கல்லூரி வளாகத்தில் கனகரத்தினம் வகுப்பறை மண்டப தொகுதிக்கு முற்புறத்தில் நாவலர் நற்பணி மன்றத்தால் வழங்கப்பட்ட நாவலர்பெருமானின் அமார்ந்திருகும் சுமார் 4 அடி உயரமான சிலை நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன .சிலைக்கான பீடம் அமைக்கப்பட்டு சிலை நிறுவப்பட்ட நிலையில் மீதமுள்ள பணிகள் மேலும் சில தினகளில் நிறைவுபெறும் எதிர்பார்கபடுகின்றது. விரைவில் நடைபெறவுள்ள கல்லூரி முத்தமிழ் விழாவின்போது சிலை திறந்துவைக்கப்படவுள்ளது .
Saturday, 25 October 2014
Thursday, 16 October 2014
தங்கப்பதக்கம் பெற்ற சாதனை மாணவிக்கு வாழ்த்துக்கள்
அகில இலங்கை ரீதியில் 2014 ஆம் ஆண்டிற்கான தேசிய மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் ஈட்டி எறிதலில் எமது விக்ரோறியாக்கல்லூரி மாணவி செல்வி ரஜிதா –பாலச்சந்திரன் முதலாம் இடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவிக்கு எமது பழைய மாணவர் ஒன்றியம் மிகுந்த பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கின்றது.
எமது கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக மாணவி ரஜிதா அவர்கள் பெற்றுத்தந்த இந்தப் புகழ் வரலாற்று ஏட்டில் பதியப்பட வேண்டிய நிகழ்வாகவும், இம் மாணவி கல்லூரியின் சகல விளையாட்டு துறைகளிலும் பங்கு கொண்டு வீராங்கனையாக திகழ்ந்து வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதையிட்டு எமது ஒன்றியம் பெருமை கொள்கின்றது
மாணவி ரஜிதா –பாலச்சந்திரன் அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கல்லூரிச் சமூகம், அதிபர், ஆசிரியர்கள், மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் குறிப்பாக எமது கல்லூரி மாணவர்களின் வெற்றிக்காக அயராது பாடுபட்டு வரும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் விக்ரோறியன் திரு .சிவரூபன் அவர்களுக்கும் யுகே பழைய மாணவர் ஒன்றியம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
மேலும் பல மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு சென்று பல விருதுகளைப் பெற வேண்டும். அதற்கு எமது ஒன்றியம் என்றும் உறுதுணையாக இருக்கும்.
நன்றி.
யுகே பழைய மாணவர் ஒன்றியம்
See Photos
Thursday, 25 September 2014
சுழிபுரம், திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது:-
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில் சுழிபுரம், திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் சுழிபுரம் , திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சருடன் குறித்த பாடசாலைக்குச்சென்று, பாடசாலையின் நிலைமைகளை அவதானித்த உறுப்பினர், முதற்கட்டமாக தமது நண்பரான சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் ரூ.50,000 பெறுமதியான உதவிகளை வழங்கி வைத்தார்.
அண்மையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரூ.30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களும், மாணவர்களின் காலை உணவுக்கான நிதியுதவியாக ரூ.20,000 வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன், உதவியை வழங்கிய முரளீதரன், வலி.மேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை கோட்டக்கல்விப்பணிப்பாளர், மாணவர்கள் மற்ரும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் ஏற்பாட்டில், சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் சுழிபுரம் , திருவடிநிலை சைவத்தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு அண்மையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சருடன் குறித்த பாடசாலைக்குச்சென்று, பாடசாலையின் நிலைமைகளை அவதானித்த உறுப்பினர், முதற்கட்டமாக தமது நண்பரான சுவிஸ் நாட்டைச்சேர்ந்த முரளீதரனின் உதவியுடன் ரூ.50,000 பெறுமதியான உதவிகளை வழங்கி வைத்தார்.
அண்மையில் பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ரூ.30,000 பெறுமதியான கற்றல் உபகரணங்களும், மாணவர்களின் காலை உணவுக்கான நிதியுதவியாக ரூ.20,000 வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாகாணசபை உறுப்பினருடன், உதவியை வழங்கிய முரளீதரன், வலி.மேற்கு பிரதேச சபைத்தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், சங்கானை கோட்டக்கல்விப்பணிப்பாளர், மாணவர்கள் மற்ரும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Tuesday, 16 September 2014
மணிவிழா-மலர் வெளியீடு
விக்டோரியா கல்லூரியின் பழைய மாணவனும் ஆசிரியரும் அதிபருமாக பணியாற்றி 10-03-2014 இல் ஒய்வு பெற்ற அதிபர் பிரம்மஸ்ரீ வரதராஜா ஸ்ரீகாந்தன் அவர்களின் மணி விழா மலர் வெளியீட்டு நிகழ்வு 14-09-2014 அன்று ஞாயிறு பி.பகல் 2: 45 மணியளவில் விழா நாயகனையும் அவர் தம் பாரியரையும் கல்லூரியின் அலுவலக முன்றலில் இருந்து பாண்ட் வாத்திய அணி வகுப்புடன் விருந்தினர்கள் குடும்பத்தினர் கல்வி சமூகத்தினர் ஆசிரியர்கள் கல்வி சேவை செய்தவர்கள் மாணவர்கள் பெற்றார்கள் என பலரும் புடை சூழ வெளியீட்டு விழா மண்டபமான ரிட்ஜவே மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு வாயில் மங்கள விளக்கேற்றபட்டு சபையோரின் கர கோஷத்துடன் விழா மண்டபத்திற்குள் பிரவேசிக்க மங்கள விளக்கேற்றல் ஆரம்பமாகியது.
சிவஸ்ரீ . சபா. வாசுதேவ குருக்களினை தொடர்ந்து வண. பிதா. ஜேசுதாஸ் அடிகளார், திரு .ஆ .ராஜேந்திரன் , திரு ச .சிவனேஸ்வரன் பேராசிரியர் தேவராஜா, திருமதி.அ. வேலுபிள்ளை, நூலகர் விஜயகுமாரினை அடுத்து நாயகனின் தீபமேற்றலுடன் திருமதி.ப.முகுந்தன் அவர்களின் இறை வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமகின.
சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி பழைய மாணவர் சங்க - கலை நேரம் 2014 (Australi OSA News)
சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவ சங்க மெல்பேன் கிளையின் கலை நேரம் என்னும் நிகழ்வு கடந்த 14/09/2014 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு ரோவில் உயர் கல்லுரி மண்டபத்தில் நடைபெற்றது.மங்களவிளக்கை கலை ஆசிரியர்கள்ளான திரு ரவி ரவிச்சந்திரா திருமதி மீனா இளங்குமரன்,திரு அகிலன் சிவானந்தன் மற்றும் பழைய மாணவனாகிய திரு அமுதலிங்கம் அவர்கள் ஏற்றி வைத்து விழாவை ஆரம்பித்து வைத்தார்கள்.வரவேற்புரை திருமதி உமாரூபன் ஆற்றினார்.முதலில் திரு ரவி ரவிச்சந்திரா அவர்களின் நெரியாக்கையில் தாளவாத்தியமும்,அடுத்து மீனா இளங்குமரனின் நடனாலையா பாடசாலை மாணவர்களின் பரதநாட்டியமும் அதனை தொடர்ந்து திரு அகிலன் சிவானந்தன் அவர்கள் தனது இசை வேள்வியை மேல்நாட்டு வாத்தியங்களுடன் வித்தியாசமான இசை நிகழ்வை நடத்தினார்.இறுதியில் ருக்சிகா இளங்குமரன் இந்நிகழ்வு எதற்கு நடக்கின்றது என்பதை தனது நடனம் மூலம் வந்த மக்களுக்கு விளக்கம் அளித்தார்.கல்லூரியின் பழைய மாணவர்களான திரு ராஜேந்திரம்,திரு ஸ்ரீகுமார் ,திருமதிகள் உசா கொவ்ரிஷ்வரன் ,ரோகினி திருநீலகண்டன் ,ரதி குமார் தேவி ராஜேந்திரம் ஆகியோர் ஆசிரியர்கள்,மாணவர்களை விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள்.திருமதி தேவி ராஜேந்திரம் அவர்களின் நன்றி உறையுடன் கலை நேர நிகழ்வு நிறைவு பெற்றது.
See Photos
You tube Video
See Photos
You tube Video
Tuesday, 9 September 2014
Thursday, 7 August 2014
Founder's heirs visit to our school
எமது கல்லூரியின் நிறுவுனர் வழித்தோன்றல்களான திருமதி.சந்திரா சாம்பசிவம், திரு.சா.ஸ்கந்தகுமார் குடும்பம் சென்ற தவணை நிறைவு நாளில் கல்லூரிக்கு வருகை தந்தனர். தமது பேரனார் மனேஜர் செல்லப்பா அவர்களின் சிலைக்கு மலரஞ்சலி செலுத்திய இவர்கள் கல்லூரியைச் சுற்றிப் பார்வையிட்டனர்.
தாம் சில வருடங்களுக்கு முன் வருகை தந்நத போது இருந்ததை விட கல்லூரி மிகவும் துரிதமாக வளர்ச்சியடைந்திருப்பதையும் பௌதிக வளங்கள் அதிகரித்திருப்பதையும் 400m ஓடுபாதை கொண்ட மைதானம், புதிய கட்டிடங்கள் போன்றவற்றையும் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். தமது மூதாதையர்களால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று பெருமளவு அபிவிருத்தி கண்டிருப்பதை மனதாரப் பாராட்டினார்கள்.
புதிய தேநீர்ச்சாலை அமைப்பதற்காக நிறுவுனர் வழித்தோன்றல்கள் பத்து லட்சம் ரூபாவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேநீர்ச் சாலையையும் பார்வையிட்டு திருப்திப்பட்டனர்.
Subscribe to:
Posts (Atom)