Saturday 31 August 2013

News Letter 2013-Aug


Monday, 26 August 2013

Maalai Amuthu 2013 - In aid of Chulipuram Victoria College Fund

ஆதிஸ் தங்க நகை மாளிகை ஆதரவில் சுழிபுரம் விக்டோரோரியா கல்லுரி பழைய மாணவ சங்க ஆஸ்திரேலியா மெல்பேன் கிளையின் வருடாந்த மாலை அமுது நிகழ்வு தலைவர் திரு இளங்குமரன் தலைமையில் கடந்த சனிக்கிழமை (24/08/2013) டண்டினொங்கில் உள்ள மென்சஸ் மண்டபத்தில் நடைபெற்றன.இதில் பிரதம விருந்தினராக பழைய மாணவனும் அண்மையில் மெல்பேனில் இறைபதம் அடைந்த கல்லூரியின் முன்னால் ஆசிரியை திருமதி. மதியாபரணம் ( மதி டீச்சர் )இன் மகனுமான திரு ரவி ரவிச்சந்திரா OAM அவர்கள் கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் திருமதி.மீனா இளங்குமரனின் மாணவர்களின் வரவேற்ப்பு நடனம் ,செல்வி.ருக்சிகா இளங்குமரன் கர்நாடக இசை கச்சேரி மற்றும் விக் சுந்தர் இசைக்குழுவின் பழைய புதிய சினிமா பாடல்கலும் இடம்பெற்றன.

 See Ebook

Friday, 23 August 2013


Excellent dance performance by Victoria College Students

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 16-08-2013 வெள்ளிக்கிழமை இரவு சப்பறத் திருவிழா நடைபெற்றது. இதன் போது நிகழ்ந்த விக்டோரியா கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி. இந் நிகழ்ச்சியை விக்டோரியக் கல்லூரியின் நடன ஆசிரியை திருமதி ஸ்ரீதேவி,
முன்னால் சங்கீத ஆசிரியை பங்கயச்செல்வி ஆகியோர் சிறப்பாக மேடை ஏற்றினார்கள். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், Video உதவி புரிந்த கோணாத் அனைவருக்கும் U-K பழைய மாணவர் ஒன்றியம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறது.

See Photos

Photograph by Kiruththiga Keerthi
   Video Konath

Wednesday, 21 August 2013



Sri Lanka Cricket Association - Cricket Tournament

இலங்கைத் துடுப்பாட்டச்சங்கம் நடாத்தும் துடு்ப்பாட்டப் போட்டிகளில் எமது கல்லூரியின் 17 வயது அணி பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரியினை வெற்றி கொண்டு மூன்றாம் சுற்றில் கலந்துகொள்ளும் தகுதியைப் பெற்றுள்ளது. ஹாட்லிக்கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் மூன்று இலக்குகளால் விக்ரோறியாக் கல்லூரி அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஹாட்லிக் கல்லூரி அணி 125 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. விக்ரோறியாக் கல்லூரி அணி சார்பாக பா.பிரதீஸ், சி.குகசாந்தன், இ.சிவராம் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றினர். ஹாட்லிக் கல்லூரியின் க.அனந்தசயனன் அதிகளவாக 27 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பதிலுக்குக் களமிறங்கிய விக்ரோறியாக் கல்லூரி அணி ஏழு இலக்குகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. சி.சிவசங்கர் 33 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஹாட்லிக் கல்லூரி சார்பில் க.அனந்தசயனன் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். இதன் மூலம் விக்ரோறியாக் கல்லூரி அணி மூன்று இலக்குகளால் ஹாட்லிக் கல்லூரியை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் கலந்துகொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

Sunday, 18 August 2013


Our Principal's Interview

விக்டோரியா கல்லுரி அதிபர் திரு.ஸ்ரீகாந்தன் அவர்கள் மெல்பேன் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சங்கநாதம் வானொலிக்கு அளித்த நேர்காணல்
See Video






SriLanka Cricket Association - Cricket Tournament 2013

 
இலங்கைத் துடுப்பாட்டச் சங்கம் நடாத்தும் துடுப்பாட்டப்போட்டிகளின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. எமது கல்லூரியின் 17 வயதுப் பிரிவு அணி முதலாம் கட்டத்தில் கலந்துகொண்ட போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டாம் கட்டப் போட்டிகளில் முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரி (தேசிய பாடசாலை), சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றுடன் போட்டியிடவேண்டும்.
வெள்ளிக்கிழமை முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியுடன் நடந்த துடுப்பாட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய வித்தியானந்தாக் கல்லூரி 212 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய விக்ரோறியாக் கல்லூரி 183 ஓட்டங்களை மட்டும் பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியுடன் நடைபெற்ற போட்டியில் விக்ரோறியாக் கல்லூரி 158 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 117 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது.விக்ரோறியாக் கல்லூரி சார்பில் செ.கிரிசாந் 31 ஓட்டங்களையும் ப.பிரதீஸ் 29 ஓட்டங்களையும் தி.செந்தூரன் 23 ஓட்டங்களையும் பெற்றனர். அ.மிதுசன் 21 ஓட்டங்களைக் கொடுத்து 04 இலக்குகளைக் கைப்பற்றினார்.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்காக மு.கார்த்திகேயன் 27 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் இ.சிவராம், ப.பிரதீஸ், சி.கோகுல்ராஜ், வை.கஜன் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளை வீழ்த்தினர். அடுத்த வாரம் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியுடனான போட்டி நடைபெறவுள்ளது.

Sunday, 11 August 2013


Dr.Sakunthalai - Visit to our school

இன்று எமது கல்லூரிக்கு பழைய மாணவியான Dr.சகுந்தலை தனது குடும்பத்தினருடன் வருகைதந்தார். கல்லூரியில் கற்கும் காலத்தில் முதன்மை மாணவியாகத் திகழ்ந்த இவர் ஒரு வைத்திய கலாநிதி ஆவார். அதிபர், உதவி அதிபர் ஆகியோரை சந்தித்து கல்லூரி வளர்ச்சி குறித்து கலந்துரையாடிய Dr.சகுந்தலை தான் கல்வி கற்ற கால அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன் கற்பித்த ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்தார். தன்னை இன்றைய உயர்நிலைக்குக் கொண்டுவந்த விக்ரோறியா அன்னை குறித்து உற்சாகத்துடன் கருத்துக்களை பரிமாறிய அவர் ஆங்கிலம், கணனிக்கல்வி என்பவற்றில் மாணவர்கள் கூடுதலான கவனம் செலுத்த ஆவன செய்யுமாறும் அதற்குத் தாங்கள் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் கூறினார். Dr.சகுந்தலை அவர்கள் சுழிபுரம் பறாளாய் வீதி அமரர் சுப்பையா உடையார் அவர்களின் பேர்த்தியும் அமரர் சிவஞானம் அவர்களின் புத்திரியுமாவார்.

Friday, 9 August 2013


பழைய மாணவன் கல்லூரிக்கு விஜயம்

சுழிபுரம் விக்ரோறியாக்கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினர் திரு .க .மனோகரன் அவர்கள் தனது குடும்பத்தினருடன் கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார் .
அத்துடன் கல்லூரியின் அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்களுடன் கல்லூரயின் நிலவரங்களைப் பற்றியும் ,கல்லூரியின் வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியும் கலந்துரையாடியுள்ளார் .மற்றும் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தால் செய்து முடிக்கப்பட்ட" Ridge Way Hall "புனரமைப்பு ,புதிய சிற்றுண்டிச்சாலை போன்ற வேலைத்திட்டங்களை பார்வையிட்டுள்ளார் .அவர்களுடன் ஆனந்தகுமாரும் உடனிருந்துள்ளார் .இவருடைய இந்த விஜயம் நல்ல சுமூகமாக நிறைவடைந்துள்ளது .

யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photo Set1

See Photo Set2


Ongoing Issuru Projects

இசுறு வேலைத்திட்டத்தின் கீழ் கல்லரியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. மத்திய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதான நுழைவாயில், ஆண் பெண் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் மற்றும் விசேட தேவையுள்ள மாணவர்களுக்குமான மலசலகூடங்கள் என்பவற்ிறன் வேலைகள் உரிய ஒப்பந்த காரர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

Tuesday, 6 August 2013


Anandhkumar - Visit to Principal's Residence

ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றிய உறுப்பினர் (SAS  Executive member) திரு.க.ஆனந்தகுமார் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின் அதிபர் அவர்களின் வீட்டிற்கும் குடும்பத்துடன் சென்றிருந்தார். அதிபர் குடும்பத்தினர் அவருக்கு இராப்போசன விருந்தளித்து மகிழ்ந்தனர். இவ்வேளையில் உபஅதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களும் வருகை தந்திருந்தார். கல்லூரியின் வளர்ச்சி குறித்தும் தேவைகள் பற்றியும் அவர்கள் கலந்துரையாடினார்கள்.


நாவலர் முன்பள்ளியின் விளையாட்டுபோட்டி

சுழிபுரம் நாவலர் முன்பள்ளியின் விளையாட்டுபோட்டி கடத்த 03/08/2013 நடைபெற்றது அதன் படங்கள்.

Photos


Monday, 5 August 2013


2013 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்

2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (05/08/2013) ஆரம்பமாகின்றது. அந்தவகையில் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் உதயன் இணைய செய்திப் பிரிவு  வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றது.

அதன்படி இன்று ஆரம்பிக்கப்படும் பரீட்சைகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடையும். எனவே பரீட்சை நடைபெறுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக பரீட்சார்த்திகள் பரீட்சை மண்டபத்திற்குள் வரவேண்டுமென பரீட்சை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Guides - Camp Fire‏

விக்ரோறியாக் கல்லூரியின் பெண் சாரணியர்களுக்கான பாசறை கடந்த மூன்று தினங்களாக கல்லூரியில் நடைபெற்றது. இருபது பெண் சாரணியர்கள் கலந்து கொண்ட இப் பாசறையினை சாரணியப் பொறுப்பாசிரியைகளான திருமதி.தி.கதிர்காமநாதன், திருமதி.சு.பாலகுமார் ஆகியோர் நெறிப்படுத்தினர். வட மாகாண பெண் சாரணிய ஆணையாளர் திருமதி.கி.சிவராஜா உட்பட மாவட்ட மற்றும் வலய ஆணையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி அதிபரின் ஆசியுடன் ஆரம்பமான பாசறையின் நிகழ்வுகளின் போது சாரணப் பொறுப்பாசிரியரும் காங்கேசந்துறை சாரண மாவட்ட துணை ஆணையாளரும் உப அதிபருமான திரு.செ.சிவகுமாரன் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். சாரணியர்கள் மிக உற்சாகத்துடன் பாசறையை முன்னெடுத்தனர். நிறைவு நாள் பாசறைத்தீ (Camp Fire) நிகழ்வில் கல்லூரி அதிபர் பிரதம விருந்தனராகவும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர். திரு.ஆனந்தகுமார் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர்களின் உதவியுடன் கல்லூரியின் சாரணர் அமைப்பின் வளர்ச்சிக்காக உதவுவதாகக் கூறினார். சாரணியர்களுக்கிடையிலான போட்டிகளின் போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. மிகச் சிறப்பாக இடம்பெற்ற பாசறை நிகழ்வுகளின் போது பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

See Photos Set1

See Photos Set2

See Videos

Sunday, 4 August 2013


Victorian Ananthakumar spent his valuable time with our school‏

ஐக்கிய ராச்சியம் பழைய மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த திரு.க.ஆனந்தகுமார் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்து மூன்று தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். கடந்த 2ம் திகதி தவணை நிறைவு நாளில் கல்விசார் செயற்பாடுகளில் ஒன்றாக உயர்புள்ளி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசுகளை வழங்கினார். விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பயிற்சிக்கான உடைகள், தொப்பிகள் போன்றவற்றை வழங்கினார். விளையாட்டு  வீர வீராங்கனைகளுக்கு செயலமர்வுகனை நடாத்தி ஒவ்வொரு விளையாட்டு வீரனும் உடல் தகுதியைப் பேணுதல், உணவுப் பழக்க வழக்கங்கள், விளையாட்டு மைதானத்தில் கைக்கொள்ளவேண்டிய பண்புகள், பயிற்சிகள் எனப் பல விடயங்களை கலந்துரையாடினார். மைதானத்தில் மாணவர்களுக்கு பல்துறை விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கினார். சாரண மாணவர்களுடன் கருத்தரங்குகளை நடாத்தினார்.கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற பெண் சாரணியர் பாசறையை தொடர்ந்து இன்று பாசறைத் தீ நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்புரையாற்றி பெண் சாரணியர்களுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வித்தார். விக்ரோறியாவில் பெறுமதியாக தனது மூன்று தினங்களை செலவு செய்து கல்லூரி மீது தான் கொண்ட பற்றுறுதியை வெளிப்படுத்தினார். கல்லூரிச் சமூகம் அவருக்கும் ஐக்கிய ராச்சிய பழைய மாணவர் ஒன்றியத்திற்கும் தனது நன்றியைத் தெரிவிக்கின்றது.

See Photos

Saturday, 3 August 2013


யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரண்டாவது நாள் துடுப்பாட்டப் பயிற்சி

யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அனுசரணையுடன் எமது கல்லூரியில்நடைபெற்று வரும் இரண்டாவது நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதியபயிற்சி முறைகளை யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் அங்கத்தவரான திரு.ஆனந்தன்அவர்கள் அளித்து
வருகின்றார்.துடுப்பாட்ட வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சி முறைகளைக்கற்று வருகின்றார்கள் இப்பயிற்சி திடலுக்குத் தேவையான குளிர் பாண உதவிகளை திரு.இ.ஸ்ரீரங்கன்அவர்கள்
செய்து வருகின்றார் .அவருக்கு யுகே பழைய மாணவர் ஒன்றியம் தங்களதுநன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார்கள்.

யுகே பழைய மாணவர் ஒன்றியம்.

See Photos