Tuesday 22 April 2014


Jaffna Science association competition Winners

யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்திய கட்டுரைப்போட்டியில் எமது கல்லூரி மாணவி செல்வி.தே.காயத்திரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.அத்துடன் இச்சங்கம் நடாத்திய சுவரொட்டிப் போட்டியில் எமது கல்லூரி மாணவர்களான செல்வன்.ந.அஜந்தன் அவர்களும் செல்வன்.வ.வசந்தராஜ் அவர்களும் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்களும்  யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சென்றவாரம் நடைபெற்ற யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தின் ஆண்டுவிழாவின் போது வழங்கி கௌரவம் செய்யப்பட்டனர்.

Monday 21 April 2014


நாலாவது வருடமாக மாவட்டச் சம்பியன்

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப் போட்டிகள் நேற்றும்

இன்றும் நெல்லியடி மத்திய மாகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன.எமது கல்லூரியின் 

பெண்கள் துடுப்பாட்ட அணி மாவட்ட மட்டத்தில் முதன்மை வெற்றியை பெற்று சம்பியன்களாகத் 

தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சங்கானைக்கோட்டம், வலிகாமம் வலயம் என பாடசாலைகளுக்கிடையில் 

நடைபெற்ற சகல போட்டிகளிலும் வெற்றி பெற்ற எங்கள் கல்லூரி பெண்கள் அணி மாவட்ட 

மட்டத்திலான சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் வட்டு.இந்துக் கல்லூரியைச் 

சந்தித்தது. இவ்விரு பாடசாலைகளும் சங்கானைக் கல்விக் கோட்டத்தைச் சேர்ந்தவையாகும். 

கோட்டமட்டத்திலும் வலய மட்டத்திலும் இவ்வணியுடன் விளையாடியே எமது அணி முதன்மை 

பெற்றது. தொடர்ந்தும் மாவட்ட மட்ட போட்டியிலும் இவ்வணியை சந்தித்த போது முதலில் 

துடுப்பெடுத்தாடிய விக்ரோறியா அணி 10 பந்து பரிமாற்றங்களில் 89 ஓட்டங்களைப் பெற்றது.அடுத்து 

துடுப்பெடுத்தாடிய வட்டு.இந்துக் கல்லூரி அணி 63 ஓட்டங்களை மட்டும் பெற்றது.26 ஓட்டங்களால் 

வெற்றி பெற்ற விக்ரோறியா அணி தொடர்ந்து நாலாவது வருடமாக மாவட்டச்சம்பியனாக 

தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், 

அணிப்பொறுப்பாசிரியர் செல்வி.கு.தாரணி, பயிற்றுநர்களான 'விக்ரோறியன்ஸ்' 

திரு. ந.சிவரூபன்,திரு.தி.சுஜிர்தன் மற்றும் திரு.க.திருக்குமாரன் ஆசிரியர் கல்லூரியின் அணியினை 

இப்போட்டிகளுக்காக வழிப்படுத்தினர். பழைய மாணவர்களும் வருகை தந்து ஊக்குவித்தமை 

குறிப்பிடத்தக்கதாகும்.



Saturday 19 April 2014

Volley ball Champions 2014

யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் நேற்றும் இன்றும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றன. விக்ரோறியாக்கல்லூரியின் 17வயதுப் பிரிவினர் சங்கானைக் கல்விக் கோட்டம், வலிகாமம் கல்வி வலயம் என்பவற்றின் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டிகளில் முதன்மை வெற்றிகளைப் பெற்று மாவட்டப் போட்டிகளில் கலந்து கொண்டனர். பலம் வாய்ந்த பல அணிகளுடன் மோதி தொடர் வெற்றிகளைப் பெற்ற நிலையில் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரியுடன்  இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். மிக வறுவிறுப்பான போட்டியில் புத்தூர் சோமாஸ்கந்தா அணியையும் வெற்றி கொண்டு 2014ம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட பாடசாலைகளின் 17வயதுப் பிரிவுச் சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். விளையாட்டுத் துறை முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், கரப்பந்தாட்டப் பொறுப்பாசிரியர் திரு.க.திருக்குமாரன், பயிற்றுநர் திரு.செந்தூரன் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலில் பெறப்பட்ட இவ்வெற்றி மூலம் அடுத்த மாதத்தில் மாகாண மட்டப்  பாடசாலைகளுடன் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட போட்டியில் இவ்வணியினர் கலந்து கொள்ள தெரிவாகியுள்ளனர். 

Saturday 12 April 2014

O/L Results Percentage

யா-விக்ரோறியாக் கல்லூரி
.பொ..சாதாரணதரப் பரீட்சை பெறுபேற்று வீதங்கள்

2009
2010
2011
2012
2013

வீதம்
வீதம்;
வீதம்;
வீதம்;
வீதம்;
சைவநெறி
93
81
98
99
100
கிறிஸ்தவம்
100
40
40
100
89
தமிழ்மொழி
70
50
74
72
78
ஆங்கிலம்
18
25
25
37
39
கணிதம்
40
41
46
56
56
வரலாறு
46
47
53
57
48
விஞ்ஞானம்
29
37
37
53
49






தொகுதி 1





வணிகமும் கணக்கீடும்
80
82
77
93
94
புவியியல்
62
90
88
70
100
குடியூரிமை
51
44
56
87
68
முயற்சியாண்மை
32
39
42
89
20






தொகுதி 2





சங்கீதம்
65
76
86
100
100
சித்திரம்
47
92
87
64
86
நடனம் - பரதம்
70
77
89
100
100
தமிழ் இலக்கியம்
47
31
67
73
90
நாடகம்

100
48
48
100
ஆங்கில இலக்கியம்


67
43
100






தொகுதி 3





தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்
82
93
96
95
100
விவசாயம்
29
86
79
74
54
வடிவமைப்பு தொழில்நுட்பம்
11
20
92
100
100
மனையியல்
87
54
57
71
93
சுகாதாரம்
78
58
70
76
76