Monday, 8 October 2012

ஆசிரியர் தின விழா VC 2012

08.10.12 அன்று எமது சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் திரு .வி .உமாபதி தலைமையில் நடைபெற்றது .இவ்விழாவிற்கு முன்னாள் அதிபர் திரு .எஸ் .பத்மநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் எமது மதிப்பிற்குரிய அதிபர் திரு .வ .ஸ்ரீகாந்தன் அவர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பரிசில்கள் வழங்கப்பட்டது .இவ்விழாவில் கலந்து கொண்ட யாவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்.
Watch Teacher's Dy Song by OSA-UK

Sunday, 7 October 2012

ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஆசிரியர் தினம்

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தினம் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபற்றது .இவ்விழாவில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் உட்பட E.D.C அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆசிரியர் தினத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாவும் ,இந்த புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் எடுத்து அயராது உழைத்த ஆசிரியர்கள் மூவருக்கு தலா பத்தாயிரம் ரூபாவும் விக்ரோறியாக் கல்லூரியின் யுகே பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் திரு .சி .ரவிசங்கர் அவர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளார்.
இந்த வருடம் 6 மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைய வைப்பதற்கு அயராது பாடு பட்ட E.D.C அமைப்பாளர்களுக்கு ,யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
யுகே பழைய மாணவர் ஒன்றியம் .

See Photos

See Video

Saturday, 6 October 2012

கல்லூரியில் துடுப்பாட்டப் போட்டி

நேற்று சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் கல்லூரியின் ஆசிரியர்களுக்கும் ,மாணவ முதல்வர்களுக்கும் இடையில் நடைபெற்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆசிரியர்கள் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது .

Friday, 5 October 2012

கட்டுரைப் போட்டியில் முதலிடம்

சர்வதேச அஞ்சல் தினத்தை முன்னிட்டு இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் தேசிய மட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரியைச் சேர்ந்த செல்வி.காயத்திரி தேவசுதன் முதலாமிடம் பெற்றுள்ளார்.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் 06.10.2012 சனிக்கிழமை நடைபெற இருக்கும் சர்வதேச அஞ்சல் தின விழாவில் இவருக்கான சான்றிதழும் பரிசில்களும் வழங்கப்படவிருக்கின்றன.

English Day Competitions - Provincial Level Winners - 2012‏

Provincial level English Day competition were conducted last week. Our students also Miss.Gayathri Thevasuthan have won the second place for Dictation and selected for the National Level Competition. It will be conducted in the next month.
Miss.Yasothara Ganeshanayagam have won the third place for creative writing.

Ridge Way Hall" தரைப் புனரமைப்பு ஆரம்பம்

எமது கல்லூரியின் நூறு வருடத்திற்கு மேற்பட்ட" Ridge Way Hall"இன் தரைப் புனரமைப்பு வேலை கடந்த 30.09.12 ஞாயிற்றுக்கிழமை அன்று மங்களகரமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இவ்வேலைத்திட்டத்திட்டம் முழுமையாக முடிவடைவதற்கு 6 கிழமைகள் தேவைப்படும் என்று தொல்புரம்" மாபிள் கம்பனி "நிறுவனத்தினர் கேட்டுள்ளனர் .இதற்கு பல இலட்சம் ரூபா செலவாகலாம் என்றும் அக்கம்பனி நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர் .இவ்வேலைத்திட்டத்தினை கல்லூரி நிர்வாகத்தினரும் ,E.D.C அமைப்பினரும் முழு மேற்பார்வை செய்து வருகின்றார்கள் .
யுகே பழைய மாணவர் ஒன்றியம்

Thursday, 4 October 2012

Children's Day at Bharathy

முதியோர் தினமும் சிறுவர் தினமும் பாரதி முன் பள்ளியில் 01/10/2012 அன்று மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது.

See Photos

Wednesday, 3 October 2012

Canada Get-to-gether 2012

Canada OSA get-to-gether was held recently.
Please see the photos by clicking the link below.

See Photos (J)