Friday, 18 August 2017

செ.சிவகுமாரன் ஞாபகார்த்த விருது

எமது விக்ரோறியாக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் அமரர் செல்லையா சிவகுமாரன் (முன்னாள் உதவி மாவட்ட சாரணர் ஆணையாளர், காங்கேசன்துறை சாரணமாவட்டம்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரிடம் கல்வி பயின்று 1994 ஆம் வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஞாபகார்த்த விருதுகள் வழங்க முன்வந்துள்ளனர். தமது ஆசிரியர் மீது கொண்டுள்ள மாறா அன்பும் மதிப்பும் இவ்விருது வழங்கலின் அடிப்படையாக உள்ளது. 
      1. சிறந்த சாரணியருக்கான விருது (Best Scout Award)
      2. சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது (Best Cricketer Award)
இவ்விருதுகள் எதிர்வரும் 05.09.2017 செவ்வாய்க்கிழமை பி.ப 3 மணிக்கு இம்மாணவர்களால் கல்லூரி அதிபரிடம் சிவபாதசுந்தரனார் கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஒன்றுகூடலின் போது கையளிக்கப்படவுள்ளன. 

   இந்நிகழ்வில் அமரர் அவர்களின் குடும்பத்தினர், கல்லூரி அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் 1994 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்



.

K






Thursday, 17 August 2017

அமரர். செல்லையா   சிவகுமாரன்(ஒய்வு நிலை பிரதி அதிபர்: விக்ரோரியாக் கல்லூரி) 
ஞாபகார்த்த விருதுகள்  கையளிக்கும்  நிகழ்வு 

அமரர்  திருவாளர்  செல்லையா   சிவகுமாரன்   ஆசிரியரின்   ஞாபகார்த்தமாக 

*சிறந்த  சாரணியத்துக்கான  விருது.(Best scout Award) 

*சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருது ( Best cricketer  Award )

ஆகிய விருதுகள் கல்லூரி   சமூகத்திடம்  கையளிக்கும்   நிகழ்வானது 

காலம் : 05/09/2017 , செவ்வாய்கிழமை 
நேரம் :  பிற்பகல் 3.00 மணி தொடக்கம்   6.00 மணி  வரை 
இடம் :  யாழ்/ விக்ரோரியாக் கல்லூரி   சுழிபுரம் 
                சிவபாதசுந்தரனார் மண்டபம்

இந் நிகழ்வுக்கு   ஆசிரியர்  அமரர்  சிவகுமாரன்   குடும்பத்தினர், கல்லூரி அதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள் , ஒய்வு நிலை  அதிபர்கள் , உப அதிபர்கள் . ஆசிரியர்கள் மற்றும் உயர்தரம்  94,95  ஆண்டு  கல்வி கற்ற  பழைய மாணவர்கள்  அனைவரையும்   அழைக்கின்றோம் .

இங்கனம்
1994 ஆண்டு உயத்தர பழைய மாணவர்கள்.

THURSDAY, 10 AUGUST 2017

Wednesday, 16 August 2017

அங்கமும் வேதமும் ஓதும்நாவர்.... தேவாரமும், பொழிப்பும்

பாடல்:

அங்கமும் வேதமும் ஓதும்நாவர்                           அந்தணர் நாளும் அடிபரவ
மங்குல்  மதிதவழ் மாடவீதி மருகல்                    நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு                          சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்                      கணபதி யீச்சரங் காமுறவே.

பொழிப்புரை

நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏனோ ? சொல்வாயாக....

Wednesday, 26 July 2017

பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா .....



பாரதி கலை மன்றத்தின் 35 வது ஆண்டு நிறைவு விழா August 5 ம், 6 ம் திகதிகளில்  சனி ,ஞாயிறு இரு தினங்கள் பாரதி முன்பள்ளி வளாக 'சுப்பையாஅரங்கில்' நடைபெறவுள்ளது .