Wednesday 31 July 2013

உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஆரம்பம்

2013ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பமாகும் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.  அதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து நூற்று அறுபத்து நான்கு பரீட்சை மத்திய நிலையங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இம்முறை  கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்து ஐநூற்று அறுபது பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும் கல்விப் பொது தராதர  உயர்தரப் பரீட்சையின் போது இடம் பெறும் முறைகேடுகள் குறித்து தெரிவிக்க பரீட்சைகள் திணைக்களம் 24 மணி நேர இணையதள சேவை ஒன்றையும்  நேற்று ஆரம்பித்துள்ளது.

அத்துடன் பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவிப்பதற்கு 011 2784208, 011 2784537, 011 3188350 மற்றும் 1911 ஆகியஎண்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும்.

பரீட்சைக்கு இடையூறாக பொது கூட்டங்கள், ஒலி பெருக்கியை சத்தமாகப் போடுதல் ஆகியவை இடம்பெறக் கூடாது. அவ்வாறு மேற்கொள்ளப்படுமாயின் இது குறித்த தகவல்களை பொதுமக்கள் பொலிசாருக்கு 011 2421111 ,0112784422 ஆகிய எண்களுக்கு தெரிவிக்கலாம்.

மேலும் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதியிலிருந்து செப்ரெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை இடம் பெறும் .

மேலும்  5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு மூன்று இலட்சத்து இருபத்தொன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து ஐந்து பேர் தோற்றவுள்ளனர்.

இதற்காக நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பத்து ஆறு பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tuesday 30 July 2013

சிற்றுண்டிச்சாலை பற்றிய புதிய செய்தி

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டவிக்ரோறியாக் கல்லூரியின் நவீன சிற்றுண்டிச்சாலை தற்போது சிறந்த முறையின்செயற்பட்டு வருகின்றது .கல்லூரி மாணவர்களின் நலன் கருதி யுகே பழைய மாணவர்ஒன்றியத்தின் அங்கத்தவர் ஒருவர் சிற்றுண்டிச்சாலையில் விற்கப்பட்டுக்கொண்டிருக்கும்உணவுப்பொருட்களுக்கு விலைக்கழிவு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் .அதற்குரியசெலவினையும் அவரே பொறுப்பேற்று உள்ளார் .

இவ் விலைக்கழிவுத் திட்டத்தின் மூலம் பெரும்பாலான மாணவர்கள்சிற்றுண்டிச்சாலைக்குச் சென்று சிற்றுண்டிகளை  அருந்தி வருகின்றார்கள்.விற்பனையும் பன்மடங்கு பெருகியுள்ளது .இவ் விலைக்கழிவுத் திட்டம் ஒருசிலவாரங்களுக்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் .
இத்திட்டத்தின் பயனாக கல்லூரிமாணவர்களும் ,விற்பனையாளர்களும் நல்ல பலனை அடைந்துள்ளார்கள் .இதனைகல்லூரிச் சமூகம் நன்றாக வரவேற்கின்றது .யுகே பழைய மாணவர் ஒன்றியமும் இத்திட்டத்தினை வரவேற்கின்றார்கள்.

Monday 29 July 2013

Farewell Party

எமது கல்லூரியிலிருந்து வன்னி மாவட்டத்திற்கும் தீவக வலயத்திற்கும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வினை கல்லூரி ஆசிரியர் நலன்புரிக் கழகம் இன்று சிறப்பாக நடாத்தியது. கழகத்தின் தலைவர் திரு.கு.ஜேம்ஸ்பஸ்ரியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், இடமாற்றலாகிச் சென்றவர்களின் சேவையைப் பாராட்டிப் பேசினார்கள். திருமதி பங்கயச்செல்வி முகுந்தன் (சங்கீதம்), திருமதி ஜெகதீஸ்வரி சுதர்சன் (ஆங்கிலம்), திரு கணபதிப்பிள்ளை ஸ்ரீஸ்கந்தமூர்த்தி (சித்திரம்), திருமதி.வி.ராதிகா (நடனம்), செல்வி.சி.மைதிலி (கிறிஸ்தவம்) ஆகிய ஆசிரியர்கள் பிரியாவிடை பெற்றவர்களாவார். நிகழ்வின் நிறைவில் இவ்வாசிரியர்கள் அன்பளிப்புக்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


Sunday 28 July 2013

மாலை அமுது நிகழ்வு

ஆதிஸ் தங்க நகை மாளிகையின் ஆதரவில் சுழிபுரம் விக்ரோரியா கல்லுரி பழைய மாணவ சங்கம் மெல்பேன் கிளை நடத்தும் வருடாந்த இராபோசன விருந்தான மாலை அமுது நிகழ்வு எதிவரும் ஆகஸ்ட் மாதம் 24 திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு DANDENONG மென்சஸ் அவெனியுவில் உள்ள மென்சஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளன.இன்னிகழ்வில் மெல்பேனில் வதியும் தலை சிறந்த பாடகர்களின் பழைய புதிய சினிமா பாடல்கள் அடங்கிய இனிய காண நிகழ்வு  இடம்பெறும்.இந்நிகழ்வுக்கு மெல்பேன் வாழ் தமிழ் மக்களை வந்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு
தலைவர் திரு.இளங்குமரன் (ராஜா) 0408966200
முன்னாள் அதிபர் திரு. அருணாசலம் 97924296
செந்தில் 0421372989

Thursday 25 July 2013

கல்லூரிக்கு விஜயம் செய்த பழைய மாணவன்

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவரான திரு .வினோதன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரான சுளிபுரத்திற்கு சென்றிருந்தபோது தான் கல்வி கற்ற தனது  சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்கும் சென்று கல்லூரி நிலவரங்களை கண்டு அறிந்ததுடன் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்ட புதிய சிற்றுண்டிச்சாலை திறப்புவிழாவில் கலந்து கொண்டதுடன் திறப்பு விழாவின் செலவினையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் .அத்துடன் கல்லூரியின் கல்லூரி அதிபர் வழங்கிய விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் .
திரு .திருமதி வினோதன் அவர்களுக்கு கல்லூரிச் சமூகமும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos


Sunday 21 July 2013

பறாளாய் பிள்ளையார் அன்னதானம்

இன்று பறாளாய் பிள்ளையார் சங்காபிசேடம் முன்னிட்டு குமார் அண்ணா வீட்டில் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது இதில் பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சுழிபுரம் வயலில் விளைந்த மொட்ட கருப்பன் அரிசியில் சமைத்த அமுத சோறு சாப்பிட சாப்பிட என்ன சுவை , சுழிபுரம் போன மாதிரி.

சோழியபுரான்.......

Grade - 05 Scholarship Exam - Preparation Seminar

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்தும் செயலமர்வு எமது கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. எமது கல்லூரி ஊட்டல் பாடசாலைகளின் மாணவர்கள் உட்பட வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இச் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். சக்தி FM மற்றும் செலான் வங்கி என்பவற்றின் அனுசரணையுடன்  இடம்பெற்ற இப் பரீட்சை வழிகாட்டல் நிகழ்வின் வளவாளர்களாக வவுனியா மத்திய மகா வித்தியாலய ஆசிரியரும் விக்ரோறியனுமாகிய திரு.ச.செல்வரத்தினம் உட்பட பலர் பங்குகொண்டனர். சங்கானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர், எமது கல்லூரியின் அதிபர், ஆசிரிய ஆலோசகர் போன்றோர் மங்கல விளக்கேற்றி, ஆசியுரை வழங்கி செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர்.

Saturday 20 July 2013

More ongoing Isuru Projects

எமது கல்லூரிக்கு மத்திய கல்வி அமைச்சினால் இசுரு அபிவிருத்தித் திட்டத்ிதன் கீழ் மாணவர்களுக்கும் மாணவிகளுக்குமென தனித்தனியான மலசலகூடத் தொகுதியும் ஆசிரியர்களுக்கும் விசேட தேவை உள்ளவர்களுக்குமான மலசலகூடத் தொகுதியும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் கல்லூரியின் பிரதான வாயில் அகலமாக்கப் பட்டு புதிய நுழைவாயிலும் பாதுகாப்பு அலுவலர் அறையும் நிர்மாணிக்கப்படுகின்றன. அடுத்த மாதம் இரண்டாம் வாரமளவில் இவ் வேலைகள் நிறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Water Tank Black Board News



Monday 15 July 2013

நவீன சிற்றுண்டிச்சாலை திறப்புவிழா


சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் நவீன சிற்றுண்டிச்சாலை இந்து சமய சம்பிரதாய முறைப்படி கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ளது .
யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் கட்டிமுடிக்கப்பட்டுள்ள எமது கல்லூரியின் நவீன சிற்றுண்டிச்சாலை அதிபர் .ஸ்ரீகாந்தன் தலைமையில் பிரதம விருந்தினராக யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் சிரேஸ்ட உறுப்பினர் திரு .உலகநாதன் ,திரு .வினோதன் ஆகியோரும் முன்னாள் அதிபர்கள்  திரு.இந்திரராஜா ,திருமதி .வேலுப்பிள்ளை மற்றும் பழைய மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள் .இச்சிற்றுண்டிச்சாலை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடையமே ஆகும் .இதற்காக கல்லூரியின் நிறுவனர் குடும்பத்தினர் பெரும் பங்களிப்பினையும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் Dr.T.சிவஞானம் அவர்களும் ,மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியமும் தங்களது பங்களிப்பினைச் செய்துள்ளார்கள் .இவ் வேலைத்திட்டத்தை செய்து முடிப்பதற்காக SDS ,EDC அமைப்பாளர்களும் குறிப்பாக திரு .விஜயகுமார் ,திரு .ரவீந்திரன் ,Dr.கண்ணதாசன் ஆகியோர் அரும் பாடுபட்டு இவ்வேலைத் திட்டத்தை செய்துமுடித்துள்ளார்கள் .இந்த நிகழ்வில் முதலில் கல்லூரி அதிபர் திரு . .ஸ்ரீகாந்தன் அவர்கள் சிறப்புரை ஆற்றியுள்ளார் அத்துடன் பிரதமவிருந்தினர் அவர்களும் ,சிறப்பு விருந்தினர் அவர்களும் புதிய சிற்றுண்டிச்சாலையின் சிறப்புப்பற்றி உரையாற்றி உள்ளார்கள் .திரு .திருமதி .வினோதன் அவர்கள் சம்பிரதாய பூர்வமாக சிற்றுண்டிச்சாலைக்கு புதிய பானையில் பால்பொங்கி ,பிரதம விருந்தினரான திரு .உலகநாதன் அவர்கள் நாடா கத்தரித்து சிற்றுண்டிச்சாலையை மகிழ்வுடன் திறந்து வைத்தார் .திரு .இந்திரராஜா அவர்கள் பெயப்பலகையின் திரைநீக்கம் செய்து வைத்தார் .முன்னாள் அதிபர் திருமதி .வேலுப்பிள்ளை அவர்கள் தான் கண்ட நீண்டநாள் கனவு நினைவானத்தை நினைந்து இறைவனின் திருஉருவப் படங்களை வைத்து வழிபாடு செய்துள்ளார் .கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாலும் ,சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டு மகிழ்ச்சியாகவும் ,சிறப்பாகவும் இந்த விழா நடந்தேறியது .இச் சிற்றுண்டிச்சாலை வேலைத்திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய கல்லூரி நிறுவனர் குடும்பத்தினருக்கும் ,Dr.T.சிவஞானம் அவர்களுக்கும் ,இந்த வேலைத்திட்டத்தை திறம்பட முடித்துத்தந்த SDS,EDC அமைப்பாளர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
 நன்றி ,
காரியதரசி , 
தாமோதரம்பிள்ளை -கமலநாதன்,  
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

Photos






Videos