Tuesday 25 September 2012

விக்ரோறியா பெண்கள் துடுப்பாட்ட அணி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்‏

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் பெருவிளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான துடுப்பாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இறுதிப் போட்டியில் 30 ஓட்டங்களை 5 பந்துப் பரிமாற்றத்தில் விக்ரோறியா அணி பெற்றது. எதிர்த்தாடிய விஜயபாகு மகளிர் கல்லூரி 4.4 பந்துப் பரிமாற்றங்களில் குறித்த இலக்கை அடைந்ததால் விக்ரோறியாக் கல்லூரி அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.