Friday 18 August 2017

செல்வி.ராகவி ரங்கநாதன்-நாட்டிய அரங்கேற்றம்....




P

செல்வி. ராகவி ரங்கநாதன் , இன்று நாட்டிய அரங்கேற்றத்தை அளிக்கைசெய்யவுள்ளவர் , எமது மன்றத்துடன் மிக நெருக்கமான கலைப் பிணைப்புக் கொண்ட ஒருவராக தன்னை 

அடையாளப்படுத்திக் கொண்டவராவார். கடந்த 2016 ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற

எமது மன்றத்தின் 34 வது ஆண்டு நிறைவு விழாவின் போது செல்வி.ராகவி ரங்கநாதனின் 

கலைப் படைப்புகள் எம்மை மகிழ்வித்தன....

    இவரது அற்புதமான கலைத் திறமைகளையும் அதன் மீது இவர் கொண்டுள்ள அதீத பக்தியினையும் கண்டுகொண்ட புலத்திலுள்ள பாரதி சமூகத்தினர் வியப்படைந்தனர்...! எனின்

அது மிகைப்படுத்தப்பட்ட ஓன்றல்ல.

   எமது மன்ற ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான அமரர் சபாபதிப்பிள்ளை சற்குணராஜா அவர்களின் நெருங்கிய உறவு வட்டத்திலுள்ள செல்வி ராகவி ரங்கநாதன் தனது கலைப் 

பயணத்தில் மைல் கல்லை தொட்டுள்ள இன்றைய தருணத்தில், மன்ற ஆரம்பத்தின் போது 

அமரர் 'செட்டி' கலைப் பணிகளை ஆரம்பித்ததன் அறுவடையாக கருதுவதன் ஊடாக அன்னாரையும் இன்று நினைவில் இருத்திக் கொள்கின்றோம்.

     இது தவிர செல்வி.ராகவியை ஈன்றெடுத்த அன்னை திருமதி.புஸ்பதேவி ரங்கநாதன் 

அவர்களையும் அவரது சிறப்புகளையும் இங்கு சுட்டுவது காலக்கண்ணாடியைப் போன்றதாகும்.

புலம் பெயர் தேசத்தில் வதித்த போதிலும் தன் வழித்தோன்றல்களை நம் பாரம்பரிய கலை

வடிவங்களின்பால் இருத்தி , அவர்களிற்கு சிறந்த கலைப் பயிற்சிகளை வழங்கக்கூடிய ஆசான்களை இனங்கண்டு ,அவர்களினூடாக பயிற்றுவித்து ,அவரது துணைவர்அ.ரங்கநாதன் அவர்களுடன் இணைந்து வழித்தோன்றல்களை செம்மைப்படுத்தி இன்று தமது புதல்வி இளம்பராயத்திலேயே அரங்கேற்றம் காணும் நிலைக்கு உயர்வடையச் செய்தமையை ,எமது

பாரதி சமூகத்திற்கு கிடைத்த பெருமையாகவே கருதுகின்றோம்.

      செல்வி.ராகவி தனது கலைப்பயணத்தில் மென்மேலும் உயர்வடைந்து கலையில் தனக்கென

தனியிடத்தை தக்கவைத்து நிலைபெற வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் , இனி வரும் காலங்களில் புலத்தில் கால்பதிக்கும் அவரது கலைப்பயணங்களில் இணைந்து பயணிக்கும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.