Monday, 7 April 2014

School Development Society - Annual General Meeting

எமது கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை றிஜ்வே மண்டபத்தில் முதல்வர் திரு.செ.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்றது. பெருந்திரளான பெற்றோர்கள், ஆசிரியர்கள் வருகை தந்திருந்தனர். தலைமையுரையை அதிபர் அவர்கள் நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வியார்வம், விளையாட்டுத்துறையார்வம், கலைத்துறை ஈடுபாடு என்பவற்றை விருத்தி செய்து சிறப்பான முறையில் முன்னெடுத்து வரும் ஆசிரியர்களையும் அதற்கு உறுதுணையாகவுள்ள பெற்றோர்களையும் பாராட்டினார். செயலாளரின் வருடாந்த அறிக்கை மற்றும் பொருளாளரின் கணக்கறிக்கை என்பன சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்து கலந்து கொண்டதுடன் சிறப்புரையும் வழங்கினார். அவர் தனதுரையில் இவ்வருடத்தில் இலங்கையின் சகல பாடசாலைகளிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்ற பாடசாலை அபிவிருத்திக் குழு பற்றிய விளக்கங்களை வழங்கினார். அபிவிருத்திக்குழுவின் நிர்வாகக் கட்டமைப்பு, வங்கிக் கணக்கு நடைமுறைப்படுத்தல், செயற்பாடுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. 
தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவு நடைபெற்றது. பதவி வழியில் அதிபர் தலைவராகவும் பிரதி அதிபர் உப தலைவராகவும் செயற்படுவார்கள். செயலாளராக “விக்ரோறியன்“ Dr.செ.கண்ணதாசன் (சிரேஸ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம்)அவர்கள் ஒருமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.  உப செயலாளராக “விக்ரோறியன்“ திரு.பா.விஜயகுமார் (பிரதம நூலகர், வலிகாமம் மேற்கு பிரதேச சபை நூலகம்) அவர்களும் பொருளாளராக “விக்ரோறியன்“ திரு.நா.ரமணன் (ஆசிரியர்) அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டனர். 15 பேர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. எமது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வசிக்கின்ற பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக நிர்வாக சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். புதிய காரியதரிசியின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

See More Photos

Friday, 4 April 2014

G.C.E (O/L) Maths Results - 2013

எமது கல்லூரியிலிருந்து க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சென்ற டிசம்பர் மாதம் தோற்றி  கணித பாடத்தில் அதிவிசேட சித்தி (A) பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று கல்லூரி றிஜ்வே மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திரு.செ.சிவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் விக்ரோறியன் திரு.சபாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களைக் கௌரவித்தார். கல்லூரிப் பழைய மாணவரும் கல்லூரியின் முன்னாள் நூலகரும் பிரபலமான கணித ஆசானுமாகிய திரு.ச.பாலகிருஷ்ணன் (பாலா மாஸ்டர்) தற்போது ஜேர்மனியில் வசித்து வருகின்றார். 'A' தரச் சித்தியை கணித பாடத்தில்  பெற்ற 19 மாணவர்களுக்கு   தலா 2000/-வை அன்பளிப்பாக பாலா மாஸ்டர் வழங்கியதுடன் இவர்களுக்குக் கற்பித்த கணித ஆசிரியர்களுக்கும் அன்பளிப்புகளை வழங்கி கௌரவித்தார். அத்துடன் 9A சித்தி பெற்ற மாணவியான செல்வி கார்த்திகாயினி ரவீந்திரன் அவர்களுக்கு ஒவ்வொரு 'A' சித்திக்கும் 1000/- வீதம் 9000/-  “விக்ரோறியன்“ Dr.ரமணன் அவர்களின் அனுசரணையுடன் பாலா மாஸ்டர் கொடுத்து மதிப்பளித்தார். இந் நிகழ்வில் ஓய்வு நிலை அதிபர்களான திரு.வ.ஸ்ரீகாந்தன், திரு.சி.சிவகணேசசுந்தரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள். இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் சுழிபுரம் கல்வி அபிவிருத்திக் குழுவால் (EDC) மேற்கொள்ளப்பட்டிருந்தது.



Thursday, 3 April 2014

சிறந்த பெறுபேறுகள் - க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை - 2013

2013ம் வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி எமது கல்லூரி மாணவர்கள் பெற்ற சிறந்த பெறுபேறுகள் பின்வருமாறு 

1. கார்த்திகாயினி ரவீந்திரன்                       9A (ஆங்கில மொழி மூலம்)
2. புண்ணியமூர்த்தி ஐங்கரன்                     8A B (ஆங்கில மொழி மூலம்)
3. சாமினி சந்திரராஜா                                    8A S (ஆங்கில மொழி மூலம்)
4. மீனேஸ்வரன் விதூர்சன்                        8A C 
5. வனிதா வள்ளிகாந்தன்                            8A S
6. மிதுஷா பாலகிருஷ்ணன்                      7A B C
7. ரஜீத்தனா தமிழ்மாறன்                           7A B S
8. சிவானந்தி சிவகணேசசுந்தரன்         6A 2B S (ஆங்கில மொழி மூலம்)
9. தவரத்தினம் கதிர்ராஜா                          6A 2B C
10. கிருஷ்ணமூர்த்தி பிரசாந்                    6A 2B C
11. சிவரஞ்சனி செல்வராசா                     6A 2B S
12. வைஷ்ணவி சோதிரத்தின சர்மா  5A 2B 2C
13. சௌந்தரராஜன் கஜலன்                     5A 3B S
14. பன்னீர்ச்செல்வம் பிரணவன்          4A 3B C S (ஆங்கில மொழி மூலம்)
15. தர்சினி விநாயகமூர்த்தி                     4A 2B C 2S
16. ஜனனி அருட்செல்வன்                       4A 3B 2C
17. மோகனராஜா கோகுலன்                   3A B 4C S (ஆங்கில மொழி மூலம்)
18. பரநிரூபசிங்கம் ஐங்கரன்                   3A 4B C S
19. ஜெயராசா நிஷாந்தவேல்                 3A 5B C
20. குணரத்தினம் கீர்த்தன்                       3A B 4C S
21. துரைசிங்கம் சுதர்சன்                          3A 4B C
22.  தர்சனா சந்திரசேகரம்
                        3A B 3C 2S
23. நித்தியானந்தன் டிலக்சன்                 2A 5C 2S
24. சோபிகா செல்வராசா                         2A 2B 3C 2S
25. கோகிலகபிலா சந்திரகுமார்            2A 2B 3C 2S
26. சிந்துஜா பாலேந்திரராஜா                  2A 2B C 3S
27. தவராஜா பிரணவன்                            2A 4B 3C (ஆங்கில மொழி மூலம்)


Thursday, 27 March 2014

புதிய வாசல்

“இசுறு“ பாடசாலை அபிவிருத்தித்திட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட புதிய Gate வாசல் தற்போது மாணவர்களின் வழமையான பயன்பாட்டுக்குட்படுத்தப்படுகின்றது. கல்லூரியின் பெயர் ஒரு பக்கத்திலும் மறுபக்கத்தில் பாதுகாவலாளி அறையும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.. கல்லூரியின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாக இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

See More Photos

Friday, 21 March 2014

Major Achievement on our school archive project. Stage 2 Completed.

138 ஆண்டுகள் பழமை வாய்ந்த எமது கல்லூரி மாபெரும் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதுஆங்கிலேயர் காலத்தில் அவர்களது மகாராணியின் பெயரைத் தாங்கி எமது நிறுவுனர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஏழைச் சைவமாணவர்களது அறிவுக் கண்களைத் திறந்து வைத்தது.
பல்வேறு திறமையும் அர்ப்பணிப்பும் மிக்க அதிபர்களின் வழிகாட்டலில் பல்வேறு சாதனைகள் படைத்துவருவது எமது பாடசாலை.
இத்தகைய வரலாற்றுப் பதிவுகள் பலரது பார்வையில் நூல் வடிவில் 125ஆவது மற்றும் 135ஆவது ஆண்டுமலர்களாக வெளியிடப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
125ஆவது ஆண்டுமலர் , 135ஆவது ஆண்டுமலர் மற்றும் கடந்த 10 வருட பரிசளிப்பு விழா மலர்கள்,  உலகெங்கும்  பரந்துவாழும் எமது பழைய மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதோடு காலாகாலமாகப் பாதுகாத்து வைக்கப்படவேண்டும் என்ற எமது வாழ்நாள் அதிபர் திரு ஸ்ரீகாந்தனின் வேண்டுகோளின்படி எமது யூ+  கே பழைய மாணவர் ஒன்றியம் அதனை இலத்திரனியல் புத்தகமாக மாற்றி இணையத்தளத்தில் உலவ விட்டுள்ளது.

இந்த வேலை திட்டத்தில் எமது நிறைவேற்றுக்குழு உறுப்பினர் திரு சி இரவிசங்கர்  அவர்களுடன் சேர்ந்து உழைத்த Dr S கண்ணதாசன் திரு து இரவீந்திரன் மற்றும் சியாமளன்  கண்ணதாசன் மற்றும் இந்த வேலைத்திடட்தினை ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வழி நடத்திய எமது வாழ்நாள் அதிபர் திரு வ ஸ்ரீகாந்தன் அவர்கள் பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியவராவார்.


சிறப்பு மலர்கள் 


Prizeday Reports (Last 10 Years)

All above E-Archive books are available in our website home page.