Thursday, 25 September 2014

சுழிபுரம், திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது:-

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில் சுழிபுரம், திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் சுழிபுரம் , திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய  மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சருடன் குறித்த பாடசாலைக்குச்சென்று, பாடசாலையின் நிலைமைகளை அவதானித்த உறுப்பினர், முதற்கட்டமாக தமது நண்பரான சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் ரூ.50,000 பெறுமதியான உதவிகளை வழங்கி வைத்தார்.

அண்மையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரூ.30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களும், மாணவர்களின் காலை உணவுக்கான நிதியுதவியாக ரூ.20,000 வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன், உதவியை வழங்கிய முரளீதரன், வலி.மேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை கோட்டக்கல்விப்பணிப்பாளர், மாணவர்கள் மற்ரும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Tuesday, 16 September 2014

மணிவிழா-மலர் வெளியீடு‏

விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவனும் ஆசிரியரும் அதிபருமாக பணியாற்றி  10-03-2014 இல் ஒய்வு பெற்ற அதிபர் பிரம்மஸ்ரீ வரதராஜா ஸ்ரீகாந்தன் அவர்களின் மணி விழா மலர் வெளியீட்டு நிகழ்வு 14-09-2014 அன்று ஞாயிறு  பி.பகல் 2: 45 மணியளவில் விழா நாயகனையும் அவர் தம்  பாரியரையும் கல்லூரியின் அலுவலக முன்றலில் இருந்து பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் விருந்தினர்கள் குடும்பத்தினர் கல்வி சமூகத்தினர் ஆசிரியர்கள் கல்வி சேவை செய்தவர்கள்    மாணவர்கள் பெற்றார்கள் என பலரும் புடை சூழ வெளியீட்டு விழா மண்டபமான ரிட்ஜவே மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வாயில் மங்கள விளக்கேற்றபட்டு சபையோரின் கர கோஷத்துடன் விழா மண்டபத்திற்குள் பிரவேசிக்க மங்கள விளக்கேற்றல் ஆரம்பமாகியது. 
         சிவஸ்ரீ . சபா. வாசுதேவ குருக்களினை தொடர்ந்து வண. பிதா. ஜேசுதாஸ் அடிகளார், திரு .ஆ .ராஜேந்திரன் , திரு ச .சிவனேஸ்வரன் பேராசிரியர் தேவராஜா, திருமதி.அ. வேலுபிள்ளை, நூலகர் விஜயகுமாரினை அடுத்து நாயகனின் தீபமேற்றலுடன் திருமதி.ப.முகுந்தன் அவர்களின் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமகின.

See Photos

சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி பழைய மாணவர் சங்க - கலை நேரம் 2014‏ (Australi OSA News)

சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவ சங்க மெல்பேன் கிளையின் கலை நேரம் என்னும் நிகழ்வு கடந்த 14/09/2014 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு ரோவில் உயர் கல்லுரி மண்டபத்தில் நடைபெற்றது.மங்களவிளக்கை கலை ஆசிரியர்கள்ளான திரு ரவி ரவிச்சந்திரா திருமதி மீனா இளங்குமரன்,திரு அகிலன் சிவானந்தன் மற்றும் பழைய மாணவனாகிய திரு அமுதலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்கள்.வரவேற்புரை திருமதி உமாரூபன் ஆற்றினார்.முதலில் திரு ரவி ரவிச்சந்திரா அவர்களின் நெரியாக்கையில் தாளவாத்தியமும்,அடுத்து மீனா இளங்குமரனின் நடனாலையா பாடசாலை மாணவர்களின் பரதநாட்டியமும் அதனை தொடர்ந்து திரு அகிலன் சிவானந்தன் அவர்கள் தனது இசை வேள்வியை மேல்நாட்டு வாத்தியங்களுடன் வித்தியாசமான இசை நிகழ்வை நடத்தினார்.இறுதியில் ருக்சிகா இளங்குமரன் இந்நிகழ்வு எதற்கு நடக்கின்றது என்பதை தனது நடனம் மூலம் வந்த மக்களுக்கு விளக்கம் அளித்தார்.கல்லூரியின் பழைய மாணவர்களான திரு ராஜேந்திரம்,திரு ஸ்ரீகுமார் ,திருமதிகள் உசா கொவ்ரிஷ்வரன்  ,ரோகினி திருநீலகண்டன் ,ரதி குமார் தேவி ராஜேந்திரம் ஆகியோர் ஆசிரியர்கள்,மாணவர்களை விருதுகள் வழங்கி  கௌரவித்தார்கள்.திருமதி தேவி ராஜேந்திரம் அவர்களின் நன்றி உறையுடன் கலை நேர நிகழ்வு நிறைவு பெற்றது.

See Photos

You tube Video