனிக்கிழமை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விக்ரோறியன் திரு.ச.க.குசலகுமாரன் (Director, Department of Management Audit, General Treasury), திருமதி.ராதா குசலகுமாரன் (Assessor, Department of Inland Revenue) பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக விக்ரோறியன் திரு.பொ.ரவிச்சந்திரன் (Deputy Director of Education, Valikamam Zone) கலந்துகொண்டார். நிறுவுநர் நினைவுப்பேருரையை  விக்ரோறியன் கலாநிதி.ந.ரவீந்திரன் (Senior Lecturer, Teachers' College, Maharagama) ஆற்றினார். கல்லூரி மாணவர்களும் பெருமளவிலான பழைய மாணவர்களும் பெற்றோர்களும் விழாவில் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.