Saturday 22 February 2014

பிரிவுபசார நிகழ்விற்கென அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க ரூபா 100 000.00 /-ஆசிரியர்கழகத் தலைவர் திரு .ஜேம்ஸ் பஸ்ரியனிடம் ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் கையளித்துள்ளது

எமது கல்லூரி கல்வி விளையாட்டு மற்றும் கலை போன்றவற்றில் அபரிமிதமான முன்னேற்றம் கண்டுவருவதற்கு அதிபரின் வழிகாட்டலில் செயற்படும் ஆசிரியர் குழாமே காரணம்.
அத்தகைய அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களில் 19 பேர் இடமாற்றம்பெற்றுச் செல்வது எமக்கெல்லாம் பேரிழப்பாகும்.
அதேவேளை அவர்களுக்குப் பதிலீடாக வந்துள்ள ஆசிரியர்களிடம் இதேமாதிரியான அர்ப்பணிப்பினை விநயமாக வேண்டி நிற்பதோடு அவர்களுக்கான முழு ஒத்துழைப்பு எப்போதும் உண்டு என  ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறது.
இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களின் சேவையைப்பாராட்டி அவர்களிற்கு நடாத்தப்படவுள்ள பிரிவுபசார நிகழ்விற்கென அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க ரூபா 100 000.00 /-ஆசிரியர்கழகத் தலைவர் திரு .
ஜேம்ஸ் பஸ்ரியனிடம் ஐக்கியராச்சியம் பழைய மாணவர் ஒன்றியம் கையளித்துள்ளதுஇந்நிதியுதவியினை வழங்கிய எமது ஒன்றிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
மேலும் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க அவூஸ்திரேலியா பழையமாணவர் ஒன்றியமும் ரூபா 70 000.00/- வழங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்திலே அவர்களையும் 
 நன்றியறிதலுடன் பார்க்கின்றோம் .


எமது நன்றிக்குரிய ஆசிரியமணிகள்
1.            திரு. கைலைவாசன்- பிரதி அதிபர். கல்லூரி நிருவாகத்தில் அதிபருடன் தோளோடு தோள் நிற்பவர்.
2.            திரு நா திருக்குமாரன்- இணைந்த கணித பாட ஆசிரியர். இவரது காலத்தில் மாணவர்கள் பொறியியற் பீடம் மற்றும் பௌதீக விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றமை குறிப்பிடத் தக்கது.
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்- இவரது காலத்திலேயே எமது பாடசாலை விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.
பகுதித் தலைவராக நிருவாகத்தில் உறுதுணையாகவிருப்பவர்.
3.            திருமதி நேசராணி தனபாலசிங்கம்- உயிரியல் ஆசிரியர் - இவரது காலத்தில் மாணவர்கள் மருத்துவ பீடம் மற்றும் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பல்கலைக்கழக அனுமதி பெற்றமை குறிப்பிடத் தக்கது. விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
பகுதித் தலைவராக நிருவாகத்தில் உறுதுணையாகவிருப்பவர்.
4.            திருமதி லலிதா தர்மதேவன்- சமயபாட ஆசிரியை. மாணவர்கள் சமயபாடத்தில் அதிசிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்குக் காரணமானவர். சமயப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்ற வைத்து பாடசாலைக்கு வெற்றிகளை ஈட்டித் தருபவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர். பாடசாலை நிகழ்வுகளை
 ஒழுங்குபடுத்துவதில் முன்னிற்பவர்.
5.            திருமதி நேசமலர் மரியதாசன்- தமிழ் ஆசிரியை. அர்ப்பணிப்புள்ள சிறந்த ஆசிரியராகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6.            திருமதி ஜெயசோதி  மதிவதனன்- இந்துநாகரிக ஆசிரியை. அர்ப்பணிப்புள்ள சிறந்த ஆசிரியராகச் செயற்பட்டு வந்துள்ளார்.
7.            திருமதி கோமளா தேவசுதன்- இந்துநாகரிக ஆசிரியை. இந்துநாகரிகம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களைக் கறபிக்கின்ற அர்ப்பணிப்புள்ள சிறந்த ஆசிரியையாவார் . விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர். பாடசாலை நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதில் முன்னிற்பவர்.
8.            திருமதி நிலாவரசி பிரணவரூபன்- பௌதீகவியல் ஆசிரியை. இவரது காலத்தில் மாணவர்கள் பொறியியல் மருத்துவ பீடங்கள்; மற்றும் பௌதீக உயிரியல் விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழக அனுமதி பெற்றமை குறிப்பிடத் தக்கது.
உயர்தர மாணவர்மன்றப் பொறுப்பாசிரியர்.
9.            திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன்- நடன ஆசிரியை. நடனத்துறையில் எமது பாடசாலை கோலோச்சுவதற்குக் காரணமானவர். நாட்டுக் கூத்து நாட்டிய நாடகங்கள் தனிநடனங்கள் போன்றவை மாகாண தேசிய மட்டங்கள் வரை செல்லக் காரணமானவர். பல நூற்றுக்கணக்கான மாணவர்களைப் பயன்படுத்தித் தொடர்ந்து பல வருடங்களாக விளையாட்டுப் போட்டிகளில் இடைவேளை நிகழ்ச்சிகளை வழங்கிக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர். பாடசாலைக்குத்  தங்கப்பதக்கம் பெற்றுக் கொடுக்கக் காரணமானவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
நுண்கலைமன்றப் பொறுப்பாசிரியர்.
10.          திருமதி பவளகுமாரி குமரகுரு- சங்கீத ஆசிரியை. பாடசாலைக்கு நேரத்திற்கு வருவதிற் சிறந்த ஆசிரியை எனப் பலவருடம் தொடர்ந்து பாராட்டப்பெற்றவர். தமிழ்த்தினப் போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி வெற்றிகள் பெறக் காரணமானவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
11.          செல்வி ஜெயமலர் - பூதன்- உயர்தர வகுப்புத் தமிழ் ஆசிரியை. பல தமிழ்த்துறைச் சிறப்பு மாணவர்களை உருவாக்கியவர். தொடர்ந்து முதலிடம் பெற்றுவரும் நாட்டுக்கூத்து மற்றும் நாட்டிய நாடகங்களின் வரிகளுக்குச் சொந்தக்காரர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
முத்தமிழ் மன்றப் பொறுப்பாசிரியர்.
தமிழ்த்தினப் போட்டி இணைப்பாளர்
12.          திரு கணேசமூர்த்தி- கணித ஆசிரியர். கணிதம் கற்பிப்பதில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்துள்ளவர். அர்ப்பணிப்புள்ள சிறந்த ஆசிரியராகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. சாரணியம் கரப்பந்தாட்டம் போன்றவற்றில் மாணவர்கள் ஆர்வம் ஏற்படக் காரணமானவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
13.          திருமதி ஜெய கௌரி ஆதித்தன்;- உடற்கல்வி ஆசிரியை. பல்வேறு தேசிய விளையாட்டுக்களில் மகளிர் அணிகளை வெற்றிபெறச் செய்ய அரும்பாடுபட்டு கல்லூரிக்காக உழைத்தவர்.
14.          திருமதி தாட்சாயினி ரமணன்- ஆங்கில ஆசிரியை- மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க அரும்பாடுபட்ட அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்.
15.          திருமதி அனித்தா கண்ணன்- புவியியல் ஆசிரியை. சிறந்த புவியியலாசிரியராகத் தொழிற்பட்டதோடு மட்டுமல்லாது பெருந்தொகையான மாணவர்களை சதுரங்கப்போட்டிகளில் ஈடுபடுத்தி வெற்றிபெறச் செய்தவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
16.          திருமதி தனுஷா தீபன்- ஆங்கிலமொழிமூலம் கணிதபாடத்ததைக் கற்பிப்பதுடன் தகவல்தொழில்நுட்பம் கற்பிப்பதிலும் சிறந்த ஆசிரியர்.
17.          திருமதி வனஜா - பவப்பிரியன்- விஞ்ஞான பாட ஆசிரியை. விஞ்ஞான பாடத்தினை சிறப்பாகக் கற்பிப்பதுடன் சுற்றாடற் கழகத்தினை திறம்பட செயற்படுத்தியவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.
18.          திருமதி சுதர்சினி பாலகுமார்- தமிழ் சமய பாட ஆசிரியர். இவ்விரு பாடங்களையும் சிறப்பாகக் கற்பிப்பவர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்;.

19.          திருமதி கமலினி சுதர்சன்- கணக்கீட்டு ஆசிரியர். கணக்கியலில் சிறந்த பெறுபேறுகள் அமையக் காரணமானவர். கணக்கீட்டில் கடந்த வருடம் 12 யூ சித்திகள் பெறக் காரணமானவர்  (தோற்றிய மாணவர்கள் 23 பேர்). வலைப்பந்தாட்ட அணி மாகாண மட்டம் வரை செல்லக் காரணமான பொறுப்பாசிரியர். விளையாட்டு நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்.