Friday 2 August 2013

OSA-UK Completing another Project‏

யுகே பழைய மாணவர்ஒன்றியத்தின் அனுசரணையுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் விளையாட்டுகளில் பங்குபற்றும் மாணவர்களின் சில அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் விளையாடு வீரர்களின் மற்றைய தேவைகளை நிறைவு செய்து கொள்ளவும் இப் புதியதிட்டம்நடைமுறைப்படுத்தப்படவுள்ளது .
இதன் முதற்கட்டமாக யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவரும் ,பிரித்தானியாவின் பிரபல Cricket Clubபின் துடுப்பாட்ட வீரரும் ,துடுப்பாட்டப் பயிர்ச்சியாளருமான திரு.ஆனந்தகுமார் (ஆனந்தன்) அவர்கள் எமது கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளார் .அவரின் இந்த விஜயத்தின் போது துடுப்பாட்ட வீரர்களுக்கான பல உபகரணங்களையும் ,விளையாட்டு வீரர்களுக்கான மேலங்கிகளையும்,தொப்பிகள் போன்றவற்றையும் அன்பளிப்புச் செய்வதுடன் 3நாட்களுக்கு விளையாட்டுவீரர்களுடனும் ,ஆசிரியர்களுடனும் பயிற்சி நெறி பற்றிகலந்துரையாடவுள்ளார் .  
இந்த ஊக்கமளிக்கும் வேலைத்திட்டம் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின்  சிலஉருபினர்களால்  நெறிப்படுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்படவுள்ளது .இத்திட்டம் தொடர்ந்து நடைபெற கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம் . நீங்களும் இவ் வேலைத்திட்டத்தில் பங்குபற்ற விரும்பினால் யுகே பழைய மாணவர் ஒன்றியத்துடனும் கல்லூரி, நிர்வாகத்துடனும் தொடர்புகொள்ளவும் .
இவ் வேலை திட்டத்தில் ஈடு பட்டஅனைவரின்  ஆக்கபூர்வமான சேவைக்கு கல்லூரிசமூகமும் ,யுகே பழைய மாணவர் ஒன்றியமும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.
நன்றி