Thursday 27 March 2014

புதிய வாசல்

“இசுறு“ பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட புதிய Gate வாசல் தற்போது மாணவர்களின் வழமையான பயன்பாட்டுக்குட்படுத்தப்படுகின்றது. கல்லூரியின் பெயர் ஒரு பக்கத்திலும் மறுபக்கத்தில் பாதுகாவலாளி அறையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.. கல்லூரியின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாக இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

See More Photos

Friday 21 March 2014

Major Achievement on our school archive project. Stage 2 Completed.

138 ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது கல்லூரி மாபெரும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதுஆங்கிலேயர் காலத்தில் அவர்களது மகாராணியின் பெயரைத் தாங்கி எமது நிறுவுனர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஏழைச் சைவமாணவர்களது அறிவுக் கண்களைத் திறந்து வைத்தது.
பல்வேறு திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க அதிபர்களின் வழிகாட்டலில் பல்வேறு சாதனைகள் படைத்துவருவது எமது பாடசாலை.
இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் பலரது பார்வையில் நூல் வடிவில் 125ஆவது மற்றும் 135ஆவது ஆண்டுமலர்களாக வெளியிடப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
125ஆவது ஆண்டுமலர் , 135ஆவது ஆண்டுமலர் மற்றும் கடந்த 10 வருட பரிசளிப்பு விழா மலர்கள்,  உலகெங்கும்  பரந்துவாழும் எமது பழைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதோடு காலாகாலமாகப் பாதுகாத்து வைக்கப்படவேண்டும் என்ற எமது வாழ்நாள் அதிபர் திரு ஸ்ரீகாந்தனின் வேண்டுகோளின்படி எமது யூ+  கே பழைய மாணவர் ஒன்றியம் அதனை இலத்திரனியல் புத்தகமாக மாற்றி இணையத்தளத்தில் உலவ விட்டுள்ளது.

இந்த வேலை திட்டத்தில் எமது நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர்  அவர்களுடன் சேர்ந்து உழைத்த Dr S கண்ணதாசன் திரு து இரவீந்திரன் மற்றும் சியாமளன்  கண்ணதாசன் மற்றும் இந்த வேலைத்திடட்தினை ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வழி நடத்திய எமது வாழ்நாள் அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்கள் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவராவார்.


சிறப்பு மலர்கள் 


Prizeday Reports (Last 10 Years)

All above E-Archive books are available in our website home page.




Thursday 20 March 2014

Our previous principal Mr V.Srikanthan's 60th Birthday Photos


மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம்‏

எமது கல்லூரியில் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் செயற்றிட்டத்தின் கீழ் இத் தொழில்நுட்ப கூடம் மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்படுகின்றது.  இதில் தகவல் மற்றும் தொடர்பு சாதன தொழில்நுட்ப மத்திய நிலையம் (Information & Communication Technology Centre) , மொழியியல் ஆய்வுகூடம் (Language Lab), தொலைக்கல்வி மத்திய நிலையம் (Distance Education Centre), கணித ஆய்வுகூடம் (Mathematics Lab) என்பன அமையும். தேவையான கணணிகள் மற்றும் நவீன கற்றல் கற்பித்தல் உபகரணங்களும் பொருத்தப்படும். இவ் ஆய்வுகூடம் 50 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட மாடிக் கட்டிடமாக அமையும்.


Wednesday 19 March 2014

A/L Union Get together & Lunch - 2014

எமது கல்லூரியின் உயர்தர மாணவ மன்றத்தின் 44வது வருடாந்த ஒன்றுகூடலும் மதிய போசன விருந்துபசாரமும் அண்மையில் நடைபெற்றன. மன்றத் தலைவி செல்வி.காயத்திரி தேவசுதன் தலைமையிலான இந் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக “விக்ரோறியன்“ திரு.பா.தனபாலன் தம்பதிகளும் (இணைப்பாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) சிறப்பு விருந்தினராக “விக்ரோறியன்“ திருமதி.கோமதி பிரணவரூபன் அவர்களும் (சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்) கலந்துகொண்டனர். ஒன்றுகூடல் நிகழ்வுகள் சிவபாதசுந்தரம் கேட்போர் கூடத்திலும், மதிய போசன விருந்துபசாரம் றிஜ்வே மண்டபத்திலும் இடம்பெற்றன. வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் மாணவப் பிரதிநிதிகள் மற்றும் கல்லூரியின் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள். திரு.பா.தனபாலன் அவர்கள் கல்லூரி நூலகத்திற்கு நூல்களை அன்பளிப்பாக வழங்கினார். திருமதி.கோமதி பிரணவரூபன் அவர்கள் உயர்தர மாணவ மன்ற வளர்ச்சிக்காக 10,000/- உதவுதொகையாக வழங்கினார். மன்றத்தின் செயலாளர் செல்வன்.இ.ரகுராஜன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதாக நிறைவடைந்தன.

See More Photos

Baden Powell Day 2014

எமது கல்லூரியில் சாரணியத் தந்தை பேடன் பவல் தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. சாரணப் பொறுப்பாசிரியரும்  அதிபருமான திரு.செ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாரணர்களும் சாரணியர்களும் பேச்சு, கவிதை, குழுப்பாடல் போன்றவற்றை வழங்கினார்கள். சாரணிகளின் பொறுப்பாசிரியர் திருமதி.தி.கதிர்காமநாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

See More Photos

Sunday 16 March 2014

கரப்பந்தாட்டம்‏

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயது ஆண்கள் அணி முதலிடம் பெற்று சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் பலம் பொருந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் முதலாம் சுற்றில் 25:16 என்ற புள்ளிகளும் இரண்டாம் சுற்றில் 25:15 என்ற புள்ளிகளும் பெற்று விக்ரோறியாக் கல்லூரி அணி முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 
அதேவேளை 19 வயது ஆண்கள் அணி வலகாமம் வலயப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டது. 
இவ்விரு அணிகளும் யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன.

இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடை

எமது கல்லூரியிலிருந்து இவ்வருட ஆரம்பத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட 19 ஆசிரியர்களுக்கான பிரியாவிடை அண்மையில் கல்லூருியின் சிவபாதசுந்தரம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒரே பாடசாலையில் 7 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்தல் என்ற கொள்கையின் அடிப்படையில் 15 ஆசிரியர்களும் வருடாந்த இடமாற்றத்தின் கீழ் 3 ஆசிரியர்களும் ஆசிரிய ஆலோசகராக கடமையேற்று சென்ற ஒரு ஆசிரியருமாக இவர்கள் 19 பேரும் உள்ளனர். ஆசிரியர் கழகத்தினால் ஓழுஙகமைக்கப்பட்ட இந் நிகழ்வு கழகத் தலைவர் திரு.கு.ஜேம்ஸ் பஸ்ரியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் உட்பட பல ஆசிரியர்களும் இடமாற்றலாகிச் சென்ற இவர்களின் சேவையினைப் பாராட்டி உரையாற்றினர். 
மாலைசூடி பரிசுகள் வழங்கி இவ்வாசிரியர்கள் கௌரவம் செய்யப்பட்டனர். தாம் இக் கல்லூரியில் சேவையாற்றிய இனிய நினைவுகளை மீட்டு இடமாற்றம் பெற்ற எல்லா ஆசிரியர்களும் பதிலுரை வழங்கினார்கள். நிறைவாக அதிபர் அவர்களால் மதிய போசன விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் அதிபர் திருமதி.அ.வேலுப்பிள்ளை, முன்னாள் பிரதி அதிபர் திரு.சண்முகநாதன் உட்பட சமீப காலங்களில் ஓய்வுபெற்ற மற்றும் இடமாற்றலாகிச் சென்ற ஆசிரியர்கள் இதில் கலந்து சிறப்பித்தனர். இப்பிரிவுபசார கௌரவிப்பு நிகழ்வுக்கு ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியமும் அவுஸ்ரேலியா (மெல்போன்) பழைய மாணவர் சங்கமும் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thursday 13 March 2014

Principal's Farewell (updated with Principal's speech Video)


யா சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் குறுகிய காலத்திலான அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணமான அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்களது சேவைநலன் பாராட்டு விழா 10-03-2014 அன்று ஆசிரியர் திரு பஸ்ரியன் தலைமையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் ஆசிரியர் கழகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் நலன் 
 விரும்பிகளால் இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 9.30 மணியளவில் சுழிபுரம் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள அறுபத்து மூவர் குருபூசை மடத்திலமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் ஓய்வூ நிலை அதிபர் திரு சிவகணேசசுந்தரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து மணிவிழாத் தம்பதியர் மங்கல வாத்தியம் சகிதம் பாடசாலை வரை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

பாதை நீளம் மக்கள் நிறைகுடம் வைத்து தம்பதியருக்கு மாலையணிவித்து ஆலாத்தி எடுத்து மரியாதை செலுத்தி மகிழ்ந்தனர்.

சுழிபுரம் மேற்கு பாரதி முன்பள்ளிச் சிறார்களும் இந்நிகழ்வில் கலந்து அதிபர் தம்பதியினரை மலர்தூவி  வரவேற்றமை மனதை நெகிழவைத்தது.

பின்னர் “பாண்ட்” வாத்தியசகிதம் பூரண மரியாதையூடன் தம்பதியர் “றிஐ;வே” மண்டபத்தினுள் அழைத்துவரப்பட்டனர்.

பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவாரமும் அதனைத்தொடர்நது அற்புதமான மங்கல இசை மனதுக்கு உற்சாகமூட்டியது.

பின்னர் பாடசாலை மாணவிகளின் வரவேற்பு நடனமும் மதகுருமாரின் ஆசியூரையூம் திரு சுதாகரன் ஆசிரியரின் வரவேற்பு உரையும்  தலைமை உரையும் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவ மாணவியரின் தமிழ் ஆங்கில உரைகளும் கவிதைகளும் கல்விப்புலம் சார்ந்தோர் பிரதேசச் செயலர் பழைய மாணவர் சங்கத்தினர் வாழ்நாள் அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை முன்னாள் பிரதி அதிபர் திரு கா இந்நிரராஐh ஆகியோரின் பாராட்டுரைகளும்; இடம்பெற்றன.

ஐக்கிய இராச்சியத்திருந்து வருகைதந்திருந்த அந்நாட்டுப் பழையமாணவர் ஒன்றியத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கரின் பாராட்டு உரையும் இடம்பெற்றது.

அவூஸ்திரேலியா கனடா ஐக்கியராச்சியம் ஆகிய மூன்னு பழையமாணவர் சங்கங்களும் ஒன்றிணைந்து பதக்கம் அணிவித்து அதிபரிற்கு தமது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஆசிரியர் சங்கத்தினர் மாணவர்கள் ஆகியோரும் பதக்கம் அணிவித்து அதிபரைக் கௌரவித்தனர்.

பூமாலைகள் மலைபோல் குவிந்தன் பாமாலைகள் மனதை நெகிழ்த்தின. அனைவரது அன்பு வெள்ளத்திலும் அதிபர் திக்குமுக்காடிப்போனார்.

விழாவின் சிறப்பம்சமாக அதிபரின் ஏற்புரை அமைந்திருந்தது.

இறுதியாக நன்றி உரையும்  கல்லூரி கீதமும் இடம்பெற்றன.

பிற்பகல் 4.00 மணியளவில் ஐக்கியராச்சியம் பழையமாணவர் ஒன்றியம் சார்பாக திரு சி இரவிசங்கரின் ஏற்பாட்டில் மதியபோசன விருந்தளிக்கப்பட்டது.


)

More photos and full cover Videos to come pls keep coming back to this section.

பாரதி முன் பள்ளியில் அமைக்கப்படவிருக்கும் “சுப்பையா அரங்கிற்கான அடிக்கல் நாட்டல். 12 Mar 2014


காட்டுப்புலம் பாடசாலைக்கு திரு்இரவிசங்கர் அவர்களின் வருகை 12 Jan 2014


திருவடிநிலை பாடசாலைக்கு திரு..இரவிசங்கர் அவர்களின் வருகை 12 mar 2014



Thursday 6 March 2014


Help for Naavalar

சைவத்தையும்  தமிழையயும் இருகண்கள் என போற்றி வளர்த்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். அவர் நினைவாக 1954ஆம் ஆண்டு சுழிபுரம் பறாளாயில் தோற்றிவிக்கப்பட்டு அக்கிராமத்தின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டு வருவது நாவலர் சனசமூக நிலையம் ஆகும்.

நாவலர் முன்பள்ளி மூலம் தரமான பிள்ளைகளை ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலைக்கு அனுப்பி அவர்களை விக்ரோறியாக் கல்லூரிக்கு அரும்பணி ஆற்றுகின்றனர்.

மேலும் படிப்பகத்தினை நடாத்துவதன் மூலம் பிரதேசமக்களின் அறிவு  மற்றும் அரசியற் பசியினைப் போக்குகின்றனர்.

அத்துடன் பறாளாய் விளையாட்டுக் கழகத்தினை நடாத்தி இளைஞர்களின் உடல் உள ஆரோக்கியத்தில் உதவு கின்றனர்.

பந்தல் சேவையினைக் கிராமக்களிற்கு வழங்குவதோடு வருடந்தோறும் பறாளாய் விநாயகர் முருகன் ஆலய திருவிழாக்களின் போது மக்களின் தாகத்தினைப் போக்க தண்ணீரப்பந்தல் நடாத்தி வருகின்றனர்.

இவ்வருடம் நாவலர் சனசமூக நிலையத்தின் மணிவிழா ஆண்டாகும்.

அவ்விழாவினைக் கொண்டாடுவதற்காக புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளிடம் நிருவாகத்தினரால் பல்வேறு வேண்டுகோள்கள்; விடுக்கப்பட்டன.

அவற்றில் பிரதானமானது நாவலர் பெருமானுக்கு ஓர் சிலைவைத்தல் என்பதனை ஏற்றுக் கொண்ட விக்ரோறியாக் கல்லூரியின் ஐக்கியராச்சியத்தின் பழைய மாணவர் ஒன்றியம் அதனைச் செய்து முடிக்க முன் வந்தது.

அவ்வேலைத்திட்டத்திற்கான மொத்தச் செலவு  ரூபா 50 000.00 இனை வழங்க ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர் முன்வந்துள்ளார் அவருக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகுக.