Wednesday, 26 July 2017

இலக்கிய விமர்சன தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி சி.பிரவீணா 2 ம் இடம்

        2016 இல் புதிதாக அறிமுகம் செய்யப் பெற்ற இலக்கிய விமர்சன  தேசிய மட்ட போட்டியில் விக்ரோரியாக் கல்லூரி மாணவி செல்வி .சிவாஸ்கரன்   .பிரவீணா 2 ம் இடத்தை பெற்றுக் கொண்டார். 

        விக்ரோரியாக் கல்லூரி தமிழ் ஆசிரியை திருமதி.பங்கயச்செல்வி  யோகநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் போட்டிகளில் பங்குபற்றிய செல்வி பிரவீணா . கோட்ட மட்ட போட்டியில் 2 ம் இடத்தினையும் வலய மட்ட போட்டியில் 1 ம் இடத்தினையும் மாகாண மட்டப் போட்டியில் 1 ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

Thought For The Day.....


Thought For The Day....


Tuesday, 18 July 2017

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா......

  பாரதி கலை மன்றம் 24-05-1982 இல் உதயமாகி, கவி பாரதி கொண்ட எழுச்சி நடையுடன்  பவனிவந்த 35வது ஆண்டு நிறைவை , விழாவாக்க  மகிழ்வுடன் தயாராகி வருகின்றது. புலம் பெயர் பாரதி சமூகத்தினரின் நல்வரவுடனும்- அவர்களின் பங்கேற்புகளுடனான கலைப்படைப்புகளுடனும் நிகழ்வுகள் மெருகேற்றப்படவுள்ளன.

                                                      புத்தம் புதிய கலைகள்- பஞ்ச
                                                           பூதச்செயல்களின் நுட்பங்கள் கூறும்;
                                                      மெத்த வளருது மேற்கே-அந்த
                                                           மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
எனும் பாரதியின் ஆதங்கத்தைப் போக்க மேற்குலக புலம்பெயர் உறவுகளின் கலை மேன்மைகளை நாமும் உள்ளீர்த்து புதிய பாதையில் பயணிக்க தயாராகியுள்ளது அரங்கம்.

      நாகலிங்கம் சுப்பையா அவர்கள் நினைவாக அவர்கள் வழித்தோன்றல்களால் நிர்மாணிக்கப்பெற்று 24-05-2014 அன்று கையளிக்கப்பெற்ற "சுப்பையா அரங்கு" அவரது வழித்தோன்றல்களால் மீள்வர்ணம் பூசப்பெற்று மெருகூட்டப்பட்டு வருகின்றது.









     5/08/2017, 6/08/2017 சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள், புலம் பெயர் உறவுகளின் வருகைக்காக விழா விரிவாக்கம் கண்டுள்ளது. கலை மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள்- மன்ற இசை பயிற்சி வகுப்பு  மாணவர்கள் - மன்ற நடன பயிற்சி வகுப்பு மாணவர்கள் - பாரதி முன்பள்ளி சிறார்கள்-    மன்ற உறுப்பினர்கள்-விக்ரோறியாக் கல்லூரி மாணவர்கள் - பொன்னாலை சந்திர பரத கலாலயத்தினர்-பாரதி சமூக புலம் பெயர் உறவுகள்-எமது கிராமத்தவர்கள் என பலரதும் கலைப் படைப்புகள் அரங்கம் காண உள்ளன.

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா- இரு நாட்கள் 5 , 6 Aug 2017


Sunday, 4 June 2017

பாடசாலை அபிவிருத்திச்சங்க வருடாந்த பொதுக் கூட்டம்-4/6/2017

கூட்டம் காலை 9:45 மணியளவில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.   தலைவர்,அதிபர் சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் தனது தலைமையுரையின் போது பொருளாளர் திரு.நா.ரமணன் அவர்கள் இன்றைய கூட்டத்திற்கு சமூகம் தராத காரணத்தினால் இன்று வரவு-செலவுக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்பதனால் இன்றைய கூட்டம் விஷேட பொதுக்கூட்டமாகவே நடாத்தப்படவுள்ளதாக கூறி சபையோரிடம் மன்னிப்புக் கோரினார்.
           எனினும் இன்றைய கூட்டத்தின்போது 2017 ம் ஆண்டிற்கான நிறுவுனர் நினைவு நாளும் பரிசளிப்பும் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அத்துடன் மாணவர் ஒழுக்கம் , 2018 ம் ஆண்டிற்கான அனுமதி ஆகியன தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். வழமையாக பரிசளிப்பு 3 ம் தவணையிலேயே இடம்பெறுவதாகவும் இவ்வருடம் முதல் பரிசளிப்பானது 2ம் தவணையிலேயே நடாத்தப்படவுள்ளதாகவும் கூறி இவை தொடர்பான விபரங்களை பிரதி அதிபர் மதிதரன் அவர்கள் விளக்கமளிப்பார் என அவரிற்கு சந்தர்ப்பமளித்தார்.
 
   இம்முறை பரிசளிப்புத்திட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அதன்படி

Monday, 8 May 2017

விக்ரோறியாக் கல்லூரியில் 8 May 2017 இல் நடைபெற்ற பிரான்ஸ் பழைய மாணவர்களின் உதவு தொகை வழங்கும் நிகழ்வு

அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏற்பாட்டாளர் திரு.ச.பாலகிருஷ்ணன் அவர்கள் பிரான்ஸ் பழைய மாணவர்கள் சார்பில் கற்றலுக்கான உதவு தொகையை வழங்கினார்.