Saturday 19 January 2013

கடும் பனியில் (Snow) இங்கிலாந்து சிக்கித் தவிப்பதால், 3000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
சாலைகள், விமான நிலையங்கள், ரயில் தண்டவாளங்களில் பனி சூழ்ந்துள்ளது, இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக பிரபலமானதும், பரபரப்பானதுமான ஹீத்ரு விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.
பனி காரணமாக இந்த விமான நிலையத்தில் நேற்று மட்டும் 365 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஓடு பாதைகளில் மலை மலையாய் குவிந்துள்ள பனியை 24 வாகனங்களில் ஊழியர்கள் தொடர்ந்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் பிர்மிங்காம் விமானநிலையம், சவுத்டாம்டன் விமானநிலையத்திலும் பல விமானங்கள் இயக்கப்படவில்லை.
போக்குவரத்து முடங்கியதால் நாடு முழுவதும் 3,000க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.
மேலும் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால், மக்கள் வெளியே வராமல் வீடுகளுக்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.