Saturday, 17 May 2014
மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூட கணனிக்கூடம்
ஆயிரம் பாடசாலை அபிவருத்தித் திட்டத்தின் கீழ் எமது கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் அமையவுள்ள கணனிக்கூடத்திற்கான தளபாடங்களில் ஒரு தொகுதி மத்திய கல்வி அமைச்சினால் அண்மையில் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
See More Photos
See More Photos
Monday, 12 May 2014
New Principal
எமது கல்லூரியின் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய அதிபராக ருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்கள் வடமாகாணக்கல்வியமைச்சின் செயலாளரால்
நியமிக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் சோதி வேம்படி வித்தியாசாலையின் அதிபராக கடமையாற்றிய இவர் வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகக் கொண்டவர். இன்று காலை புதிய அதிபர் தனது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். சிவகாமி சமேத நடேசப் பெருமானின் விஷேட பூஜைகளில்
கலந்து கொண்ட
பின் பதில் அதிபர் திரு செ.சிவகுமாரன் அவர்களால் ஆசிரியர் மாணவர்களுக்கு புதிய
அதிபர் அறிமுகம்
செய்யப்பட்டார். தொடர்ந்து முன்னாள் அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் வாழ்த்தி
ஆசியுரையாற்றினார். புதிய
அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் உரையாற்றிய பின்
ஆசிரியர்கள் அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பூரணகும்பம்
மாலை மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்ட போது பாடசாலை அபிவிருத்திச் சங்க
நிர்வாக சபையினர் மற்றும் பழைய மாணவர் சங்க நிர்வாக சபையினர்
வருகை தந்திருந்தனர்.
Sunday, 4 May 2014
Provincial Level Sports Meet -2014
மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில்
பங்குபற்றுவதற்காக எமது கல்லூரியின் ஆறு அணிகள் இம்முறை தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இவ் வாய்ப்பு கிட்டியுள்ளது.
17 வயது ஆண்கள் கரப்பந்தாட்ட அணி
17 வயது பெண்கள் வலைப்பந்தாட்ட அணி
19 வயது பெண்கள் துடுப்பாட்ட அணி
15 வயது ஆண்கள் கரம் அணி
15 வயது பெண்கள் கரம் அணி
19 வயது ஆண்கள் சதுரங்க அணி
என்பன இவையாகும். விளையாட்டுத் துறை முதல்வர்,
பொறுப்பாசிரியர்கள், பயிற்றுநர்களின் முயற்சியால் மாணவர்கள் தமது திறன்களை
வெளிப்படுத்தி இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர். இம்மாதம் நடுப்பகுதியில் மாகாண மட்டப்
போட்டிகள் நடைபெறவுள்ளன. கரப்பந்தாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்திலும்
துடுப்பாட்டம், வலைப்பந்தாட்டம் வவுனியா மாவட்டத்திலும் கரம், சதுரங்கம் யாழ்ப்பாண
மாவட்டத்திலும் இடம்பெறும். இதில் பங்குபற்றுவதற்கான பயிற்சிகளில் மாணவர்கள்
தற்போது ஈடுபட்டுள்ளனர்.
All Island School Laboratory Competition - 2014
இலங்கையிலுள்ள பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களின்
செயற்பாடுகளை மதிப்பீடு (Evaluation of School Laboratories) செய்யும் போட்டியில்
எமது கல்லூரியின் இரசாயன ஆய்வுகூடம் மாகாண மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு தேசிய
மட்டத்திலான மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இப் போட்டியினை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான இலங்கை தராதர
அங்கீகார சபை (SriLanka Accreditation Board for Conformity Assesment)
நடாத்துகின்றது.
மாகாண மட்டத்தில் வடக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து
மூன்று ஆய்வுகூடங்கள் தெரிவாகியுள்ளன. இதில் எமது பாடசாலையின் இரசாயன ஆய்வுகூடமும்
ஒன்றாகும். சென்ற வாரம் வருகை தந்த தேசிய மட்ட மதிப்பீட்டுக் குழுவினர்
ஆய்வுகூடத்தில் மாணவர்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் பதிவேடுகள், செய்முறைப்
புத்தகங்கள் (Practical Books) போன்றவற்றையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இரசாயனவியல் ஆசிரியர்களான செல்வி.கு.தாரணி, திரு.கு.கண்ணதாசன் ஆகியோரும் ஆய்வுகூட
உதவியாளர் திரு.தா.பகீரதன் அவர்களும் இதற்கான ஒழுங்கமைப்புக்களைச் செய்திருந்தனர்.
Saturday, 3 May 2014
நாவுக்கரசர் குருபூசை தினம்
தொல்புரம் சிவபூமி முதியோர் இல்லத்தில் வருடாந்தம் திருநாவுக்கரசர் குருபூசை தினம்
எமது கல்லூரி இந்து மாணவர் மன்றத்தின் அனுசரணையுடன் கொண்டாடப்படுகின்றது. வழமை போல்
இம்முறையும் திருநாவுக்கரசர் குருபூசை சிவபூமி முதியோர் இல்லத்தில் அமைந்துள்ள
ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பமாயின. கல்லூரி ஆசிரியர்கள் திரு.தி.தவரத்தினம்,
திருமதி.ம.சுவேந்திரன் ஆகியோரின் உரையினை் தொடர்ந்து மாணவர்களின் பேச்சு, நடனம்,
பண்ணிசை, இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்துமன்றத் தலைவன்
செல்வன்.இ.நிரோஜன், மன்றப் பொறுப்பாசிரியர் திரு.இ.இராஜமுகுந்தன் ஆகியோர்
நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்திருந்தனர். ஓய்வுநிலை அதிபர் திரு.வ.ஸ்ரீகாந்தன் அவர்கள்
சிறப்புரை வழங்கினார். சிவபூமி அறக்கட்டளை செயலாளர் “விக்ரோறியன்“
திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் (கோட்டக் கல்விப் பணிப்பாளர்) நன்றியுரை கூறினார்.
முதியோர் இல்லத்தில் வாழும் பெரியோர்கள், தாய்மார்கள், சர்வோதய நிறுவனச்
சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
See More Photos
Thursday, 1 May 2014
Under 17 Netball
யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள்
சென்ற வாரம்
நெல்லியடி மத்திய கல்லூரி மைடானத்தில் நடைபெற்றன. எமது கல்லூரியின் 17வயதுப்
பிரிவினர்
இப்போட்டிகளில் கலந்து கொண்டு பிரபலமான கல்லூரிகளை வெற்றி கொண்டு இறுதிப்
போட்டிக்குள்
நுழைந்தனர். இறுதிப்போட்டி அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்துடன் நடைபெற்றது.
மிக
விறுவிறுப்பான இப்போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயம் வெற்றி பெற்றது.
மாவட்ட
மட்டத்தில் விக்ரோறியாக்கல்லூரி 2ம் இடம் பெற்று மாகாணமட்டப் போட்டிகளில்
கலந்து கொள்ளும்
தகுதி பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக 17
வயதுப் பிரிவினர் மாகாண மட்டப் போட்டியில் பங்குகொள்ளவுள்ளனர். விளையாட்டுத்துறை
முதல்வர் திரு.சி.சிவச்செல்வன், பொறுப்பாசிரியர்கள்
திருமதி.பா.சுப்பிரமணியம், திருமதி.வா.சிவலோகநாதன்,
பயிற்றுநர் “விக்ரோறியன்” கஜேந்திரன் ஆகியோர் கல்லூரி அணியினை
நெறிப்படுத்தினர்.
தமிழ்த்தினப் போட்டிகள் - 2014
சங்கானைக் கல்விக்கோட்டப் பாட சாலைகளுக்கிடையிலான இவ்வருடத்திற்கான
தமிழ்த்தினப் போட்டிகள்
தற்போது நடைபெற்றுள்ளன. ஒரு பாடசாலை ஆகக்கூடிய 25 போட்டிகளில் பங்கு
கொள்ளலாம். எமது
பாடசாலை 24 போட்டிகளில் பங்கு கொண்டது.14 போட்டிகளில் முதலாமிடத்தையும் 02
போட்டிகளில்
இரண்டாமிடத்தையும் 02 போட்டிகளில் மூன்றாமிடத்தையும் வென்று சங்கானைக்
கல்விக்கோட்ட
பாடசாலைகளில் அதிக வெற்றியைப் பெற்ற பாடசாலையாக தெரிவாகியுள்ளது. முதலாம்
இரண்டாம்
இடங்களை வென்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மே மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள
வலயமட்டப்
போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியைப்
பெற்றுள்ளன. திருமதி.பங்கயச்செல்வி யோகநாதன்
தலைமையிலான தமிழ்த்துறை கலைத்துறை சார்ந்த ஆசிரியர்கள்
தமிழ்மொழித்தினப்போட்டிகளுக்காக
மாணவர்களை
வழிப்படுத்தியிருந்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)