Wednesday 23 November 2016

காட்டுப்புலம் கௌரவிப்பு - Dr.கண்ணதாசன் உரை

காட்டுப்புலம் பாடசாலை 2016 புலமைப் பரிசில் பரீட்சை கௌரவிப்பு நிகழ்வு

காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2016 புலமைப்ரிசில்
 பரீட்சையில்  சித்தியை அண்மித்த-மற்றும் 70 க்கு மேல் புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கானஆஸ்திரேலிய melbourn பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையிலான   கௌரவிப்பு நிகழ்வு அதிபர் தலைமையில் 22 Nov  2016 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கல்வி அபிவிருத்திக்  குழுவின் சார்பில் விக்டோரியாக் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் செ .சிவகுமாரன் அவர்களும் Dr.செ .கண்ணதாசன் அவர்களும் கலந்து  கொண்டனர்.

145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட செல்வி.சலோமி விக்கினராஜா

144 புள்ளிகளைப்  பெற்றுக்கொண்ட செல்வி.திவ்வியா  மயூரன் 

காணொளிக்கு >  கௌரவிப்பு நிகழ்வு    < 

http://albums.phanfare.com/slideshow.aspx?i=1&db=1&pw=neTU1XWj&a_id=14388881

காட்டுப்புலம் பாடசாலை 2016 புலமைப் பரிசில் பரீட்சை கௌரவிப்பு நிகழ்வு

 காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 2016 புலமைப்ரிசில்
 பரீட்சையில்  சித்தியை அண்மித்த-மற்றும் 70 க்கு மேல் புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கானஆஸ்திரேலிய melbourn பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையிலான   கௌரவிப்பு நிகழ்வு அதிபர் தலைமையில் 22 Nov  2016 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கல்வி அபிவிருத்திக்  குழுவின் சார்பில் விக்டோரியாக் கல்லூரி முன்னாள் பிரதி அதிபர் செ .சிவகுமாரன் அவர்களும் Dr.செ .கண்ணதாசன் அவர்களும் கலந்து  கொண்டனர்.

145 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட செல்வி.சலோமி விக்கினராஜா

144 புள்ளிகளைப்  பெற்றுக்கொண்ட செல்வி.திவ்வியா  மயூரன் 

காணொளிக்கு >  கௌரவிப்பு நிகழ்வு    < 

Saturday 5 November 2016

விக்ரோரியன் சிவசிதம்பரம் சிவரங்கன் - முதுவிஞ்ஞானமாணி ( தகவல் தொழில்நுட்பம்)

 சுழிபுரம் மேற்கை பிறப்பிடமாக கொண்ட திரு.சிவசிதம்பரம் சிவரங்கன் அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டு பல்கலைக் கழகத்தினால் 8 August 2016 அன்று முதுவிஞ்ஞானமாணிப்  ( தகவல் தொழில்நுட்பம்) பட்டம் வழங்கி கௌரவிக்கப் பெற்றார் .

    இவர் விக்ரோரியாக் கல்லூரி பழைய மாணவர் என்பதுடன் பாரதி கலை மன்றத்தினூடாக பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றியதுடன்..இலங்கைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானமாணியுமாவார்.

ஸ்ரீ கதிர் வேலாயுத சுவாமி கோவில் கந்த புராணப் படிப்பு - ஆரம்பம் 13 / 11 / 2016

Tuesday 1 November 2016

பலகைப் பதிவு - 1 Nov 2016

விக்ரோரியாக் கல்லூரியில் உயர்தர வகுப்பு மாணவர்களிற்கான ஊக்குவிப்பு நிதி

    உயர்தரம் பயிலும் பொருளாதரத்தில் நலிவுற்ற மாணவர்களிற்கான கற்றலிற்கு உதவும் நோக்கோடு ஜேர்மன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான திரு.அ.ரங்கநாதன், திரு.ச.பாலகிருஷ்ணன் ( Bala Master)                                                                                                                                                                    ,கலாநிதி நா.பாலமுருகன்,திரு..சி.தவராஜா,திரு.மா.சோமசுந்தரம்,திருமதி.சோ.கோடீஸ்வரி ஆகியோரால் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி அவர்கள் அண்மையில் ஜேர்மன் சென்றிருந்த போது வழங்கப்பெற்ற நிதியில் இருந்து 2016 நவம்பர்   தொடக்கம் 2017ஜூலை வரையிலுமான திட்டத்தின் ஆரம்ப கட்ட கொடுப்பனவாக தலா  ரூபா 2000 , 1 நவம்பர் ஆகிய இன்று சிவபாதசுந்தரனார் மாநாட்டு மண்டபத்தில் பிரதி அதிபர் இந்திரா தவநாயகம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சுருக்கமான நிகழ்வின்போது பயன் பெறும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.நிகழ்வின்போது உயர்தர வகுப்பாசிரியர்களான திருவாளர்கள் நா.ரமணன் ,த..சத்தியசீலன், செ.றோகேசியன் ஆகியோருடன் பழைய மாணவர் சங்கப் பொருளாளர் திரு.வி.உமாபதி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.