Monday 3 November 2014

தேசிய ரீதியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற ரஜிதா

தேசிய ரீதியில் கொழும்பு சுகததாச உள்ளரங்கில்  இடம்பெற்ற  இலங்கை பாடசாலைகளிற்கு
இடையேயான ஈட்டி எறிதற் போட்டியில் விக்டோரியா கல்லூரி மாணவி செல்வி. ரஜிதா  பாலச்சந்திரன்  அவர்கள்  36.9 M தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் வடமாகாணத்தின் வரலாற்றில் முதல்தடவையாக    தங்கப்பதக்கத்தினை வெற்றி கொண்டுள்ளார் 
இவரிற்கான கௌரவிப்பு நிகழ்வு  10 / 10 / 2014    அன்று நடைபெற்றபோது சாதனையாளர் ரஜிதா பிரதான வீதி பறாளை சந்தியிலிருந்து மாணவர்கள் வீத்யின் இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்க கல்விச் சமூகத்தினர் புடை சூழ பாண்ட்வாத்திய அணிவகுப்புடன் நிகழ்விடமான ரிட்ஜ்வே  மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டார் .
உடற்கல்வி பொறுப்பாசிரியர் சிவச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற   இந்நிகழ்விற்கு செல்வி.ரஜிதாவின் தாயாரும் ,கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் முன்னாள் அதிபர் பிரம்மஸ்ரீ .ஸ்ரீகாந்தன் அவர்களும் வலிகாமம் கல்வி  வலய உடற்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திருமதி.கோசலை குலபாலசிங்கம் அவர்களும் பழையமாணவர் சங்க தலைவர் திருமதி நாச்சியார் செல்வநாயகம் அவர்களும் கலந்துகொண்டனர் .
உரையாற்றிய அனைவரும் சாதனையை பாராட்டியதுடன் ,முன்னாள் அதிபர் தனதுரையின்போது மூளாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை கற்ற ரஜிதா விக்டோரியா கல்லூரியில் இணைந்து கொண்டது முதல் அனைத்து விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டியதாகவும் இவரது காலத்தில் துடுப்பாட்டம் ,எல்லே போன்ற விளையாட்டுகளில் எமது பாடசாலை முன் நிலைக்கு வரக்கூடியதாக இருந்ததுடன் பயிற்ச்சியாளர் திரு.ந .சிவரூபன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் எமது  துடுப்பாட்ட அணியினர் கடந்த 5  வருடங்களாக மாகாண மட்டத்தில் முதலிடத்திலும் 2012 இல் தேசிய மட்டத்தில் 2 ம் இடத்தினை பெறக்கூடியதாக இருந்ததாகவும் குறிபிட்டார்
                ஆஸ்திரேலியா பழையமாணவர் சங்கம் 25000 ரூபா பணப்பரிசும் ஐக்கியஇராச்சியம் - திருமதி.நகுலேஸ்வரி இரகுநாதன் அவர்கள் 24000  ரூபா பணப்பரிசும் வழங்கி கௌரவித்தனர்

See Photos