Saturday 4 May 2013

செய்திக் கண்ணோட்டம்

கடந்த 2001 ஆம் ஆண்டு யா / சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் கனடா பழைய மாணவர் சங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி மைதான 400m ஓடுபாதைக்கான விஸ்தரிப்பு பலவருட முயற்சியின் பின் வெகு விரைவில் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது .
இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடங்கலாக இருந்த ஏறக்குறைய 9 1/4 பரப்பளவிக்குரிய காணிக்கொள்வனவில் 4 3/4 பரப்புக்காணிகளின் கொள்வனவு கடந்த 30.04.2013 அன்று கல்லூரி
சிவபாதசுந்தரம் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது .

யா / சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு ,வி .உமாபதி அவர்களின் வழிநடத்தலில் இக்காணிகளின் உரிமையாளர்களாகிய திரு .பொ .ஜெயரஞ்சன் மற்றும் திரு .செ .வேலாயுதம் ஆகியோர் தமது காணிகளின் உரித்தினை ஒய்வு பெற்ற நீதிபதி திரு . .விக்னராஜா முன்னிலையில் கனடா பழைய மாணவர் சங்கத்தின் ஆலோசகர் திருமதி .K .விஜயதேவி, கல்லூரியின் அதிபர் திரு . .ஸ்ரீகாந்தன்,உபசெயலாளர் திரு .S. நிரஞ்சன் ஆகியோரின் சாட்சியுடன் பழைய மாணவர் சங்கத்திற்கு விற்பனை உறுதி எழுதினர் .இந்நிகழ்வில் கனடாவின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு .S.ஜெயகாந்தன் ,திரு .து .இரவீந்திரன் ,DR .செ .கண்ணதாசன் ,திரு .ஹரிதாஸ் .திருமதி .புனிதவதி ,பழைய மாணவ சங்கத்தினர் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளும் கலந்து கொண்டு சிறப்பித்து மகிழ்வடைந்தனர் .
இக் கொள்வனவிற்கு எதுவாக கனடா பழைய மாணவர் சங்கத்தினர் ரூபா இருபது இலட்சம் பணத்தினையும் நிறுவனர் குடும்பத்தினர் வழங்கிய காணி விற்பனையில் பெறப்பட்ட பணத்தில் ரூபா பன்னிரண்டு இலட்சம் பணத்தினையும், பழைய மாணவர் சங்கத்தின் வைப்பிலிருந்த ரூபா எட்டு இலட்சம் பணத்தினையும் சேர்த்து மொத்தமாக ரூபா நாற்பது இலட்சத்திற்கு இக் கொள்வனவு மேற்கொள்ளப்பட்டது .
இந்தக் கொள்வனவின் மூலம் வடமாகாணத்தில் முதன் முறையாக ஒரு பாடசாலையில் சர்வதேச தடகள விளையாட்டு ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ற 400m ஓடுபாதை அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்துக் கூறிய யா / சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு . .ஸ்ரீரங்கன் அவர்கள் இந்தக் காணிக்கொள்வனவு விடயமாக கடந்த பத்து மாதங்களாக எமது நிர்வாகத்தினர் பல வழிகளிலும் முழுநேர முயற்சி எடுத்து இறுதியல்  வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது பெரு  மகிழ்ச்சியைத் தருவதாகவும் எமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்று நாட்களுள் அதற்கான பணஉதவியை புரிவதற்கு சம்மதம் தெரிவித்த கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கும் ,அனைத்துப் பழைய மாணவர்களின் சார்பிலும், கல்லூரிச் சமூகம் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

தகவல்

கல்லூரி சமூகம்