Sunday 30 June 2013

Provincial level Athletic Meet -2013

மாகாண மட்ட மெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 04-07-2013ம் திகதி ஆரம்பமாகின்றன. இப்போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. விக்ரோறியாக் கல்லூரியிலிருந்து 40 தணி நிகழ்ச்சிகளிலும் 11 அஞ்சலோட்ட நிகழ்ச்சிகளிலும் வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

Saturday 29 June 2013

Cricket tournament - Un 17

இலங்கைத் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 17வயதுப் பிரிவினர்க்கான துடுப்பாட்டப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியோடு போட்டியிட்ட விக்ரோறியாக் கல்லூரி அணியினர் 4 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியைப் பெற்றுள்ளனர். 
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி அணி 120 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பிரசாந் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சிவராம் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கோகுல்ராஜ் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கொக்குவில் இந்து கல்லூரி சார்பில் அதிக ஓட்டங்களாக சேந்தன் 57 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 6 விக்கொட்டுகளை இழந்து உரிய இலக்கினை அடைந்தது. செந்தூரன் 43 ஓட்டங்களையும் பிரசாந் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் கணசாந் 3 விக்கெட்டுகளையும் சஜித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இவ்வெற்றி்யின் மூலம் விக்ரோறியாக் கல்லூரி அடுத்த கட்டப் போட்டிகளுள் பிரவேசித்துள்ளது.
Once again our boys proved WE ARE THE BEST

Thursday 27 June 2013

Victoria Vs Kokkuvil Hindu Cricket Match

இலங்கைத் துடுப்பாட்ட சங்கம் நடத்தும் 17 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்ச் சுற்றுப் போட்டிகளில் எமது கல்லூரி கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக அக் கல்லூரி மைதானத்தில் இன்று போட்டியிடுகின்றனர். இவர்களை உலகெங்கும் பரந்து வாழும் பழைய மாணவர்கள் வெற்றியோடு திரும்பி வர வாழ்த்துகின்றனர்.

Tuesday 25 June 2013

Cricket Tournament - விக்டோரியாவிடம் மண்டி இட்டது மகாஜனா

இலங்கைத் துடுப்பாட்ட சங்கம் நடத்தும் 17 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்ச் சுற்றுப் போட்டிகளில் எமது கல்லூரி மகாஜனாக் கல்லூரியுடன் நடாத்திய துடுப்பாட்டத்தில் 8 விக்கட்டுகளால் அமோக வெற்றி பெற்றுள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மகாஜனாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி 27.2 பந்துப் பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 12.1 பந்துப் பரிமாற்றங்களில் இரண்டு விக்கட்டுக்களை மட்டும் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இவ்வாட்டம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இச் சுற்றுப் போட்டியின் அடுத்த ஆட்டம் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு எதிராக அக் கல்லூரி மைதானத்தில் 26-06-2013ம் திகதி நடைபெறவுள்ளது.

Visit from Thenmaradchi Zone Teachers

தென்மராட்சிக் கல்வி வலயத்தைச் சேர்ந்த 30 ஆசிரியர்கள் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான பேரூந்தில் எமது கல்லூரியன் செயற்பாடுகளைப் பார்வையிட வந்திருந்தனர். கல்லூரியின் நூலகம் தொடர்பான செயற்பாடுகளை அவர்கள் உன்னிப்பாக அவதானித்தனர். இவர்களில் அதிகமானவர் நூலக ஆசிரியர்களாக (Teacher Librarians) பணியாற்றுபவர்கள். எமது கல்லூரி அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருப்பதாக அனைவரும் கூறினர். முழுமையாகப் பார்வையிட்ட பின்னர் இவ்வாசிரியர்களுக்கு மதிய போசன உபசாரம் வழங்கப்பட்டது.
See Photos

Monday 24 June 2013

O/L Special Classes

க.பொ.த.சாதாரய தர மாணவர்களின் பரீட்சை அடைவுமட்டங்களில் உயர்வினைக் கொண்டுவரும் நோக்குடன் பாடசாலை நிறைவடைந்த பின் விசேட வகுப்புக்கள் தினசரி நடாத்தப்படுகின்றன. பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு இவ் வகுப்புக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது
See More Photos

Water Tank Black Board News


Saturday 22 June 2013

Scouts performing duty at Paraalai

பறாளை ஸ்ரீ முருகன் கோவில் தேர்த்திருவிழா அண்மையில் நடைபெற்றபோது விக்ரோறியாக் கல்லூரியின் சாரணர்கள் மிகச் சிறப்பான முறையில் சேவை செய்தனர். சாரண ஆசிரியர் திரு.செ.சிவகுமாரன் அவர்களின் வழிப்படுத்தலில் இவர்கள் ஆலயத்தில் அடியார்களுக்கான சேவைகள் பலவற்றை வழங்கினர்.
 See More Photos

Friday 21 June 2013

Volley Ball Champions

விக்ரோறியாக் கல்லூரியின் வரலாற்றில் முதல் தடவையாக மாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகளில் கல்லூரி அணி முதன்மை வெற்றியினைப் பெற்றுள்ளது. சென்ற இரு வருடங்களாக மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றுத் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொண்டாலும் இம்முறை மாகாணச் சம்பியன்களாக முதலாமிடம் பெற்றமை பெருமைக்குரியதாகும். கரப்பந்தாட்ட்ம் தேசிய ரீதியில் பலமான விளையாட்டாக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் இவ்வெற்றி குறித்து கல்லூரிச் சமூகம் மகிழ்ச்சியடைகின்றது. வெற்றி வீரர்கள் வெற்றியின் பின் கல்லூரி திரும்பிய போது சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.

கல்லூரியின் வளர்ச்சிக்கு கைகொடுப்போம்


விக்ரோறியா அன்னையின் செல்லப்பிள்ளைகளாக வெளிநாடுகளில் வசித்துவரும் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களே ! எமது கல்லூரியில் கல்வி கற்று வரும் மாணவ ,மாணவிகள் மாவட்ட ரீதியிலும்,மாகாண ரீதியிலும் வெற்றி பெற்று தேசிய மட்ட ரீதியிலும் விளையாட்டுகளில் பங்கு பற்றி வெற்றி பெற்று வருகின்றார்கள் .
குறிப்பாக துடுப்பாட்டம் ,உதைபந்தாட்டம் ,கரப்பந்தாட்டம் ,எல்லே போன்ற விளையாட்டிக்களில் தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றார்கள் .இவ்வெற்றியின் மூலம் எமது விக்ரோறியாக்கல்லூரி யாழ் மாவட்டத்தில் ஒரு முதன்மைக் கலவன் கல்லூரியாக வளர்ச்சி அடைந்து வருகின்றது .
எமது கல்லூரி  மாணவர்கள் மிகவும் சிறப்பாக வெற்றி பெற்று வருவது வெளிநாடுகளில் வசித்து வரும் எமக்கு மிகவும் பெருமையைத் தருகின்றது .முதலில் இவ்விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு அதிபர் ,ஆசிரியர்கள் ,சக மாணவர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் யாவரு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
அன்பான வெளிநாடுகளில் வசித்துவரும் பழைய மாணவர்களே ! எமது கால்லூரி மாணவச் செல்வங்கள் தமது திறமைகளை கல்ல்வியிலும் ,விளையாட்டிலும் வெளிக்கொணர்வதற்கு அயராது உழைத்து வருகின்றார்கள் .அவர்களின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்தோம் சற்று சில நிமிடங்கள் சிந்தித்துப் பார்ப்போம் ................................
மாணவர்கள் வெளிமாவட்டங்களில் பங்குபற்றும் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு செலவீனங்களுக்கு கல்லூரியின் வருமானம் பற்றாக்குறையாக உள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் விக்ரோறியாக்கல்லூரியின் பழைய மாணவர்களே !
நீங்களும் முன்வந்து கல்லூரி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள்.

கல்லூரி சமூகம்
நன்றி .


Thursday 20 June 2013

Dr Sivagnanam Donated £1500 (Rs285,000) towards the Canteen Project



சிற்றுண்டிச்சாலை பற்றிய தகவல்

எங்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் புதிய சிற்றுண்டிச்சாலை பல இலட்சம் ரூபா செலவில் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் சிறந்த முறையில் கட்டப்பட்டு வருகின்றது .இக்கட்டட வேலை வெகுவிரைவில் முடியும் நிலையில் உள்ளது .இன்னும் சில நாட்களில் மாணவர்களின் பாவனைக்கு  பயன்படுத்தக் கூடியதாக வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது .
இச் சிற்றுண்டிச்சாலை தரை ஓடுகள் (Tiles) பதிப்பதற்காக யுகேயில் பிரபல மருத்துவராக தொழில் புரிந்து வருபவரும் ,ஆரம்ப காலத்தில் இருந்து  யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவராக இருந்து வரும்  DR.T.சிவஞானம் அவர்கள் £1500.00 பணத்தொகையை யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊடாக நன்கொடையாகக் கொடுத்துள்ளார் .
இவரின் இந்தச் சேவையைப் பாராட்டி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் ,மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

Tiles work completed in our new canteen today, Plese see the photos

New Floor Sheet - Sivapathasuntharanar Hall

கல்லூரியின் பழைய மாணவன் சின்னத்தம்பி கலைச்செல்வன் அவர்கள் (கனடா) கல்லூரிக்கு வருகை தந்து பார்வையிட்டார். இவா கனடா பழைய மாணவர் சங்கத்தின் உதவியுடன் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்திற்கான புதிய தரைவிரிப்புக்களை பெற்றுத் தந்ததுடன் ஆண்கள், பெண்கள் துடுப்பாட்ட அணிகளின் போடடிச் செலவுகளுக்கென 18,000/- நிதி உதவியினையும் வழங்கியுள்ளார். இவருக்கு அதிபர், ஆசிரியர், மாணவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

See Photos

Wednesday 19 June 2013

Volley Ball - Under 17 Boys Provincial Champions

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகளில் விக்ரோறியாக் கல்லூரியின் 17 வயது ஆண்கள் அணியினர் முதலாமிடத்தைப் பெற்று சம்பியன்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கல்லூரியின் வரலாற்றிலே கரப்பந்தாட்ட அணியொன்று மாகாணமட்டத்திலே முதலிடம் பெற்று தேசியமட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தெரிவுசெய்யப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

Elle - Under 19 Girls Team 1st Runner up

வடமாகாணப் பாடசாலைகளுக்ிகடையில் நடைபெற்றுவரும் பெரு விளையாட்டுக்களி்ல் விக்ரோறியாக் கல்லூரியின் எல்லே பெண்கள் அணி இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. இவ்வணி தான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற்றபோது மணற்காட்டு றோ.க.த. பாடசாலையுடன் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டதால் இரண்டாமிடத்தைப் பெற்றுத் தேசிய மடமடப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது.
 

Tuesday 18 June 2013

உதைபந்தாட்ட வீரர்களுக்கான சீருடை நன்கொடை



பிரித்தானியாவில் வசித்துவரும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவர் ஒருவர் தனது ஆருயிர் நண்பனின் நினைவாக சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்களின் சீருடைக்காக 24,400 ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார் .
எமது கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்கள் பல பாடசாலைகளை வெற்றி கொண்டு சிறப்பாக விளையாடிவருவது குறிப்பிடத்தக்கதாகும் .யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரி உதைபந்தாட்ட வீரர்களின் சீருடைக்கு உதவி வழங்கிய எமது கல்லூரி பழைய மாணவனுக்கு கல்லூரி அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .இதேபோல துடுப்பாட்ட வீரர்களுக்கும் பல உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன .புலம் பெயர்ந்து வாழும் எமது பழைய மாணவர்கள் இத்தேவைகளை நிறைவு செய்வதற்காக உதவ விரும்புவோர் கல்லூரி நிர்வாகத்துடனும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடனும் தொடர்பு கொள்ளவும் .
நன்றி,
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

See More Photos

60th Birthday Celebration - Mrs.A.Veluppillai

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.அருந்தவச்செல்வி வேலுப்பிள்ளை அவர்களின் அறுபதாவது அகவை தினம் 12/06/2013 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். கல்லூரி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். கலந்துகொண்ட அனைவருக்கும் முன்னாள் அதிபர் அவர்கள் இராப்போசன விருந்தளித்து மகிழ்வித்தார்.

Saturday 15 June 2013

Provincial Level - Cricket Champions 2013

வட மாகாணப் பாடசாலை அணிகளுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டிகள் தற்போது வவுனியாவில் நடைபெற்றுவருகின்றது. பெண்களுக்கான துடுப்பாட்டப்போட்டி இன்று நடைபெற்றபோது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி தான் பங்குகொண்ட அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது. அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் பெண்களுக்கான மென்பந்துத் துடுப்பாட்டம் 2010ஆம் ஆண்டில் அறிமுகஞ்செய்யப்பட்டது. அன்றிலிருந்து இவ்வருடம் வரை தொடர்ச்சியாக நாலாண்டுகள் மாகாணமட்டச் சம்பியன்களாக விக்ரோறியாக் கல்லூரியே வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய இறுதிப் போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துடன் போட்டியிட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி மிக இலகுவாக தனது இலக்கை அடைந்து 8 விக்கட்டுக்களினால் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தை வெற்றிகொண்டு தொடர்ச்சியாக நாலாவது வருடமாக சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டது.
See Photos

Wednesday 12 June 2013

வைரவிழாக் கொண்டாடும் எமது முன்னாள் அதிபர்


அகவை அறுபதில் அருந்தவச்செல்வி
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் முன்னைநாள் மதிப்பிற்குரிய அதிபர் .திருமதி . .வேலுப்பிள்ளை அவர்கள் தனது அறுபதாவது பிறந்ததினவிழாவாகிய வைரவிழாவை இன்று விமர்சையாகக் கொண்டாடுகின்றார் .அதிபர் அவர்கள் சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் விஞ்ஞானபாட ஆசிரியராக இருந்து பின்னர் இக்கட்டான காலகட்டத்தில் அதிபராக பதவியேற்று கல்லூரியின் முழு வளர்ச்சிக்கும் அயராது உழைத்தவர் ஆவார்.

எமது கல்லூரியை  முதன்மை நிலைக்குக் கொண்டுவர அரும்பாடுபட்டவரும் இவரே .அதிபர் அவர்கள் சுழிபுரம் வாழ் மக்களின் இதயங்களில் குடிகொண்டவராவார் .வைரவிழா கண்டுள்ள எமது அதிபர் திருமதி . .வேலுப்பிள்ளை அவர்களுக்கு கல்லூரி அதிபர் திரு .ஸ்ரீகாந்தன் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழைய மாணவர்கள் மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் அனைவரும் தமது இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள் .

"நீடூழி காலம் வாழ்க வளமுடன்"

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photo